” அ.. அது.. அது.. ஒரு தயக்கம்.. கொஞ்சம் பயம்… ”
” ஏன்.. என்ன பயம்.. ?”
” நீ ஏத்துக்குவியோ மாட்டியோனுதான்”
” சரி.. இப்ப மட்டும் எப்படி சொன்ன..?”
” இன்னிக்கு உன் பர்த்டே.. பத்தாததுக்கு.. நீ மழைல நனைஞ்சிட்டு வந்து என் மடில உக்காந்து… ஒரு மாதிரி ஆகி… நாம கிஸ் பண்ணி… ” சொல்ல முடியாத சிரிப்புடன் நவநீதன் அவளைப் பார்த்தான்.
அவனை போல அல்லாமல்.. மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் கிருத்திகா.. !!
அதே நேரம் சட்டென கரண்ட் வந்தது.
” பளிச்.. பளிச்.. ” என விளக்குகள் எரியத் தொடங்கின.
மழை விட்டிடிருந்தாலும்.. ஈரக் காறறில் பரவிய குளிர் இன்னும் குறையவில்லை. திறந்திருந்த ஜன்னல் வழியாக இப்போது உள்ளே பரவிய காற்று.. சிலுசிலுவென வீசி உடம்பில் இருந்த மெல்லிய ரோமங்களை எல்லாம் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் இருந்த விளக்குகள் எல்லாம் பளிச்சென எரிந்து கொண்டிருக்க.. ஜீன்ஸ், டீ சர்ட்டில் இருக்கும் கிருத்திகாவை இப்போதுதான்.. வெளிச்சத்தில் நன்றாக ரசித்துப் பார்த்தான் நவநீதன்.!!!
கிருத்திகாவின் அந்த மிளிரும் அழகும்.. ஆடையின் எடுப்பும்.. அவனுக்குச் சொந்தமானது என்று எண்ணி.. அவன் மனம் மிகவும் கர்வம் கொண்டது.. !!!
டீயை குடித்த பின்.. டம்ளரைக் கட்டில் மீது வைத்து விட்டு.. கட்டிலை விட்டு இறங்கிப் போய்.. டிவியை ஆன் பண்ணினாள் கிருத்திகா.!! கேபிள் கனெக்சன் கட்டாகியிருந்தது.!!!
டிவியை அப்படியே விட்டு விட்டு மெதுவாக வந்து கட்டிலில் உள்ளே தள்ளி.. கால்களை மடக்கி சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டாள். பக்கத்தில் கிடந்த தலையனை ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.!!!
” நீ பதிலே சொல்லல கிருத்து.. ” நவநீதன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
” என்ன பதில். ??” முகத்தை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் முகம் கொஞ்சம் சீரியஸாக இருப்பதை பார்த்து அவனுக்கு கவலை வந்தது.
” நான் உன்னை லவ் பண்றேனு சொன்னேனே..?”
” ம்ம்.. யோசிச்சிட்டிருக்கேன் ”
” இதுல யோசிக்க என்ன இருக்கு.?”
” ஏன்.. இல்லையா ??”
” சரின்னா ஓகே சொல்லு.. இல்லேன்னா நோ சொல்லு.. ”
” அது போதுமா ??” தன் முட்டை கண்களை விரித்து.. அவன் மேல் பரிதாபப் படுபவளைப் போல ஒரு பார்வையை வீசினாள்.
” போதும்.”
” அப்ப.. நோ தான்.. !!!” என்றாள்.
அவள் விளையாட்டாகச் சொல்வதாக எண்ணினான் நவநீதன். ஆனால் அவள் முகத்தில் சிரிப்பு இல்லை என்பதை உணர்ந்த போது அவனை கவலை கவ்விக் கொண்டது.
” ஏன்…????”
” நீதான் டீடெய்ல்ஸ் எல்லாம் கேக்க மாட்டேன்னியே. ?”
” அப்ப… நிஜமா.. நீ என்னை லவ் பண்லயா. ?”
” அய்யோ.. இதான்.. நான் எப்படி சொல்றதுனு யோசிச்சேன். உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்… ஆனா.. ஸாரி.. நான் உன்ன லவ் பண்ணல..”
அவன் நெஞ்சின் மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்ததை போலிருந்தது. அவள் பொய்யாகவோ.. விளையாட்டாகவோ அதைச் சொல்லவில்லை என்பது அவனுக்கு தெளிவாகப் புரிந்தது..!!!
