” பண்ணலாம் ” என்று சிரித்தாள் ”மெதுவா..! எங்கள விட வயசுல பெரியவங்க நீங்களே இன்னும் பண்ணிக்கலை. எங்களுக்கு மட்டும் என்ன அவசரம்னு வேண்டாமா..?”
” பசங்க நாங்க எப்ப வேணா பண்ணலாம்.? பொண்ணுக அப்படி பண்ண முடியுமா..? அதது காலா காலத்துல பண்ணிடனும்..!”
” ம்.. நல்ல ஆள் கிடைச்சா பண்ணிடறதுதான்.” எனச் சன்னமாகச் சொல்லி விட்டுக் கேட்டாள். ”நீங்க யாருக்காவது வெய்ட் பண்ணிட்டு இருக்கிங்களா..?”
” ஆமா.. உங்கண்ணனுக்காக..” என்றான்.
” ஆஹ்ஹ்..” எனச் சிரித்தாள். சுவற்றில் உந்தி முன்னால் வந்து பின்னால் போனாள். அவள் பிருஷ்டங்களை சுவற்றில் அழுத்தினாள்.
”இந்த வெய்ட்டிங் இல்ல.. மேரேஜ்க்கு.. யாருக்காவது வெய்ட் பண்றிங்களானு கேட்டேன். ”
” ச்ச.. அப்படி எல்லாம் இல்லை. வெய்ட் பண்ற அளவுக்கு நமக்கு யாரு இருக்கா.?”
” ஏன் இல்லை ? கவி இருக்கா இல்ல.? முறைப் பொண்ணு. கவி இல்லேன்னா அவ தங்கச்சி அமுதா..?”
” ஏய்.. அமுதால்லாம் ரொம்ப சின்ன பொண்ணுப்பா..!”
” சரி. கவி.. ?”
” அதெல்லாம் எதுவும் இல்ல..! அப்படி ஒரு ஐடியாவே இல்ல. ”
” ஏன்.. அவ லீனா இருக்கான்னா..?”
” சே..ச்சே.. அதெல்லாம் இல்ல திவ்யா..”
” சரி.. சரி.. கோவிச்சுக்காதிங்க. சும்மாதான் கேட்டேன். என்ன சொல்றீங்கனு பாக்கலாம்னு..”
” அவள்ளாம் இன்னும் விளையாட்டு புள்ளை.. திவ்யா. !!”
” ஆமா.. நல்லா சொன்னீங்க. இப்பல்லாம் சிக்ஸ்த் படிக்கறப்பவே.. விளையாட்டு புத்தி மாறிப் போகுது. இவ காலேஜ் போறா..? நீங்க எதுவும் நினைச்சுக்காதிங்க. நான் சும்மாதான் சொன்னேன்..” என்றாள்.
” ம்.. ” டிவியைப் பார்த்தான்.
” ஓகே.. அப்பறம்..” என மீண்டும் எதற்கோ அடிப் போட்டாள்.
” அப்பறம்..?”
” லவ்வு.. கிவ்வு ஏதாவது.. ?”
” யாரு.. நானா..?”
” ம் .”
” ஹாஹா.. அதெல்லாம் எதுவுமில்லேனு.. சொன்னேனா இல்லையா.?” என்றுவிட்டு சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான் நவநீதன்.
” அப்பறம்…நீ எப்படி.? லவ்வு… கிவ்வு…னு.. ஏதாவது….?”
அவள் முகத்தில் திடுமென ஒரு பிரகாசம். கண்களில் ஒரு மின்னல் கீற்று. உதடுகள் மலரச் சிரித்தவள் மெதுவாக முனகினாள்.
” இதுவர இல்ல…”
திவ்யாவை ஒரு நொடி உற்றுப் பார்த்தான் நவநீதன். அவள் முகத் தோற்றத்துக்கும் அவள் வார்த்தைக்கும் தொடர்பில்லாததைப் போல தெரிந்தது.! பிரேமைப் பற்றிக் கேட்க வாய் துடித்தது. ஆனால் அவளே ‘இதுவர இல்ல’ என்கிறாள். இப்போது போய் அதைக் கேட்டால் அவளது மனநிலை கெட்டு விடும்.
பேச்சை மாற்றும் நோக்கில்..
” பிரமி.?” என்று கேட்டான்.
” அவ லெவல் எல்லாம் வேற..” எனச் சிரித்தாள்.
” அப்படி என்ன லெவல் அவளுது..?”
” அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு.? விடுங்க..? அவ எல்லாம் பல லவ் பாத்தவ..!”
” ஓ.. ”
” சரி.. அப்ப உனக்கு யாரும் கிடைக்கலியா ?”
” ஆஹா..! கண்ண காட்னா எத்தனை பேர் வேணும்.? ஆனா.. அதெல்லாம் காதல் ஆகுமா.? நமக்கே நமக்குனு ஒருத்தரை நம்ம மனசுக்கு புடிக்கும். அதுதான் காதல்.. !!” என்றாள் திவ்யா.
” அஹ்ஹடா.. !!!” எனக் கை தட்டிச் சிரித்தான் நவநீதன். ”பின்ற போ..!”
அதேநேரம் அவன் மொபைல் அழைத்தது. எடுத்துப் பார்த்தான். பிரேம் அழைத்திருந்தான்.!!
ஆன் செய்தான்.
” ஹலோ. ?”
