சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 3 45

மற்ற நேரமாக இருந்திருந்தால் ‘போம்மா ‘ என ஒரே வார்த்தையில் உதறித் தள்ளியிருப்பாள். ஆனால் இன்று.. இப்போது அவள் அப்படி சொல்லாததற்கு ஒரு காரணம் இருந்தது..!

அம்மா பக்கத்தில் போய் நைட்டியை சுருட்டி பிடித்து உட்கார்ந்தாள். அம்மாவுக்கு மாவாட்ட உதவினாள்! !

” ஏம்மா.. ” என ஆரம்பித்தாள் கவிதா.

” ம்..?” என்றாள் அவள் அம்மா.

” மாமா நல்ல கலராம்மா ?”

” எந்த மாமா..?”

” நம்ம மாமாதான். நவநி மாமாவோட அப்பா..?” என விளக்கம் கொடுத்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தாள் அம்மா.
”ஏன்டீ. ?”

அம்மா பார்த்த பார்வையும் கேட்ட தோரணையும் கவிதாவுக்கு கூச்சத்தைக் கொடுத்தது.
”இல்ல.. நவநி மாமா நல்லா கலராத்தான் இருக்கு.. பெரிய மாமாதான் கொஞ்சம் கலரு கம்மி.. அதான் கேட்டேன். நவநி மாமா அவங்கப்பா மாதிரியானு.. ?”

” ஆமா.. அவங்கப்பன் கொஞ்சம் கலருதான். ஆளும் பாக்க நல்ல வாட்ட சாட்டமா.. இருக்கும் நவநி அவங்கப்பன உருச்சு வெச்சு பொறந்துருக்கானுதான் எல்லாரும் சொல்லுவாங்க. அப்பனும் மகனும் அப்படியே அச்சுல வாத்த மாதிரி இருந்தா அப்பனை புள்ளை முழுங்கிருவானு சொல்லுவாங்க.. அப்படித்தான் ஆச்சு… கடைசில..”

நவநீதனின் அப்பா இறந்த கதை கவிதாவுக்கும் தெரியும். இருந்தாலும் இப்போதும் அதை தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள்.
” எப்படிம்மா மாமா ஏமாந்துச்சு.. ?”

” மப்புல வீர விளையாட்டு.. விளையாடி ஏமாந்ததுதான். ஆத்துல தோட்டா போட போய் திரிய பத்த வெச்சிட்டு கடைசிவரை தண்ணிக்குள்ள வீசாம கைலயே புடிச்சிட்டுருந்து.. கடைசி நுணில வெச்சி.. ரஜினி வீசறாப்பல வீசறது உன் மாமானுக்கு கை வந்த கலைனு சொல்வாங்க. ஆனா அன்னிக்கு கெட்ட நேரம் திரி சரியில்லயோ என்னமோ.. பத்த வெச்சதும் சர்ருனு புடிச்சு.. டமால்னு வெடிச்சிருச்சாம்.. அப்பவே ஆளும் காலி..”

” அப்ப.. நவநி மாமாக்கு என்ன வயசுமா இருக்கும் ?”

” ஒன்றை வயசு.. சரியா..! ஒன்றை வயசுல அப்பன முழுங்கிட்டான். அவன் ஜாதகத்துலயே அப்படி இருக்கு.”

” மா.. பெரிய மாமா பண்ண தப்புக்கு நவநி மாமா என்னமா பண்ணும்.. ?”

” ம்.. அதும் சரிதான்.. ” என்றுவிட்டு மெல்லக் கேட்டாள் அம்மா. ” உனக்கு உன் மாமன புடிச்சிருக்காடி ?”

‘பக்’ கென்றிருந்தது கவிதாவுக்கு. திகைப்பாக அம்மாவைப் பார்த்தாள்.

” என்ன நீ.. இப்படி கேக்கற..?”

” ஏன்டி நான் கேட்காம வேற யாரு கேப்பா..? அவன் உனக்கு மொறைதான. ?”

” மா.. ” எனக் கத்திச் சிணுங்கினாள்.
”போ பேசாம..”

” கட்டிக்கறியா அவனை .?” அம்மா மிகவும் இயல்பாகக் கேட்டாள்.

” ச்சீ.. ஏம்மா இப்படி லூசாட்ட பேசற..?”

” ஏன்டி அவனுக்கு என்ன குறைச்சல்..?”

” அய்யோ…! போ லூசு அம்மா..! மாமா என்னை எல்லாம் அப்படி நினைக்கவே இல்ல. ”

” உன்கிட்ட சொன்னானா.. ?”

1 Comment

  1. அழகான கதை அடுத்த பகுதி please

Comments are closed.