அதே விதமாக அவள் தொடர்ந்து அவனிடம் பேசினாள். பேசியபடியே.. ஊருக்குப் பின்னால் இருந்த ஒரு சின்ன காட்டுப் பாதையை அடைந்தார்கள். அதற்கு மேல் இருட்டுக்குள் போகாமல்.. ஒரு ஓரமாக நின்று.. அவன் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு மிகவும் மெல்லிய குரலில் சொன்னாள் கிருத்திகா.
”உன்கிட்ட.. நான் ரொம்ப.. ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லுவேன். ஆனா.. நீ அதை யாருகிட்டயும் சொல்லக் கூடாது…???”
” ம்ம்ம்..என்ன சொல்லு.. ???” சுரத்தின்றி கேட்டான்.
” வெரி வெரி.. பர்ஸ்னல் மேட்டர்.. உன் மேல நம்பிக்கை வெச்சு சொல்றேன்.. ”
”ம்ம்ம். ”
அவன் கையை மெதுவாக வருடியபடி.. தூரத்தில் தெரிந்த இருட்டைப் பார்த்துக் கொண்டு சொன்னாள் கிருத்திகா.
” என் பர்த்டே அன்னிக்கு நான் போட்றுந்தேனே.. ஒரு ட்ரஸ்.. பச்சை கலர் சுடிதார்..? அது அவன் எடுத்து குடுத்ததுதான்..! சுடி மட்டும் இல்ல.. அன்னிக்கு நான்.. என் ஒடம்புல போட்றுந்த அத்தனை திங்க்ஸ்ம்.. அவன் எனக்காக.. என் பர்த்டேக்காக கிப்ட் பண்ணதுதான். நான் போட்டிருந்த வளையல்.. பூ .. பொட்டு.. ஏன்.. என் ஜட்டி.. ப்ரா.. எல்லாமே… !!!”
திகைத்தான். ” ஓ..!!!” நவநீதனின் உடைந்த மனது இன்னும் வலித்து.
‘பாவி.. என்னை சாகடிக்காம விட மாட்டா போலிருக்கே ?’
” சரி.. போலாமா.. ?” தன் வலியை உள்ளே மறைத்துக் கொண்டு கேட்டான்.
” இரு.. இன்னும் நான் பேசவே இல்ல.. உன்கிட்ட இன்னும் சொல்லனும் நிறைய…” என கதை சொல்லத் தவிக்கும் சிறு குழந்தை போல.. அவன் கையை இறுக்கினாள் கிருத்திகா.
‘ஏன்டி பாவி.. என்னை இங்கயே உயிரோட சமாதி கட்டிரலாம்னு முடிவா.?’
” ம்.. என் பர்த்டே அன்னிக்கு.. நான் மழைல நனைஞ்சிட்டு வந்தேனே.. அன்னிக்கு நான் வேலைக்கு போகல.. ஏன் கம்பெனி பக்கம் கூட போகல..! அப்பறம் நான் எங்க போனேனு கேக்கறியா..?” மெலிதாகச் சிரித்தாள்.
அவன் முகத்தைப் பார்த்து விட்டு அவன் கையை எடுத்து அவள் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
” நீ கேக்க மாட்ட.. ஏன்னா.. நீ ஒரு ஜெம். நானே சொல்றேன் கேட்டுக்க.. அன்னிக்கு நான் கம்பெனிக்கு லீவ் போட்டுட்டு அவன்கூடத்தான் போயிருந்தேன்.. டேட்டிங்…!!!”
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது நவநீதனுக்கு. இவ்வளவு தூரம் போய் விட்டது தெரியாமல் அவளை உருகி உருகி காதலித்துக் கொண்டிருந்தேனே என மிகவும் வேதனைப் பட்டான்.! அவள் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் உடைந்தது. !!
” இதெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்றேன் தெரியுமா ?” என மெல்லிய குரலில் கேட்டாள் கிருத்திகா. !
‘வேற என்ன.. இந்த ஜென்மத்துல நான் சிரிச்சிரக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துலதான். ‘ என அவன் மனசு புலம்பியது.
” நவநி.. நீ ரொம்ப ரொம்ப நல்லவன். உன்ன மாதிரி ஒரு பையன பாக்கறது ரொம்ப கஷ்டம். நீ எனக்கு மாமா பையனா கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்..!! நீ என்கிட்ட.. இப்பவரை.. முறைப் பையன்ங்கற உரிமைல.. தப்பா ஒரு சின்ன மூவ்கூட பண்ணதில்ல.. அது எனக்கு ரொம்ப மரியாதை குடுத்துச்சு உன்மேல..! என் பர்த்டே அன்னிக்கு.. அந்த மழை பெய்யறப்ப நீ என்னை கிஸ் பண்ணதுகூடா நானா குடுத்த எடம்தான். அது தப்புன்னா.. என் தப்புதான். உன் தப்பு இல்லே..! ஸோ… அந்த வகைல.. ஐ லைக் யூ ஸோ மச்.. !!!”
