சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 2 66

தன் அத்தை மகள் கிருத்திகா.. தான் மனதார நேசிக்கும் தேவதை.. இவ்வளவு சுலபமாக தன் வசமாவாள் என்று நவநீதன் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை.

வெளியே பெய்யும் மிதமான மழை காரணமோ என்னவோ.. அவன் அணைப்புக்குள் வந்தவள்.. உதட்டில் கொடுத்த முத்தத்தையும் மறுக்காமல் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

இதற்கு மேலும் அவன் தன் காதலை அவளிடம் சொல்லித்தான் அவளுக்கு புரிய வைக்க வேண்டுமா என்ன…??? அதற்கான அவசியம் இருக்கப் போவதில்லை என.. எண்ணிய நவநீதன்.. உற்சாகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

அவனது உதட்டு முத்தத்தை ரசித்து.. ஏற்று.. பின் உதடுகள் பிரித்து.. முகம் திருப்பிக் கொண்டாள் கிருத்திகா. அதன் பின்.. அவன் அவளை மீண்டும் முத்தமிட முயற்சி செய்தபோது..

”ச்சீ.. சும்மா இரு.. ” என சிரித்தபடி அவன் முகத்தில் கை வைத்து தள்ளி விட்டாள்.!

அவனுக்கு இன்னும் அவளை சுவைக்க வேண்டுமென மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால் அவள் விருப்பத்தை மீறி அவளை முத்தமிடவும் அவன் விரும்பவில்லை.

உடனே அவன் மடியில் இருந்து விலகி விடாமல்.. மேலும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டிருந்த பின்பே.. அவன் மடியை விட்டு மெதுவாக எழுந்து போய் ஜன்னல் பக்கத்தில் நின்றாள். வெளியே மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியிருந்தது. ஆனால் காற்றில் நல்ல குளிர். மழையின் வேகம் குறைந்திருப்பதைப் பார்த்துச் சொன்னாள்.
” மழை நிக்குது..!!”

” என்ன.. மழை நிக்குதா.?”

” ம்ம்ம் ”

” எங்க.. ?”

” என்ன எங்க.. ? வெளிய பாரு நல்லா..!”

அவனும் எழுந்து அவள் பக்கத்தில் போய் நின்று வெளியே பார்த்தான். ஜன்னல் வழியாக தெரிந்த மழைத் துளிகள் அடர்த்தி குறைவாகிக் கொண்டிருந்தது. அவன் சிரித்தபடி சொன்னான்.
”மழையால நிக்க முடியாது. ஒண்ணு விடும். இல்ல விழும்..”

சைடாக பார்த்து அவனை லேசாக முறைத்தாள் கிருத்திகா. ஆனால் உதட்டோரம் மெல்லிய புன்னகை வெளிப்பட்டது.
” அய்யே.. அறிவ்வு..”

அவன் கிறக்கமாகப் புன்னகைத்தபடி அவளை அணைக்கப் போனான். அவள் மெதுவாக நகர்ந்து அவன் கையை விலக்கினாள்.
“சூடா டீ குடிச்சா நல்லாருக்கும்ல?”

“ஆனா.. பால் இல்லையே?”

“நான் போய் வாங்கிட்டு வரேன்”

“நீயா..? வேண்டாம். நானே போறேன்”

“இரு.. இரு. நீ போக வேண்டாம். நானே போயிட்டு வரேன்” என்று நகர்ந்து போனாள் கிருத்திகா.

அவள் தன்னிடம் இருந்து தப்பிக்க விரும்புவதைப் போல உணர்ந்தான்.

மழை விட்டதும்.. லேசான தூரலில் நனைந்த படியே பால் வாங்க கடைக்கு போய் விட்டாள் கிருத்திகா. இன்னும் கரண்ட் வராரதால்.. வீட்டுக்குள் இப்போது கொஞ்சம் அதிகப்படியான இருள் கவிந்திருந்தது. அவன் மொபைல் டார்ச்சை ஆன் பண்ணி வைத்தான்.

பால் கவரை கையில் பிடித்தபடி தபதபவென ஓடிவந்த கிருத்திகா.. வீட்டுக்குள் வந்ததும் சொன்னாள்.
” எல்லாருமே இந்த ட்ரஸ் சூப்பரா இருக்குனு சொன்னாங்க.. ”

” எல்லாரும்னா.?” அவன் சமையற் கட்டின் பக்கத்தில் வந்து நின்றிருந்தான்.

” கடைல.. நிறைய பேரு நின்றுந்தாங்க..” அவனிடம் சொல்லி விட்டுப் போய் அடுப்பை பற்ற வைத்தாள். பால் பாத்திரத்தை எடுத்து.. பால் கவரை பல்லால் கடித்து உடைத்து.. பாத்திரத்தில் ஊற்றி.. பாலை அடுப்பில் வைத்து தண்ணீர் கலந்தாள்.!!

அவளுக்கு பக்கமாக போய் நின்று கொண்டு.. அவள் செய்வதை ஒரு வித காதல் நிறைந்த ஆவலுடன் பார்த்தான் நவநீதன் !! எதுவும் பேசத் தோன்றாமல்.. அவள் பக்கத்தில் அப்படி நிற்பதும்.. அவனுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.!!

” கடைல இப்பதான் போண்டா போட்டுட்டு இருக்காங்க..” என்றாள்.

“ஏன் வேணுமா?”

“டீ க்கு கடிச்சிக்க போண்டா இருந்தா சூப்பரா இருக்கும் !!”

1 Comment

  1. Admiring story

Comments are closed.