அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 5 205

.

“சரி எங்களுக்கு நேரம் ஆச்சு நாங்கள் கிளம்புறோம், நீங்கள் பவனி கூட பேசிகிட்டு இருங்க.” நான் வேலைக்கு கிளம்பினேன்.

“சரி பார்த்து போங்க,” என்று என் மனைவி எங்களை வழி அனுப்பினாள்.

நான் முதலில் போய் என் மகனை ஸ்கூலில் ட்ராப் செய்தேன். பின்பு ஓரமாக சாலையில் என் கார் நிறுத்தி போன் செய்தேன்.

“ஹலோ, மிஸ்டர் மனோ, பவனி தோழி என்று ஒருத்தி வந்திருக்க, அவங்க அப்புறம் வெளியே போறாங்களாம். அவங்களை கண்காணியுங்கள்.”

“கவலை படாதீங்க சார், நான் இப்போது அவர்களை வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். சற்று முன்பு தான் இருவரும் வீட்டில் உள்ளே போனார்கள். இன்னும் அவர்கள் வெளியே வரல.” “அவங்க எங்கே போனாலும் நான் பின் தொடருவேன், பயப்படாதீங்க.”

மனோகரன் எல்லாம் கவனித்துடுவார் என்று நிம்மதி ஆனேன். “எது என்றாலும் எனக்கு உண்டனே தகவல் சொல்லுங்க.”

“ஸுவர் சார் வில் டூ.”

அவள்

என் கணவர் கார் எங்கள் பார்வையில் இருந்து மறையும் வரை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்புறம் கிர்ஜா என்னை பார்த்து புன்னகைத்து,”ஷால் வி கோ இன்?”

“வாங்க, வெல்கம் டூ மை ஹாம்.”

உள்ளே நாங்கள் போய் கதவை சாத்தி தாழ்ப்பாளை போட்ட பின் மீண்டும் என்னை பார்த்து புன்னகைத்தாள்.

“எப்படி இருந்தது என் நடிப்பு? நாம பழைய தோழிகள் என்று உன் புருஷன் நம்பும் வகையாக இருந்ததா?”

“உண்மையிலே யார் பார்த்தாலும் நாம ஓல்ட் பிரெண்ட்ஸ் என்று நம்பும் வகையில் இருந்தது. உண்மை தெரிந்த எனக்கே நாம பழைய தோழிகள் என்ற உணர்வை உருவாக்கிவிட்டீர்கள், பிரமாதம் ஆக்டிங்.”

“விக்ரம் உங்க வாட்சப் போட்டோ காண்பித்தான் அதனாலே உன்னை யார் என்று கண்டுபிடிக்க ஈசியாக இருந்தது.”

“எனக்கும் உங்க போட்டோ விக்ரம் அனுப்பினான் அதனாலே தான் நீங்க டேக்சி விட்டு இரங்கனவுடன் நீங்க யார் என்று கண்டுக்கிட்டேன்.”

“ஆனாலும் பவனி…உன்னை பவனி என்று கூப்பிட்டு பழகிக்கிறேன் அப்போது தான் தவறுதலாக உன்னை வாங்க போங்க என்று உன் புருஷன் முன்பு பேச மாட்டேன். நீயும் என்னை கிர்ஜா அல்லது கிர்ஜா அக்கா என்று கூப்பிட்டு பழகிக்கோ.”

“சரி அக்கா, இப்போது எதோ சொல்ல வந்திங்களே?”

“ஓ அதுவா, நான் மட்டும் நல்ல நடிக்கில நீயும் தான் சம அளவுக்கு நடித்த.”

“உள்ளுக்குள் எனக்கு இருந்த உதறல் எனக்கு தான் தெரியும். எதோ சமாளிச்சிகிட்டேன்.”

“ஆமாம் உன் புருஷன் எதோ டிடெக்டிவ் வெச்சி உன்னை கண்காணிப்பதாக விக்ரம் சொன்னானே, அவன் இருக்கானா என்று பாரு.”

நான் ஜன்னல் திரைச்சீலைகள் பின்னால் ஒளிந்து இருந்து பார்த்தேன். “ஆமாம் அவன் இங்கே தான் இருக்கான்.”

“அப்படியா? சரி நீ உடுத்திகிட்டு வா இன்றைக்கு அவனை ஒரு வழி பண்ணிடுவோம்.”

“இதோ கா இன்னும் சற்று நேரத்தில் ரெடி ஆகிடுறேன். முதலில் ஒரு குளியல் போற்றுகிறேன்.”