நான் சாப்பிட்டு முடிக்கவும் அப்பாவும் அங்க வர …அவரும் சற்று தள்ளாடியபடிய வந்தார்
அந்த M*A அவரோட driver ஒருவரை arrange பண்ணி எங்களை வீட்டில் விடும் படி சொன்னார் …
போகும் போது வண்டியின் கதவைத் திறக்க …அப்பா அந்த M*A வை கூப்பிட்டு …சார் next week என் மகனோட 22 வது பிறந்தநாள் …இதுவரைக்கும் நான் யாரையும் இன்வைட் பண்ணுனது கிடையாது ..ஆனா நீங்க கண்டிப்பா வரணும் ..என்று அவர் கையை பிடித்து ..கெஞ்சி அழைக்க
இதை கேட்டதும் அம்மாவும் அவரும் ஒருத்தர் ஒருத்தரை பார்த்து சிரித்தார்கள்
ஒரு வழியாக நாங்க கிளம்பி வந்து ..வீடு வந்து சேர்ந்தோம் …
—
—
—
—
—
—
–
–
மறுநாள் காலையில் …
அப்பா ..வீடே அதிரும் அளவிற்கு கத்த….
கிச்சனில் சமைத்து கொண்டுருந்த அம்மா அவசரத்தில் ஓடி வெளியே வர…
உள்ளே தூங்கி கொண்டுருந்த நானும் .அடித்து பிடித்து ..வெளிய வர
அப்பா லோகநாதன் பேபிரில் எதையோ பார்த்து சந்தோஷத்தில் தள்ளி கொண்டுருந்தார்
என்னங்க ஆச்சு எத பார்த்து இப்படி சந்தோஷ் படுறீங்க …என்று பதற்றத்துடன் கேட்க
அப்பா சிரிச்சிகிட்டே அவர் கையில் இருந்த news paper ஐ எங்களிடம் காமிக்க …அதில்
நாங்க அந்த M*A வேல் உடன் எடுத்த புகைப்படம் front பேஜ் இல் ..இருந்ததை கண்டு …வாசித்தோம்
சென்னை கிழக்கு மாவட்ட $$$ .கட்சியின் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் வேல் , சென்னை தியாகராயநகரில் உள்ள க்சிக்ஸ் அலுவலகத்தில் நடை பெற்ற 75 ஆண்டு விழாவை நடத்தி வைத்தார்
இதை முன்னிட்டு அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் திரு . லோகநாதன் , அவரது மனைவி லட்சுமி அவர்களின் மகன் ஜீவா , அவர்களை கவுரவித்தார் ….*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************.*************
டேய் …நானும் சும்மா எதோ விளையாட்டுக்கு சொல்லுவாருனு பார்த்தா நிஜமாவே அவர் சொன்னதை செஞ்சிட்டாரு டா .. அம்மா கண்ணுலயும் அதே சந்தோஷம் போங்க ..
எங்கள் நெருங்கி உறவினர்கள் , நண்பர்கள் என எல்லோரும் எங்களுக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்ல
அன்றைய நாள் …முழுக்க எங்கள் வீடு விழாக்கோலம் போல் சூழ்ந்திருக்க , எல்லோரும் குடும்பத்தோடு சொகுசு ஹோட்டலுக்கு போகி ..சாப்டுட்டு , துணி கடைக்கு போகி ஆளுக்கு ஒரு டிரஸ் எடுத்தபடி வீட்டுக்கு வந்தோம் , அன்றைய நாள் எங்கள் குடும்பத்துக்கு மறக்க முடியாத நாளாக அமைஞ்சது
