”ஏன்டி.. ?”
சிரித்தாள். ” சும்மாதான் கேட்டேன். ”
” அன்புகிட்ட சொல்லியிருக்கேன். அவன் கூடத்தான் போவேன்.”
” திருப்பூருக்கு போக மாட்டியா ? பனியன் கம்பெனிக்கு..?”
” ம்கூம். . ”
” அச்சச்சோ.. ” என்றாள்.
” ஏன்டி.. இதுல உனக்கு என்ன பிரச்சனை? ”
” அப்பன்னா இனி நான் ஜட்டி சிம்மீஸ்க்கு எல்லாம் என்ன பண்றது..?” என அவள் கேட்க.. அவனுக்கு முதலில் குழப்பமாகத்தான் இருந்தது.
” என்ன.. ?”
” ஜட்டி.. சிம்மீஸு..? எல்லாம் நீதான கொண்டு வந்து குடுப்ப..? இனி எல்லாம் காசு போட்டுத்தான் வாங்கிக்கனுமா.? என்னோடது எல்லாமே பழசாகிப் போச்சு.. ”என அவள் அப்பாவியாகச் சொல்ல… பொங்கி வந்த சிரிப்பை அவனால் அடக்க முடியவில்லை.
” ஹ்ஹா.. ஹா !!” என வாய் விட்டு சத்தமாகச் சிரித்தான்.
”ஏய்.. லூசு..”
” ம்.. என்ன”
” ஏன்டி இன்னும் நீ சின்ன புள்ளைனு நெனப்பா ?”
” ஏன்.. ?” அதே அப்பாவித் தனத்துடன் கேட்டாள்.
” ஜட்டி சிம்மீஸ்னெல்லாம் என்கிட்ட கேக்கற..?”
” அப்பறம். நீ தான வரப்ப எல்லாம் எங்களுக்கு கொண்டு வருவ..?”
” அடி லூசு.. அது சரி. ஆனா இனிமே நீ கடைலதான் வாங்கிக்கனும். சரியா. ? அத விட்டுட்டு இப்படியெல்லாம் ஒரு பொட்ட புள்ள பேசக் கூடாது. !”
” வேற எப்படி பேசறது..? அதுலாம் எனக்கு வேணுந்தான..?”
” ம்.. வேணுந்தான். அத உங்கம்மாகிட்ட கேளு. ”
” ஏன் உன்கிட்ட கேக்க கூடாதா..?”
” ம்கூம். கேக்க கூடாது.”
” ஏன் கேக்க கூடாது.? கேட்டா நீ வாங்கித்தர மாட்டியா..?”
அவன் சொல்வது அவளுக்கு புரியவில்லை என்பது நன்றாகப் புரிந்தது. அவள் மண்டை மேல் கொட்ட வேண்டும் போல் இருந்தது.
” நான் வாங்கி தரனோ இல்லையோ.. ஆனா இனி நீ டிசண்டா பேச கத்துக்கனும். பசங்ககிட்ட இப்படி ஜட்டி பிரானெல்லாம் பேசிட்டு இருக்க கூடாது”
” நான் பிரானு சொல்லவே இல்ல. சிம்மீஸ்தான் சொன்னேன் ” எனச் சிரித்தாள். ” அது எனக்கும் தெரியும். நான் ஒண்ணும் பசங்ககிட்ட பேசல.. உன்கிட்டதான் பேசினேன்.” என்றாள் கவிதா.. !!
அழகான கதை அடுத்த பகுதி please