” ஆமா.. !!” பாயை விரித்து ஒரு தலையணை.. ஒரு போர்வையை எடுத்துப் போட்டாள். கவிதா வந்த சத்தத்தில் விழித்துக் கொண்ட நவநீதனின் அம்மா எழுந்து உள்ளே வந்து அவன் சாப்பிடுவதைப் பார்த்தாள்.
‘என்னை எழுப்பிருக்கலாமில்ல? ‘ என்பதை ஜாடையில் கேட்டாள்.
” பரவால்ல நீ போய் தூங்கு. நான் சாப்பிட்டு கழுவி வெச்சர்றேன்..” என்றான்.
கவிதா. ”நீ போய் தூங்குத்த. நான் பாத்துக்கறேன் ” என்றவள் அவனிடம் சொன்னாள். ”நான் சொல்றது பொய்யின்னா அத்தைய வேணா கேட்டுப் பாரு. இந்த ஒரு வருசமா.. நான் இங்கதான் நைட்ல வந்து படுப்பேன். தூங்கறவரை டிவி பாத்துட்டு.. படிக்கறதா இருந்தாக்கூட இங்கயே படிச்சிட்டு அப்படியே தூங்கிருவேன். இல்லத்த.. ?”
அவள் சொல்வதை புரிந்து கொண்டு அவன் அம்மா ஆமோதித்துச் சிரித்தாள். அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை அவன் அம்மா போகவில்லை. அவனை கவனித்து அவன் கை கழுவிய பின்தான் போனாள். அவன் அம்மா போய் மீண்டும் திண்ணையில் படுத்துக்கொள்ள.. கவிதா பாயில் படுத்து போர்வைக்குள் மறைந்து கொண்டாள். முகத்தை மட்டும் வெளியே வைத்து டிவியைப் பார்த்தாள்.!
நவநீதனும் படுத்தபடி டிவியை பார்த்தான்.!!!
” ஆ.. எங்க காலேஜ்ல டூர் போறாங்க..” என திடுமெனச் சொன்னாள் கவிதா.
” எப்ப. ?”
” இன்னும் ரெண்டு வாரம் இருக்கு..”
” எந்த ஊரு.. ?”
” மைசூரு.. பெங்களூரு.. இன்னும் நிறைய ஊரு சொன்னாங்க. ”
” நீயும் போறியா ?”
” ஆசைதான்.. ஆனா போகல..”
” ஏன் ?”
” சும்மா போக முடியுமா.. ?”
” என்னடி சொல்ற.. ?”
” ஆமா.. எனக்குலாம் போக ரொம்ப ஆசைதான்.ஆனா அப்பா அம்மாதான் போக வேண்டாம்கிறாங்க..”
” ஏன்..?”
” தெரியல. சொன்னா திட்டுது என்னை.”
” காசில்லையோ என்னமோ..?”
” ஆ.. போ. !! அதெல்லாம் நிறைய காசு வெச்சிருக்காங்க..”
” அப்பறம் என்ன காலேஜ் டூர்தான போனா என்ன? உனக்கு ஆசை இருக்கில்ல..?”
” ரொம்ப ஆசையா இருக்கு..”
” சரி.. மாமாகிட்ட நான் பேசிப் பாக்கறேன்..!” என்றான்.
டிவி ஓடிக் கொண்டிருந்தது. நவநீதன் டிவியில் கவனமானான். கொஞ்ச நேரம் கழித்து அவனைப் பார்த்து திடுமெனக் கேட்டாள் கவிதா.
” நீ வேலைக்கு போக மாட்டியா மாமா? ”
நவநீதன் அவளைப் பார்த்தான். அவள் முகம் மட்டும் தெரிந்தது.
அழகான கதை அடுத்த பகுதி please