” ஏன்..?” என அவளை பார்த்துக் கேட்டான்.
” நாளைக்குன்னா.. எனக்கும் காலேஜ் லீவு.. நானும் உன்கூட வரலாம்னு நினைச்சேன்..” என்றாள்.
” என்கூட வரியா ?”
” ம்.. வரேன்.”
” சரி.. போலாம்..” என்று விட்டு எழுந்தான். ”இப்ப போய் மொதல்ல ட்ரஸ் சேஞ்ச் பண்ணு. நான் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன்..!!” எனச் சொல்லிவிட்டு அன்புவின் வீட்டை இலக்காக வைத்து நடந்தான்..!!! .
அன்புவின் வீட்டுக்கு போனான் நவநீதன். அவன் தங்கை திவ்யாவும்.. அவள் தோழி பிரமிளாவும் வீட்டுக்குள் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.
நவநீதனைப் பார்த்த பிரமிளா.
” அட…வாங்க சார்.. ஹீரோ சார்.” என கிண்டலாகச் சிரித்து வரவேற்றாள்.
”ஊருக்கு வந்துருக்கிங்கனு கேள்விப் பட்டேன். பாக்கவே முடியல..”
” யாரு நாங்க ஹீரோவா..?” நவநீதன் கேட்டுக் கொண்டே உள்ளே போய் சோபாவில் உட்கார்ந்தான்.
”உங்கள பாத்தாதான் ஹீரோயின் மாதிரி தெரியுது..”
” ஆஹா.! தேங்க் யூ.. தேங்க் யூ..! எங்களையும் பாத்து ஹீரோயின்னு சொல்லவும் ஒரு ஆள் இருக்கறதுல எங்களுக்கு ரொம்ப சந்தோசம்..!! அப்பறம் எப்படி இருக்கிங்க.. ?”
” இருக்கேன்..!! ஏதோ உங்கள மாதிரி நல்லவங்க புண்ணியத்துல.. இந்த நாட்ல நாங்களும் கொஞ்சம் இருக்கோம்னு.. ” என அவன் சிரித்தபடி சொன்னான்.
” ஆஆஆ.. திவ்யா இதை பாருடி கொஞ்சம். என் முடி எல்லாம் எப்படி சிலித்துக்குச்சினு பாரு.. !!! புல்லரிச்சு போச்சு..!!!” என்று தன் தோழியிடம் கைகளை நீட்டிக் காட்டினாள் பிரமிளா.
மூவரும் சிரித்த பின் திவ்யாவை கேட்டான் நவநீதன்.
” அன்பு இன்னும் வரலையா..?”
”வரலை..!! காபி வெக்கட்டுமா ?”
”இல்ல அதெல்லாம் வேண்டாம். அப்ப நான் போகட்டுமா..?”
” அலோ என்ன.. வந்ததும் ஓடறீங்க..? இருங்க.. எவ்வளவு பேச வேண்டியிருக்கு..” என்றாள் பிரமிளா.
” இல்ல நீங்க ரெண்டு பேரும் ஏதாவது பர்ஷ்னலா பேசிகிட்டிருக்கலாம்.. இதுல நான் எதுக்கு நடுல நந்தி மாதிரி…”
” நீங்க நந்தி இல்ல.. உங்காருங்க..!! ஊருக்குள்ள திடீர்னு வரீங்க.. திடீர்னு போறிங்க.. ஒரு ஹீரோ மாதிரி.. பாக்கவே முடியறதில்ல..”
திவ்யா. ”சாரு இனி போக மாட்டாரு. இங்கதான் ”
” என்னாச்சு ஹீரோ சார்.. வேலை இல்லையா..?”
” போதும் பிரமி.. இந்த ஈரோ சார் போட்டா.. அப்பறம் நான் உன் பேச்சு கா விட்றுவேன்.”
” சரி.. சரி.. ஈரோ சார் இல்ல.. !! சொல்லுங்க என்னாச்சு..?”
” வேலை டல்லாகிருச்சு . அதான் வந்துட்டேன்.”
வேலை பற்றின பேச்சு கொஞ்ச நேரம் ஓடியது..!!
பிரமிளா.. திவ்யா அளவுக்கு அழகி இல்லை. சுமார்தான்.!
அதற்காக திவ்யா பிரமாத அழகி என்று எண்ணிவிட வேண்டாம். மாநிறத்தில்… அளவான அங்க அமைப்புகளுடன்.. நல்ல முக லட்சணத்துடன் பெண்மைக்கே உரிய நளினத்துடன் இருப்பவள்தான் திவ்யா.!!!
ஆனால் பிரமிளா அப்படி இல்லை. கொஞ்சம் கருப்பு. கொஞ்சம் பொசுபொசுவென உடம்பு. தடித்த உதடுகள். குண்டு மூக்கு.. என லட்சணமா.. இல்லை அவலட்சணமா என சட்டென கணிக்க முடியாத நிலையில் இருந்தாள். அது இல்லாமல் அவள் கொஞ்சம் வழியும் டைப் என்பதால்.. திவ்யா அளவுக்கு பிரமிளா நல்ல பெயர் எடுக்கவில்லை..!!!
அழகான கதை அடுத்த பகுதி please