அமுதா ”யாரு இவளா.. விட்டா ஒரு சட்டி சோறு திம்பா..” எனச் சிரித்தாள்.
” ஆமா நான் மட்டும்தான் திம்பேன். இவ தொட்டு மட்டும்தான் பாப்பா.. ? உனக்கு ஏன்டி பொறாமை எங்கப்பா சாம்பாரிச்சு போடுது.. நான் திங்கறேன்.” கவிதா.!
நவநீதன்.. அமுதாவைப் பார்த்துக் கேட்டான்.
” ஆனா இவள பாத்தா.. நீ சொல்ற மாதிரி திங்கற ரகமா தெரியலியே அம்மு ” கவிதாவை தட்டி ” திங்கறதெல்லாம் எங்கதான் போகுது..? கொஞ்சமாவது உடம்பு தேத்திருக்க வேண்டாமா..?” என்றான்.
” க்கும்.. அவ வெந்து போனவ. அதுக்கெல்லாம் என்னை மாதிரி நல்ல மனசு வேணும். ” எனச் சிரித்தாள் அமுதா.
” அய்யோ… ரொம்ப நல்ல மனசு.. மூஞ்சிய பாரு..” கவிதா.
” பின்ன என்னவாம்.. நாங்கள்ளாம் சொக்க தங்கம்.. ”
” நாங்க வைரம்.. ”
” தெரியுதே.. கருகருனு.. வைரம்..”
” போடீ நீதான் கருப்பி.. குண்டு பன்னி..”
” நீதான்டி எழும்பி.. பீனி.. ”
இப்படி அக்கா தங்கை இரண்டு பேரும் வீம்புக்கு முட்டிக் கொள்ள நவநீதன் அவர்கள் இரண்டு பேரையும் அடக்கினான்.
” ஏய் போதும் விடுங்க.. என்ன இது சண்டை போட்டுகிட்டு..?”
அமுதா. ”பாரு மாமா.. அவதான் என்னை திட்னா..”
” யாரு நானா.. நீதான்டி என்னை வம்பிக்கிழுத்த..” கவிதா.
” ஏ.. மொதல்ல என் தலைல கொட்னது யாரு..?”
கவிதா தன் தங்கையை முறைத்தாள்.
” ஏய்.. என்ன பழக்கம் இது.. அக்காளும் தங்கச்சியும் இப்படி மொறைஞ்சுகிட்டு.. இன்னொரு தடவை ரெண்டு பேரும் சண்டை போடறதை பாத்தேன்.. ரெண்டு பேருக்கும் ஒதை கிடைக்கும் சொல்லிட்டேன். போய் கிளம்புங்க ரெண்டு பேரும்…!!!” என இருவரையும் அடக்கி.. அனுப்பி வைத்தான் நவநீதன்..!!!
மாலை நேரம்.!!! ஊரில் இருந்து அண்ணன் வந்திருந்தான்.!!! திருமணமானவன். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அண்ணி செய்த பிடிவாதத்தால் அவள் ஊரிலேயே போய் செட்டிலாகி விட்டான்.!!! பதினைந்து கிலோ மீட்டர் தொலைவு தள்ளி இருக்கிறது அண்ணியின் ஊர்.!!!
நலன் விசாரிப்புகள் முடிந்து அண்ணனைக் கேட்டான் நவநீதன்.
”அண்ணி குழந்தைங்கள எல்லாம் கூட்டிட்டு வந்துருக்கலாம் இல்ல?”
” நான் வேலைக்கு போய்ட்டு இப்படியே வரேன்டா. நீ வேணா வா போகலாம்.” என அழைத்தான் அண்ணன்.
” ம்.. நாளைக்கு வரேன் ”
” உங்கண்ணி உன்னை வரச் சொன்னாடா..”
” சரி நாளைக்கு வரேனு சொல்லு..”
” அப்றம் அத்தைங்கள்ளாம் நல்லாருக்காங்களா ? கிருத்திகுட்டி என்ன பண்றா..? வேலைக்கு போறாளா ? அவளுக்கு மாப்பிள்ளை ஏதாவது பாக்கறாங்களாமா ? கம்பெனி எல்லாம் ஓடுதா ? அப்பறம் இனிமே நீ இங்கதான் இருக்க போறியா ? சரி இரு. என்ன பண்ணலாம்னு இருக்கே..?” என நிறையக் கேள்விகளை கேட்டான் அண்ணன்.
அவன் கேள்விகள் அனைத்திற்கும் பொருமையாக பதில் சொன்னான் நவநீதன்.!!!
ஒரு வழியாக பேசி முடித்து..
”சரி.. நாளைக்கு மறக்காம கண்டிஷனா வாடா.” எனச் சொல்லி விட்டு.. இருட்டுவதற்கு முன் தன் டிவிஎஸ்ஸில் கிளம்பிப் போனான் அண்ணன்..!!!
அண்ணன் போனதும் திண்ணை மேல் அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கவிதா சிரித்தபடி சொன்னாள்.
” எங்க.. நீ இப்பயே போய்ருவியோனு நினைச்சேன்.”
காலேஜ் விட்டு வந்து உடைகூட மாற்றாமல் இருந்தாள் கவிதா. முகமும் கழுவாமல் லேசான வியர்வை வழியும் முகத்துடன் இருந்தாள்.
அழகான கதை அடுத்த பகுதி please