” நவநி.. எங்கடா இருக்க? ”
” இங்கதான்டா.. ஏன்..?”
” வீட்லயா ?”
” ஆமா.. ”
” ப்ரீயா இருந்தேன்னா வாடா..”
” எங்க வரது..?”
” காட்டுக்குத்தான். நம்ம பிய்ய மரக் காட்டுக்கு..”
”ம் வரேன். ” என்றான்.
” சீக்கிரம் வா.” எனக் கட் பண்ணினான் பிரேம்.
” யாரு ?” திவ்யா கேட்டாள்.
” பிரேம் ” என்றான்.
சட்டென அவள் முகம் மாறியது.
”என்னவாம் ?”
” காட்டுக்குள்ள இருக்கானாம். சும்மா கூப்பிடறான்.! சரி திவ்யா நான் போறேன். அன்புக்கு போன் பண்ணி பேசிக்கறேன்.! நீ நல்லா சாப்பிட்டு.. தூங்கு..!” என எழுந்தான் நவநீதன்.
அவனிடம் அவள் இன்னும் பேசவேண்டியது பாக்கி இருப்பதைப் போலத் தோன்றியது. அதை மறைத்துக் கொண்டு
”ம்.. ” என முனகினாள். ”பசங்க கூடல்லாம் கொஞ்சம் அளாவவே வெச்சுகுங்க..!! நம்ம ஊர் பசங்க அவ்ளோ நல்லவங்க.. !”
” ஓகே. ஓகே. . தேங்க்ஸ்..! பை.. பை..!” என டாடா காட்டிவிட்டு அவள் வீட்டில் இருந்து கிளம்பினான் நவநீதன்.!!!
பிய்ய மரக் காட்டில்.. கள்ளி மரத்தடியில் பிரேமுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான் அன்பு. அவர்களுக்கு முன்பாக பிராண்டி, பீர், வோட்கா என மூன்று வகையான சரக்குகளும் அதற்கு தேவையான சைடிஸ்ட்டுகளும் இருந்தது.
“என்னடா இது?” என்று லேசான வியப்புடன் கேட்டான் நவநீதன்.
“ஏன்.. இது என்னன்னு தெரியாதாக்கும் ?” என்று நெக்கலாகச் சிரித்தபடி கேட்டான் அன்பு.
பிரேம் “இது டென்ஷன் ப்ரீ மச்சான். உக்காரு” என்றான்.
நவநீதன் சுற்றிலும் பார்த்து விட்டு கீழே உட்கார்ந்தான்.
“வோட்கா யாருக்கு? ”
பிரேமைக் கை காட்டினான் அன்பு.
“மாப்ளைக்கு”
“பீர் பிராண்டினு எதைக் குடிச்சாலும் தலைவலி வருதுடா. ஆனா இந்த சரக்கை குடிச்சா ஒரு பிரச்சினையும் வரதில்ல. அதான் இப்ப இதை மெய்ண்டென் பண்ணிட்டிருக்கேன்”
“மப்பு ஏறுமா?”
“மத்த சரக்கு மாதிரிதான். நல்லா ஏறும்.. என்ன அதெல்லாம் கலரா இருக்கு. இது வெள்ளையா தண்ணி மாதிரி இருக்கு”
அன்பு.. “நீ சரக்கா? பீராடா?” என்று நவநீதனைக் கேட்டான்.
“எனக்கு பீருடா” என்றான் “ஆமா இதை யாருக்கு வாங்கினே?”
“உனக்குத்தான். நீதான் அதிகமா சரக்கடிக்க மாட்டியே..”
மெல்லப் புன்னகைத்தான்.
“புடிக்காதுனு இல்ல..”
அவன் சரக்கடிப்பது கிருத்திகாவுக்குப் பிடிக்காது என்பதால் பீர் குடித்துப் பழகினான். அதுவும் அவளுக்குத் தெரியாமல்தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போதும் அவளுக்கு பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அவள் எங்கோ இருக்கிறாள். இனி அவளுக்காக எதையும் மாற்றிக் கொள்ள வேண்டியதும் இல்லை. மறுபடியும் பிராண்டியே குடிக்கலாம். பரவாயில்லை. இப்போதைக்கு இந்த பீர் போதுமானது.
சூரியன் மேற்கில் மறைந்திருந்தான். ஆனால் இன்னும் இருட்டாகவில்லை. பாட்டில் மூடிகள் திறக்கப்பட்டன. டம்ளரிகளில் வார்க்கப்பட்ட சரக்கு அவரவர் வயிற்றுக்குள் அமிலம்போல இறங்கி அவர்களின் ரத்த நாளங்களில் சுறுசுறுப்பை உண்டாக்கியது. சரக்கு உள்ளே செல்லச் செல்ல அவர்கள் பேச்சின் வேகம் கூடியது. பாட்டில்கள் காலியாகும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நன்றாக போதை ஏறிய பின்னர் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தான் பிரேம்.
“மச்சா.. எங்கக்காளை நீ லவ் பண்றியாடா?” என்று அன்புவைப் பார்த்துக் கேட்டான் பிரேம்.
அதற்கு என்ன பதில் சொல்வதெனப் புரியாமல் தடுமாறினான் அன்பு.
சூழ்நிலையை உணர்ந்த நவநீதன் சட்டெனக் கேட்டான்.
ரொம்ப மொக்கை கதை. Please stop it.