விருந்தும்பல் Part 3 160

மருது ” லட்சுமி, இனிமே நான் உன்ன பாக்க வரமாட்டேன்” என கண்கள் கலங்க கூறிவிட்டு எழுந்தான்.

அதிர்ச்சியான லட்சுமி ” என்னாச்சு என் திடிர்னு இப்படி எல்லாம் பேசுறீங்க ?”

மருது ” அப்பா எனக்கு பொண்ணு பாத்துட்டாரு லட்சுமி, அவரை எதிர்த்து என்னால எதுமே பண்ண முடியாது ?”

லக்ஷ்மியின் தலையில் இடி இறங்கியது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய ” நீங்க நம்ம விஷயம் பத்தி உங்கள் வீட்டுல பேசுறேன்னு சொன்னேங்களே இப்ப இப்படி சொல்லுறீங்க.. நீங்க இல்லேன்னா நான் செத்துடுவேன்”

மருது லக்ஷ்மியின் தோலை பற்றி அவளை தூக்கியான் அவளது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு ” லட்சுமி நான் அப்பாகிட்ட நம்ம விஷயத்தை சொல்லிட்டேன் அவர் ஒதுக்க மாட்டேங்கிறாரு, அவரை பத்தி உனக்கே தெரியும் அவரை மீறி நாம எதாச்சிம் செஞ்சா அவரு நம்மள உயிரோடையே விடமாட்டாரு”

லட்சுமி பதில் கூற முடியாமல் மருதுவை கட்டி அணைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். மருது நெஞ்சை கல் ஆக்கிக்கொண்டு லட்சுமி கைகளை பற்றி இழுத்து அவளிடம் இருந்து விலகி அழுதுகொண்டே நடக்க தொடங்கினான்.

இதுதான் அவர்களின் கடைசி காதல் சந்திப்பு. அதன் பிறகு 3 மாதத்தில் மருதுவும் திருமணம் முடிய. லட்சுமிக்கும் அடுத்த வருடம் திருமணம் முடிந்தது.