” என்ன போண்டா ??”
”கிழங்கு போண்டா.. ”
” நான் போய் வாங்கிட்டு வரட்டுமா ??”
” ம்ம். ஆனா இப்பதான் போட்றுக்காங்க.. கடைலயும் நல்ல கூட்டம் இருந்துச்சு.. இந்த மழைக்கும் அதுக்கும் நல்ல வேவாரம்தான் அவங்களுக்கு !!”
” அப்ப நான் போய் வெய்ட் பண்ணி வாங்கிட்டு வரேன்.. லேட்டா போனா கிடைக்காது. நீ டீ வெய்.. !!”
” ம்ம் ” திரும்பி அவனைப் பார்த்து அவள் சிரித்த ஒரு சிரிப்பே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
‘நான் முத்தமிட்டு சுவைத்த அந்த உதடுகள்தான்.. அவள் சிரிக்கும்போது என்ன ஒரு அழகாக விரிந்து மலர்கிறது.. !!! ஹ்ஹா.. !!’ அவன் கர்வம் கொண்ட நெஞ்சுடன்.. போண்டா வாங்க போனான். கிழங்கு போண்டா.!
கடையில் நன்றாக கூட்டம் சேர்ந்திருந்தது. மழைக்கு இதமாக டீ குடிக்க நிறைய பேர் வந்திருந்தனர். சிறிது நேரம் காத்திருந்து சூடான கிழங்கு போண்டாவை ஆளுக்கு இரண்டு என நவநீதன் வாங்கிக் கொண்டு போனபோது.. வாசற்படி பக்கத்தில் வந்து.. தன் இரண்டு கைகளையும் மார்பில் குறுக்காக கட்டிக் கொண்டு.. இன்னும் லேசாக தூரிக் கொண்டிருக்கும் மழையை.. அமைதியாக நின்று ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. !!!
அவளின் தோளில் மெல்லத் தட்டி.. கனவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை கலைத்து விட்டு உள்ளே போனான். இரண்டு டம்ளர்களில் டீயை ஊற்றி ஆவி பறக்க வைத்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு இரண்டு பேரும் உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்தார்கள்.!
போண்டா பற்றி பேசியவாறு டீ குடித்த போது.. நவநீதனின் மனம் அவன் காதலை அவளிடம் சொல்லிவிடத் துடித்தது.. !!
இவ்வளவு தூரம் வந்த பிறகு அதை மட்டும் ஏன் சொல்லாமல் மறைக்க வேண்டும்..? எப்படியும் அவள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறாள்.. அப்படி ஏற்றுக் கொண்டால்.. இன்னும் சில முத்தங்கள் கிடைக்குமே.? அத்தை வரும்வரை.. மிகவும் உல்லாசமாக நேரத்தை ஓட்டலாமே.
” உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் கிருத்தி..” டீயை உறிஞ்சி விட்டு அவளைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான்.
” ம்ம்.. ? என்ன.?”
” கொஞ்சம் தயக்கமா இருக்கு..”
” பரவால்ல சொல்லு.. ??”
” ஐ லவ் யூ சோ மச்.. !!!”
” ஹ்ஹா.. !!!” டீயை தள்ளிப் பிடித்துக் கொண்டு ‘பக் ‘கெனச் சிரித்தாள் கிருத்திகா.
அவள் அப்படி சிரித்தது அவனுக்கு திகைப்பாக இருந்தது. போண்டாவுக்குள் மசாலாவுடன் இருந்த கிழங்கை விரலால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டே சொன்னாள். !
”நினைச்சேன்.. நீ இதைத்தான் சொல்வேனு.. !! நான் நினைச்ச மாதிரியே சொல்லிட்ட..!!!”
” அப்படியா.. அப்ப நீயும் இதை எதிர் பார்த்தியா..??”
” ம்ம்.. இப்ப கொஞ்ச நாளாவே உன்கிட்ட இருந்து இந்த மாதிரி எதிர் பாத்துட்டுதான் இருந்தேன்.!! நீ கிஸ் பண்ணப்பவே.. இதை சொல்வேனு நினைச்சேன். !!! சரி.. எப்பருந்து.. ?”
” என்னது. ?”
” என்னை நீ லவ் பண்றது ?”
”ம்ம்.. இங்க வந்து ஒரு… ஆறு மாசம் கழிச்சு.. உன் மேல லவ் வந்துருச்சு.. ”
” ம்ம்.. அப்படின்னா.. ஒரு வருசமா என்னை லவ் பண்ணிட்டு இருக்க.. ??”
” ம்ம் ”
” இவ்ளோ நாள்.. நீ ஏன் இதை என்கிட்ட சொல்லல. ?”
Admiring story