“………”
” அப்பறம்.. இதெல்லாம் நான் உன்கிட்ட சொல்ல முக்கிய காரணம்.. நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மாரேஜ்தான் பண்ணிக்க போறோம். அவன் வீட்ல நிச்சயமா இதுக்கு எதிர்ப்பு வரும்.. ! அப்ப உன் உதவி எனக்கு ரொம்ப தேவையா இருக்கும். !!அந்த சுயநலம்தான்..!!!” என்றாள்.
நவநீதன் என்ன சொல்வதெனப் புரியாமல் அமைதியாக அவளையே வெறித்துக் கொண்டிருந்தான்.
” ம்.. அப்பறம்.. அன்னிக்கு.. என் பர்த்டே அன்னிக்கு நான் கம்பெனிக்கு போகாம டேட்டிங் போனேனு சொன்னனே.. எங்க போனேன் தெரியுமா. ?”
‘இனி அது தெரிஞ்சு என்ன ஆகப் போகுது.. இப்பவரை தெரிஞ்சுகிட்டத்துக்கே.. எங்க போய் முட்டிக்கறதுனு தெரியல..?’
அவன் கையால் அவளே தன் மிருதுவான கன்னத்தில் தடவியபடி மெல்லிய குரலில் சொன்னாள் கிருத்திகா.
”சிவன் மலை போனோம்..!!!”
நவநீதனுக்கு இது அடுத்த அதிர்ச்சி.!!!
‘சிவன் மலை ‘ ரகசியம் அவன் ஒன்றும் அறியாதது அல்ல.! திருப்பூர் நகர காதல்.. மற்றும் கள்ளக் காதல் ஜோடிகளுக்கு சிவன்மலை ஒரு மிகப்பெரிய புகலிடம்..!!
‘காதல் ‘ என்கிற பெயரில்.. பல பெண்கள் பொத்திப் பொத்தி வைத்துப் பாதுகாத்த தங்கள் பெண்மையை.. ஆண்களுக்கு காட்டியது அங்கேதான்.!!! பல பெண்களின் முதலிரவு.. முதல் பகலானது அங்கேதான்..!!! அப்படிப்பட்ட ஒரு பெருமைக்குரிய இடத்திற்குத்தான் இவளும் போய் வந்திருக்கிறாள்..!!!
‘அப்படியானால் இவள் பிறந்த நாள் அன்று.. மழையில் தொப்பலாக நனைந்து வந்தது..? ஈர உடைகளை களைந்து விட்டு.. அவன் இருப்பதைப் பற்றிக் கவலைப் படாமல் உள்ளாடைகளுடன் நின்றது..? அவன் எடுத்து கொடுத்த ஜீன்ஸ்.. டீ சர்ட் போட்டு காட்டி.. ‘மூடு வருதில்ல.. செமையா ரொமாண்டிக் மூடு.?’ எனக் கேட்டது.? அவளாக வந்து அவன் மடியில் உட்கார்ந்தது..? அவள் உதட்டில் முத்தம் கொடுக்க அனுமதித்தது .? இது எல்லாவற்றையும் விட.. ஒரு பெண்ணின் உதட்டில் முத்தமிட்டதற்காக.. மகிழ்ந்து பெருமிதப்பட்டோமே..??? அந்த உதடுகள் எச்சில் பட்ட உதடுகளா..??? நான் முத்தமிட்ட உதடுகள் இன்னொருவன் சுவைத்து.. சப்பி.. துப்பிய எச்சில் உதடுகளா.. ??? ச்சீசீ..!!!
பஸ் விட்டு இறங்கி சிறிது தூரம் நடக்க வேண்டும். மண் சாலையாக இருந்த அந்தப் பாதை இப்போதுதான் தார் சாலையாக மாறியிருந்தது. அந்தச் சாலையின் இரண்டு பக்கத்திலும் கற்றாலை வேலி நீண்டிருந்தது. அதற்கு அந்தப் பக்கம் விவசாயம் செய்யப்படாத பொட்டல் காடுகள். அங்கங்கே முட்செடிகள் நிறைந்திருந்தது. முன்பு அந்தப் பகுதி ஒரு கருவேலங் குட்டையாக இருந்தது.!!
அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நவநீதனின் ஊர்..!! ஊருக்குள் பஸ் வசதி கிடையாது. ஊரின் பின் பக்கத்தில்.. பத்து கிலோ மீட்டர் தொல்வுக்கு நீண்ட ஒரு மலைக் குன்று.. அடர்ந்த வனப் பகுதியாகியிருந்தது. அந்தக் கரட்டின் உச்சியில் ஒரு முருகன் கோவிலும்.. அதற்குப் போகும் பாதையில் ஒரு முஸ்லிம் தர்காவும் இருந்தது.. !!!
