” கொன்றுவேன்.. மாத்து..”
” ஏன்..?”
” நீ படிக்கற புள்ளைதான..? மூளை கொஞ்சம் வேலை செய்யற மாதிரி என்ன வேணா பாரு.. ஆனா.. இருக்கற மூளையும் வேலை செய்யாம அழிஞ்சு போற மாதிரி பாக்காத.. ”
” அய்யோ.. நான் இத டெய்லி இங்கதான் வந்து பாப்பேன்.” என்று சிணுங்கிச் சிரித்தாள்.
” இனி நீ பாக்க முடியாது. அப்படி நீ பாக்கறேனு தெரிஞ்சா அடிதான். மாத்து..” என்று கண்டிப்பாகச் சொன்னான்.
அவன் பேச்சை மீற முடியாமல் சீரியலை மாற்றினாள். வாய்க்குள் ஏதோ முனகினாள்.
” என்னடி.. திட்றயா.. ?”
”ம்.. ஆமா.. நல்லா திட்னேன்..”
” என்ன திட்னே..?”
” ம்.. நீ ஏன் இங்க வந்த.. பேசாம நீ மறுபடி ஊருக்கே போனு திட்னேன்.!” எனச் சிரித்தபடி கட்டிலில் உட்கார்ந்தாள்.!!
அவன் சாப்பிட்டு முடித்து கை கழுவினான். தட்டை எடுத்துப் போய் கழுவி வைத்து விட்டு வந்தாள் கவிதா. அவன் பக்கத்தில் இயல்பாக உட்கார்ந்து கேட்டாள்.
”இப்ப சொல்லு..”
” என்ன சொல்றது ?”
” எங்கக்காகூட சண்டை போட்டியா ?”
“எந்த அக்கா?”
“கிருத்தி..” என்று அழுத்திச் சொன்னாள்.
”ச்ச. இல்லடி. ஏன்.?”
” அவள பத்தி நிறைய கேக்கனும்னு தோணுச்சு..”
”விட்டுத் தள்ளு.. அதை ஏன் தேவை இல்லாம நீ யோசிச்சிட்டிருக்க..?”
” எனக்கு அவ மேல கோவம் கோவமா வருது.. புள்ளையா அவள்ளாம்… ” என ஆதங்கப் பட்டாள் கவிதா.
சிரித்து.. அவள் தோளில் தட்டினான் நவநீதன்.
”நீ டென்ஷனாகாதடி… நாம லவ் பண்ணலாமா வேணாமான்னு மட்டும் சொல்லு..”
” ஒண்ணும் வேணாம். நான் போறேன். பாய்..! நீ தூங்கு.. குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ் ..!!” எனச் சொல்லி விட்டு பொசுக்கென எழுந்து ஓடிவிட்டாள் கவிதா..!!!
Admiring story