காலை..! ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து விட்டான் நவநீதன். தமிழகத்தின் பின்னலாடை தொழில் நகரமான.. திருப்பூரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை பார்த்து வரும் நவநீதன் தங்கியிருப்பது அவன் அத்தை வீட்டில் !!
வழக்கமாக ஆறரை.. அல்லது ஏழு மணிக்கு மேல் எழுபவன் இன்று ஐந்தரை மணிக்கே எழுவதற்கு ஒரு காரணம் இருந்தது.
கிருத்திகா !!
நவநீதனின் அத்தை மகள் !! அத்தையின் ஒரே மகள் !! அவன் உயிரை குடிப்பதற்கென்றே அழகாய் பிறந்து தொலைத்தவள் !! அவன் தூக்கம் கலைந்து எழுந்ததும் முதலில் கிருத்திகாவின் முகத்தில்தான் கண் விழித்தான். !!
அவள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். மார்புவரை போர்வை மறைத்திருக்க.. ஆழ்ந்து தூங்கும் அவளின் வட்ட முகம் மட்டும் அழகாக தெரிந்தது !! இன்று.. அவளுக்கு பிறந்த நாள் !!!
வெளியே வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. வீதியில் நடப்பவர்கள் எல்லோருக்கும் மிக அவசரமான காரியங்கள் இருந்தது. நடை பயிற்சி அறியா நகரம்.. ஆனால் இங்கு சாதாரனமாக நடப்பதே ஒரு நடை பயிற்சி போலத்தான் !!
நவநீதன் வாய் கொப்பளித்து.. முகம் கழுவிப் போனதும்.. அடுப்பின் முன்னால் நின்று சமையலில் ஈடு பட்டுக் கொண்டிருந்த அவன் அத்தை கேட்டாள்.
” நேரத்துல போகனுமா ?”
” இல்ல” என்றான்.
அவனை ஆச்சரியமாக பார்த்தாள் அத்தை.
” நீ நேரத்துல எந்திரிச்சத பாத்து நான் அப்படி நினைச்சிட்டேன்.”
”தூக்கம் தெளிஞ்சிருச்சு ” சிரித்து வைத்தான்.
” காபி சூடு பண்ணி தரேன். உக்காரு. ” அடுப்பில் இருந்த ஒரு பாத்திரத்தை இறக்கி வைத்து விட்டு.. காபி பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தாள் அத்தை.
அப்பாவின் இளைய தங்கை இவள். வேறு ஒரு பெண்ணின் கணவன் விரித்த வலையில் விழுந்து.. கர்ப்பம் தரித்து.. அவனையே மணந்து கொண்டவள் !! ஆனாலும் கணவன் உறவு நிரந்ரமாக அமையப் பெறாதவள். எப்போதாவது வந்து போவான் அவ்வளவே.. !! நவநீதன் அறிந்தவரையில் அவர் நல்ல மனிதர்தான். ஆனால் அத்தைக்கு நல்ல கணவனாக இல்லை !!
அத்தைக்கு சொந்தமான ஒரு சின்ன வீடு இது. இரண்டு அறைகளை மட்டும் கொண்ட சாதாரண ஓட்டு வீடு. முன்னறை, பத்துக்கு ஆறு என சமையற்கட்டு.! உள்ளே ஒரு அறை. பத்துக்கு பத்து..! ஹால்.. படுக்கை அறை எல்லாம் அது ஒன்றுதான் .!
உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்தான் நவநீதன். ஆழ்ந்து தூங்கும் கிருத்திகாவைப் பார்த்தான். அவளின் தடித்த உதடுகள் கொஞ்சமாய் பிளந்திருந்தது. தலை முடி கலைந்திருக்க.. அவள் விட்ட மூச்சுக்கு ஏற்றவாறு அவளின் மார்பு ஒரே சீராக ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தது.
” லைட் போட்டுக்கோ.. ” எதற்கோ உள்ளே வந்த அத்தை ஜீரோ வாட்ஸை அணைத்து விட்டு ட்யூப் லைட்டை போட்டு விட்டாள்.
” இவ தூங்கறா.. ” என்றான்.
” எழுப்பி விடு.. கழுதை விட்டா தூங்கிட்டே இருப்பா ” எனச் சொல்லி விட்டு அத்தை வெளியே போனாள்.
உதட்டில் மெல்லிய புன்னகையுடன் மீண்டும் கிருத்திகாவைப் பார்த்தான்.! பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்து விட்டு.. காலேஜ் போகாமல்.. இரண்டு வருடங்களுக்கு மேலாக.. அவளும் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறாள்.! ஒரே பெண் என்பதால் நிறைய செல்லம். பிடிவாத குணம்..!!
அத்தை ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள். அவன் கையில் காபியை கொடுத்து விட்டு கிருத்திகாவை தோளில் தட்டி எழுப்பினாள்.
” ம்ம்ம்ம். !!” என நீண்டாத முனகிக் கொண்டு புரண்டு படுத்தாள் கிருத்திகா.
