பிருந்தா அம்மா கிட்டே பேசினேன் அவங்க ஒரு முக்கிய கேஸ் பார்க்க போயி இருக்காங்க வந்துடறேன் நீ பரிசோதனைகளை செய்து கிட்டு இருன்னு சொன்னாங்க வா என் கிளினிக் போகலாம் என்றார். அதுக்கு தானே வந்து இருக்கா அதனால் அவர் பின்னால் சென்றா. வீட்டு வெளி வாசலை தாண்டி பக்கத்தில் இருந்த ஒரு அறையை கஜேந்திரன் திறந்து பிருந்தாவை உள்ளே அழைத்து சென்று அவளிடம் பிருந்தா கதவை மூடி விடுகிறேன் இல்லைனா அம்மா கிளினிக் திறந்துட்டாங்கன்னு நோயாளிங்க வர ஆரம்பிச்சு விடுவாங்க என்று சொல்ல அவர் சொல்லுவது சரியாக இருந்ததால் பிருந்தா சரி டாக்டர் என்றாள்.
கதவை மூடி விட்டு வந்த கஜேந்திரன் பிருந்தாவின் விரல்களை அழுத்தி பிடித்து ரத்த ஓட்டம் எப்படி இருக்கு அடுத்து கண்களை பார்த்து நாடி பார்த்து ரத்த அழுத்தம் பார்க்க பிருந்தா கொஞ்சம் அலுப்பானாள். டாக்டர் இதையே எத்தனை முறை பார்க்க போறீங்க என்று கேட்டும் விட்டா. அவள் சலிப்பு கஜேந்திரனுக்கு ஏதோ உணர்த்த சரி பிருந்தா நான் கேட்கற கேள்விகளுக்கு மறைக்காம பதில் சொல்லுவியா என்றார். பிருந்தா சரி என்று தலை அசைக்க கஜேந்திரன் உங்க வீட்டிலே உனக்கு முழு சுதந்திரம் இருக்கா என்று கேட்க பிருந்தா இருந்தது என்று சொல்லி நாக்கை கடித்து கொள்ள கஜேந்திரன் பார்த்தியா மறைக்காம பேசுவேன்னு சொல்லிட்டு முதல் கேள்விக்கே பொய் சொல்லற என்றதும் பிருந்தா சாரி டாக்டர் என்று தலையை குனிந்து கொண்டா. கஜேந்திரன் அவள் மனசில் ஏதோ ஒரு கவலை இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு அவள் கையை ஆதரவா பிடித்து பிருந்தா என்னை டாக்டர் என்று பார்க்க வேண்டாம் உன் நண்பனா நினைச்சு சொல்லு என்ன பிரச்னை என்றார்.