நவநீதனின் ஊர்.. மொத்தமே நூறு வீடுகளுக்குள் அடங்கி விடும். ஆனால் அந்த ஊரும் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அவன் வீடு இருப்பது கிழக்குத் தெருவில். கான்க்ரீட் போட்ட மூன்றாவது வீதியில் இருந்தது நவநீதன் வீடு. !!
அவன் ஒன்றும் வசதியானவன் அல்ல. இப்போது இருக்கும் அவன் வீடு.. அரசாங்கத்தால் இலவசமாக கட்டிக் கொடுக்கப் பட்ட தொகுப்பு வீடுகளில் ஒன்று..!! அவன் வீட்டின் முன் பக்கத்தில் திண்ணை இருக்கும். அதை ஒட்டி.. சின்னதாக ஒரு ஆட்டுச் சாலை. தென்னை மட்டையால் வேயப்பட்ட கூரைச் சாலை அது..!!
அதற்கு அடுத்ததாக அவன் மாமா வீடு..!! மாமாவுக்கு தாசில்தார் அலுவலகத்தில் வேலை என்பதால்.. ஓட்டு வீடு கட்டியிருந்தார். அதுவும் பழைய வீடுதான்..!! அந்த வீட்டின் முன் பக்கத்திலும் நீளமான ஒரு திண்ணை உண்டு.!!
அவன் வீட்டை அடைந்த போது.. அந்த இரண்டு வீடுகளுமே பூட்டிக் கிடந்தது. ஆட்டுச் சாலைகளில் ஆடுகள் இல்லை. சாவியைத் தேடிப் பார்த்தான். சாவி கிடைக்கவில்லை. அவன் அம்மா சாவியை வைக்கவில்லை போலிருந்தது. ஆட்டுச் சாலைக்குள் அவன் பேகை வைத்து விட்டு.. வெளியே போனான்..!!
அவன் அம்மா ஆடு மேய்த்துக் கொண்டிருப்பாள். அந்த ஊரில் நிறையப் பேர் ஆடு. மாடுகள் வைத்திருந்தனர்..!!!
தூரத்தில்.. கரட்டின் ஓரமாக ஆடுகளும். மாடுகளும் நிறைய மேய்ந்து கொண்டிருந்தன. வேறு ஒரு பெண்மணியிடம் கேட்டு.. அவன் அம்மா இருக்கும் இடத்துக்குப் போனான் நவநீதன்.
கரட்டின் உச்சியில் இருந்து இறங்கிய ஒரு பெரிய பள்ளத்தின் ஓரம்.. ஆடுகள் ஒரு பக்கத்தில் மேய்ந்து கொண்டிருக்க.. அவன் அம்மாவும்.. அத்தையும் ஒரு மர நிழலில் உட்கார்ந்திருந்தனர்..!!
நவநீதனை முதலில் அவன் அத்தைதான் பார்த்தாள். அவனைப் பார்த்தும் அத்தை முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.!!
”அட.. நவநி.. வந்துட்டியா.. ? வா.. வா.. !” என வெற்றிலை வாயுடன் அத்தை வரவேற்க.. அதைக் கவனித்து.. அவனுடைய அம்மாவும் திரும்பி அவனைப் பார்த்தாள். அம்மா முகம் மகிழ்ச்சியில் திளைத்தது.!
” நல்லாருக்கியா அத்தே.?” அத்தையைக் கேட்டான் நவநீதன்.
” எனக்கு என்னப்பா.. மகராசியா இருக்கேன். நீ நல்லாருக்கியாடா என் மருமகனே..?”
” ம்.. நல்லாருக்கேன்த்தே.. மாமா.. புள்ளைக எல்லாம்…?”
” நாங்க எல்லாரும் நல்லாருக்கம்டா.. ஊர்ல எல்லாம் சவுக்கியமா..?” ஊர் நிலவரம் விசாரித்து முடிக்க..
” சாவி இல்ல.. ” என்று அம்மாவைப் பார்த்தான்.
தன் சுருக்குப் பையில் இருந்த சாவியை உடனே எடுத்து நீட்டினாள் அம்மா. பக்கத்தில் போய் வாங்கினான். பள்ளத்தின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைப் பார்த்தபடி அத்தையிடம் கேட்டான் நவநீதன்.!!
” சின்னவளும் ஸ்கூல்க்கு போய்ட்டாளா அத்தை.. ?”
” ஆமாடா.. அவளுக ரெண்டு பேருமே உன்னை அடிக்கடி கேட்டுட்டே இருப்பாளுக. சின்னவள நீ இன்னும் பாக்கலியே…? அவ வயசுக்கு வந்தப்பறம்..?”
” ம்ம்.. இல்லத்த.. எங்க வர முடியல. வேலை ஜாஸ்தியா இருந்துச்சு. அதில்லாம நான் வந்து என்ன பாக்க போறேன் ? ஏன்த்தே சீர் பண்ணலயா அவளுக்கு ?”
Admiring story