” ம். அப்பறம்.. ?”
மழுப்பலாகச் சிரித்தான்.
”அது… ஒரு மாதிரிடா…”
” மாதிரின்னா…?”
” என்னடா இப்படி ஒண்ணுமே தெரியாதவனா இருக்க.. ? அது.. ஒரு மாதிரி… லவ்வெல்லாம் இல்லடா…”
” ஹா.. அப்பறம்.. ?”
” அவளுக்கு ரொம்ப முத்திப் போச்சு..”
”என்னடா. ?”
” மாங்காதான்..!!! அந்த முத்திப் போன மாங்காவ.. சப்பவும் ஒரு ஆள் வேணுமில்ல.. ?” என அன்பு சொன்னதை விட… அதை அவன் சொன்ன விதமும்.. அப்போது அவன் உதட்டில் தெரிந்த இகழ்ச்சியான சிரிப்பும் நவநீதனை மிகவும் பாதித்தது.
ரேவதியை அவ்வளவு கேவலமாக அவனால் நினைக்க முடியவில்லை. கொஞ்சம் வயது கூடி விட்டதுதான்.. அதற்காக அவள் ஒன்றும் அரிப்பு எடுத்து அலைபவள் இலலையே..!!!
”ச்ச.. பாவன்டா.. அதப் போய் அப்படி எல்லாம் சொல்லாதடா.. ” என்றான் நவநீதன்.
” வேற எப்படிடா சொல்றது.? கல்யாண ஆசை. ? சரி.. அப்படியே சொல்றேன். அவளுக்கு முத்திதான்டா போச்சு.. கல்யாண ஆசை.. ! அதை ஆசைங்கறதை விட.. வயசோட தேவைனு சொல்லலான்டா.. ”
” என்னடா… நீ… ?”
” இத பார் நண்பா.. இதெல்லாம் கண்டுக்காத விடு..?” எனக் கண்ணடித்தான் அன்பு. ”ஏதோ அவளுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைச்சு கல்யாணம் ஆகறவரைக்கும்.. அப்படியே ஓட்ட வேண்டியதுதான். ஆனா நானா எதுவும் பண்ணலடா.. அவதான் டார்ச்சர் குடுத்துட்டே இருந்தா.. நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கறது..? அதான் சரினு… ” என்று மீண்டும் கண்ணடித்துச் சிரித்தான் அன்பு.
நவநீதனுக்கு மிகவுமே கஷ்டமாகத்தான் இருந்தது. அன்பு ஏன் இப்படி செய்கிறான் என்கிற கோபம்கூட வந்தது.!!! ரேவதி அப்படி ஒன்றும் மோசமான பெண் கிடையாது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருடனும் ஜாலியாக சிரித்துப் பேசிப் பழகுவாளே தவிற.. அவள் மேல் இதுவரை தப்பான ஒரு கரை படிந்ததில்லை.!! அவளைப் போய் அசிங்கமாக ஏதோ பேசுகிறானே.. என்று வருத்தமாக இருந்தது.!!!
காதல் என்றால்கூட பரவாயில்லை.. இவன் அதைவிட மோசமாக அவளை சொல்கிறானே..? முத்தின மாங்க அதை சப்ப ஆள் வேண்டும்.. அப்படி. இப்படி என்று… !
” நீ ஏன்டா தேவை இல்லாம ஃபீல் ஆகிக்கற..?” அன்பு சிரித்தான். ”விடு மச்சி..”
” பிரேம்க்கு இது தெரியுமா..?”
” தெரியாது ”
” அவனுக்கு தெரிஞ்சா.?”
”தெரிஞ்சிட்டு போகட்டும்.! இப்பவரை தெரியாது. நீ ஏதாவது போட்டுக் குடுககாம இருந்தா சரி..”
” என்னடா பேசற நீ? நான் அதெல்லாம் பண்ண மாட்டேன். ! ஆனா.. என்னருந்தாலும் அது.. வயசுல பெருசுடா.”
” இருக்கட்டும்டா.. நான் என்ன கல்யாணமா பண்ணிக்க போறேன்.? என்னமோ நீ ரொம்ப அலட்டிக்கற..? விடுவியா..? நமக்கு தேவை என்னவோ அதை மட்டும் எடுத்து கிட்டு போக வேண்டியதுதான். ”
திடுக்கிட்டான் நவநீதன்.
”அப்படின்னா.. கை வெச்சிடியாடா..?”
” ச்ச.. ச்ச.. அந்தளவுக்கெல்லாம் போக மாட்டேன். ரெண்டு வாட்டி சினிமா கூட்டிட்டு போனேன். அப்ப ஏதோ கொஞ்சம் அப்படி…இப்படி… ”
அழகான கதை அடுத்த பகுதி please