” எந்திரிக்கிறாளா பாரு.. சனியன். ஏய் எந்திர்ரீ.. எருமை.. ” அத்தை திட்டினாள்.
” விடுத்தே ” என்றான் நவநீதன் ”இன்னிக்கு அவ பொறந்த நாள். சனியன் அது இதுனு திட்டாத..”
” ம்ம்ம்ம். . நல்ல்லா ஷொல்லு உங்கொத்தைக்கு.. ” என்று மூடிய கண்களைத் திறக்காமலே முனகினாள் கிருத்திகா.
” வா.. வாய்லயே சூடு போடறேன் !!” அத்தை திட்டி விட்டு முன்னறைக்கு போனாள்.
அரைக் கண் திறந்து நவநீதனை பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் கிருத்திகா !!
” ஹேப்பி பர்த் டே கிருத்தி !!!” அவள் காது பக்கத்தில் குனிந்து சொன்னான் நவநீதன்.
” ம்ம்ம்.. தேங்க்ஸ் !!” கண் விழித்து அவனை பார்த்துச் சிரித்தாள்.
அத்தை மீண்டும் கிருத்திகாவுக்கு காபி கொண்டு வந்தாள்.
” நல்ல நாளும் அதுவுமா தூங்கி வழியாம கொஞ்சம் சுருசுருப்பா எந்திரி. இந்த காபி குடி ”
” போம்மா.. ”
” ம் குடுங்கத்தே ” நவநீதன் காபியை கையில் வாங்கிக் கொண்டான். அதை எட்டி டிவி ஸ்டேண்டு மேல் வைத்தான்.
” எந்திரி கிருத்தி.. ”
” நீயுமா ?” சிணுங்கி முனகினாள்.
” அடுப்புல கொழம்பு வெச்சிருக்கேன். பொங்குதானு பாத்துக்க நவநி. நான் கக்கூஸ் போய்ட்டு வந்தர்றேன் !!” என நவநீதனிடம் சொல்லி விட்டுப் போனாள் அத்தை.
காபியை உறிஞ்சிக் கொண்டே கிருத்திகாவை எழுப்பினான்.
”எந்திரிங்க மேடம் ”
” கொஞ்ச நேரம் தூங்க விடறியா ” முனகினாள்.
” பொறந்த நாளும் அதுவுமா இப்படி தூங்கிட்டிருக்கலாமா ?”
” வேற என்ன செய்ய சொல்ற. ?”
”காலைல நேரத்துல எந்திரிச்சு.. குளிச்சு நீட்டா ட்ரஸ் பண்ணிட்டு… கோயில் குளம்னு போய்ட்டு வர வேண்டாமா ?”
புரண்டு படுத்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
” நீ அப்படித்தான் செய்வியா ?”
” நான் பொறந்த நாளே கொண்டாடறதில்ல.. ”
” ஏன் ?”
” பழக்கமில்ல. ” என்றான்.
பாதி எழுந்து.. உடம்பை வளைத்து. . புரண்டு வந்து அவன் மடியில் தலைவைத்து படுத்தாள் கிருத்திகா !!!
அப்பா என்று ஒருவர் இருந்தும் அதிகமாக அவரது அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த பெண்.. கிருத்திகா. அதோடு உடன் பிறப்பு என்று யாரும் இல்லாமல் போனதால் சகோதர பாசமும் அறியாதவள். !!
நவநீதன் அவள் வீட்டுக்கு வரும் முன் அவள் மனதில் குடி கொண்டிருந்த ஒரு பெரிய மனக்குறை இப்போது அவன் மூலமாக காணாமல் போயிருந்தது. அவன் தன் முறைப் பையன் என்றாலும்.. அதையும் தான்டி அவனிடம் அன்பு பாராட்டிக் கொண்டிருந்தாள் !!
அவனை வம்பிக்கிழுப்பது. அவனை சீண்டுவது அவ்வப்போது சண்டை போட்டுக் கொள்வது.. என அவள் செய்வது எல்லாம் முறைப் பையன் என்கிற காதலால் அல்ல என்பதை நவநீதனும் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தான். !!!
தன் மடியில் தலை வைத்து படுத்த கிருத்திகாவின் தலையைத் தடவினான் நவநீதன். அவளது கலைந்த தலை முடியை காதோரமாக ஒதுக்கி விட்டான்.
அந்த சுக உணர்வில் கண்களை மூடிக் கொண்டாள் கிருத்திகா !!
அவன் காபி டம்ளரை எட்டி தள்ளி வைத்தான்.
” காபி ஆறுது கிருத்தி.. எந்திரிச்சு குடி.. ”
” ம்ம் ஆறட்டும் ” கால்களை மடக்கி சுருண்டு படுத்தாள்.
சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன. அவன் கை மட்டும் அவள் தலையை ஒரு வாஞ்சையுடன் தடவிக் கொண்டிருந்தது.