சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 3 45

” இல்ல.. ஆனா மாமா கிருத்திய லவ் பண்ணுச்சு அது வேணா தெரியும்”

” அடக் கருமமே.. சொன்னானா அவன்.. ?”

” ம்.. ஆனா பாவம். மாமா மட்டும்தான் ஒன் சைடா லவ் பண்ணுச்சு. அவ பண்ணவே இல்லையாம்..”

” அட கண்றாவியே.. அது வேறயா.. ? ஆனா நானும் நினைச்சேன்தான். அங்கயே போய் செட்டிலாகி அவளையே கட்டிக்குவானோனு. சரி இப்ப என்ன சொல்றான் ?”

” இப்பல்லாம் ஒண்ணுல்ல.. எல்லாம் விட்டாச்சு.. ”

” உன்னை ஏதாவது லவ் பண்ற மாதிரி தெரியுதா.. ?”

” அம்ம்ம்ம்மாமா…!!” கத்தினாள் கவிதா.

” ஏன்டி கத்தற.. சனியனே..? என்ன சொல்லிட்டேன் இப்ப..? சரி நீயே அவன கட்டிக்க.. அது உங்கப்பனோட ஒரு பெரிய கனவு.. !!” என அம்மா சொன்னதைக் கேட்ட கவிதா ஆத்திரத்தில் ஆட்டு உரலை அம்மா பக்கம் தள்ளி விட்டு சட்டென எழுந்து நின்றாள்.

” நீயே ஆட்டித் தொலை. என்னை கூப்பிடாத.. ” எனச் சொன்னவள் வேகமாக வீட்டுக்குள் போய் விட்டாள்.. !!!

1 Comment

  1. அழகான கதை அடுத்த பகுதி please

Comments are closed.