முகத்தில் அப்பிய இறுக்கத்துடன் கிருத்திகாவை உற்றுப் பார்த்தான் நவநீதன். மழையில் நனைந்த அவளின் ஈரக் கூந்தலின் உதிரிகள் அவள் காதோரத்தில் லேசாக சிலிப்பிக் கொண்டிருக்க.. அவளது கன்னங்களும் , மூக்கும் , ஈர உதடுகளும் மிகவும் பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது. அவள் பார்வை இன்னும்.. உயிர் பிடிக்காத டிவியின் வெற்றுத் திரையை அர்த்தமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தது.
அவளின் பார்வை வெற்று என்றாலும்.. அவள் மனதில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ! பனியனில் அவள் கழுத்துக்கு கீழ் விம்மும் அந்த சதைப் புடைப்பின் மேல் அவன் பார்வை நிலைக்க.. அது தனக்கில்லை என்கிற… ஏக்கம் அவன் நெஞ்சை வியாபித்தது.
”கிருத்து… ” மெதுவாக.. அவன் தொண்டையிலிருந்து வெளியே வந்த அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை போலிருந்தது.
”க்கும்..!!!” என அவன் மீண்டும் தொண்டையை செருமிக் கொள்ள.. மெள்ள அவன் பக்கம் பார்வையைத் திருப்பினாள் கிருத்திகா.
” அப்.. அப்ப… நீ என்.. என்னை விரும்பலயா கிருத்தி..???” அவன் குரல் அடைத்துக் கொண்டதை போல.. திக்கித் திணறி வெளியே வந்தது.
” விரும்பறேன் நவநி.. பட்.. அது லவ் இல்லே.. ஸாரி.. !!!” அவள் குரலில் ஒரு மெல்லிய வருத்தம் இழையோடியது.
” ஏ.. ஏன் கிருத்தி.. ???”
அமைதியாக அவனை ஒரு நிமிடம் முழுசாக உற்றுப் பார்த்தாள். அவள் பார்வையில் எந்த கல்மிசமும் இல்லை. ஆனால் ஆழமான பார்வை.! அதன் நோக்கம்தான் அவனுக்கு புரியவில்லை. அவன் மனசு பரிதவித்தது.
மெள்ள பார்வையை மாற்றினாள். முகத்தை திரும்பி டிவி திரையை பார்த்தபடி ஆழமாக ஒரு மூச்சை இழுத்து விட்டாள் ! பின் மீண்டும் அவன் பக்கமே திரும்பினாள்.
”நவநி.. உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்குதான். நான் மறுக்கலே. ஆனா.. ஆனா.. உன்ன லவ் பண்ண முடியாது..” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
” ஏன்..? ஏன் கிருத்தி…? என்னை புடிக்கலயா.?”
” புடிச்சிருக்கு…!!! ரொம்ப புடிச்சிருக்கு.. !! ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு…!!! உன்ன எனக்கு எவ்ளோ புடிக்கும்னு.. வார்த்தையால சொல்ல முடியாத அளவுக்கு புடிச்சிருக்கு.. !!!”
” அ.. அப்றம்… என்ன கிருத்தி… ?”
” சொன்னா.. நீ கோபப்படக் கூடாது..??”
” ம்.. சொல்லு.. ??”
” நீ என்னை ஒரு வருசாமாத்தான் விரும்பறதா சொன்ன.. ஆனா.. உன்ன விடவும் அதிகமா.. அஞ்சு வருசமா.. என்னை ஒருத்தன் விரும்பிட்டு இருக்கான்.!! அவன் மட்டும் இல்ல… நானும்தான்..! நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ டீப்பா லவ் பண்ணிட்டு இருக்கோம். புரியுதா.? இப்ப சொல்லு… நான் என்ன பண்ணட்டும்..??” கிருத்திகா அவன் கண்களை நேராகப் பார்த்து தயக்கமின்றி கேட்டாள்.
அவளுக்காக நவநீதன் கட்டி வைத்த இதய மாளிகை சுக்கு நூறாக உடைந்து நொருங்கியது. சுக்கலாக உடைந்த.. கண்ணாடி பொருளைப் போல.. அவன் காதலும் ஒரு ரனப் பொருளாக மாறி.. அவன் இதயத்தைக் கிழிக்கத் தொடங்கியது…!!!
Admiring story