அங்கே அர்ச்சனா வாய், கை எல்லாம் கட்டப்பட்டு பெட்டில் மயங்கிய நிலையில் கிடந்தாள்.
“அர்ச்சனா, அர்ச்சனா” கன்னத்தில் தட்டினேன்.
வெளியே சென்று இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தெளித்தேன்.
“அர்ச்சனா, அர்ச்சனா எழுந்திரு”
கண்களை மெல்ல திறந்து பார்த்தவள் என்னை பார்த்த உடனே “ஓ” வென்று அழுதாள்.
“அக்கா, சங்கரும் அவனோட அம்மாவும் சேர்ந்து என்னை கடத்தி வச்சி இருக்காங்க”
“எனக்கு தெரியும் அர்ச்சனா”
“என்னை முழுசாவே கட்டி தான் போட்டு வச்சி இருந்தாங்க” கட்டி பிடித்து கொண்டு அழுதாள்.
“ஐ க்னோ அழாதே”
“பாலன் மாமா எங்கே”
“சங்கர் பாலன் உன்னை ரேப் பண்ணி கொலை பண்ணின மாதிரி மாத்திட்டான். நாளைக்கு காலையிலே தீர்ப்பு. நாம இப்போ உடனே போகணும்”
“பாலன் மாமா எந்த தப்பும் பண்ணல, எந்த தப்பும் பண்ணல” மீண்டும் ஓலமிட்டு அழுதாள்.
“ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் போட்டு அழாதே அர்ச்சனா, ஷேக் முழிச்சுட போறான்”
“ஷேக்கா, யாரு”
“உன்னை சங்கர் ஒரு ஷேக் கிட்ட வித்துட்டான். இப்போ அவனோட ரூம்ல தான் இருக்கோம். அவனுக்கு நிறைய ஆல்கஹால் ஊத்தி கொடுத்து இருக்கேன்”
“சரி அக்கா, அவங்க எனக்கு எப்போவுமே மயக்க மருந்து கொடுத்துகிட்டே இருப்பாங்க. நான் எப்போ இங்கே வந்தேன்னு கூட தெரியாது”
“டோன்ட் ஒர்ரி அர்ச்சனா. இனி எந்த கவலையும் இல்லை. வா போகலாம்” அவளை கூட்டி கொண்டு அந்த ரூமின் கதவை திறந்த உடன் கதவருகே நின்று கொண்டு இருந்த ஷேக் எனக்கு பளார் என்று ஒரு அறைவிட நான் தூரமாக போய் விழுந்தேன்.
அர்ச்சனா அவனை இறுக்கி பிடித்தாள் அவன் ரொம்பே சுலபமாக அதில் இருந்து விலகினான்.
நான் உதவி கேட்கலாம் என்று நினைத்து வேகமாக அரை கதவை நோக்கி “ஹெல்ப்” என்று கத்தி கொண்டே ஓடினேன்.
“வித்யா ஸ்டாப்”
அரை கதவு கிட்டே நெருங்கிவிட்டேன்.
“வித்யா நீ கதவை திறந்த இவளை ஷூட் பண்ணிடுவேன்” அர்ச்சனாவின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து இருந்தான்.
ஷேக் என்னை பார்க்க, நான் அர்ச்சனாவை பார்த்தேன் அவள் வெளியே ஓடிவிடு என்பது போல கண்களால் சைகை செய்தாள்.
வித்யா
ஷேக் ரூம் கதவை திறந்தாள் அர்ச்சனாவை கொன்றுவிடுவேன் என்று அவள் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டிக்கொண்டு இருந்தான். அர்ச்சனா இங்கே இருந்து ஓடி விடும் படி எனக்கு கண்களால் சைகை செய்தாள். உண்மையில் அந்த ஒரு நொடி ஓடிவிடலாம் என்று தான் தோன்றியது.
“அவளை கொன்னுடாதே. நான் ஓட மாட்டேன்”
“ஹ்ம்ம் கதவை லாக் பண்ணிட்டு இங்கே வா”
அவன் சொன்னவாறே கதவை லாக் பண்ணிவிட்டு அவன் அருகே வந்தேன்.
“ரெண்டு சேராயும் எடுத்து ஒண்ணா போடு”
என்னையும் அர்ச்சனாவையும் முதுகுப்புறமாக ஒன்று சேர்த்து விட்டு அங்கே இருந்த கயிறை கொண்டு இறுக்கி கட்டினான்.
உடனே வேகமாக தன்னுடைய போனை எடுத்து டயல் செய்தான்.
“டேய் பாடி கார்டு உனக்கு எதுக்கு சம்பளம். உனக்கு எல்லாம் தனி ரூம் கொடுத்து இருக்கவே கூடாது. சீக்கிரம் ரூமுக்கு வா”
இரண்டே நிமிடத்தில் 7 அடி உயரத்தில் மலைமாடு போன்ற ஒருவன் வந்தான்.
“நீங்க தானே பாஸ் பாருக்கு போறேன்னு என்னை என்னோட ரூமுக்கு போக சொன்னீங்க”
“சரி எத்தனை மணிக்கு கார் வரும்”
“6 மணிக்கு”
மணியை பார்த்துவிட்டு “இன்னும் 2 மணி நேரம் இருக்கு, அது வரைக்கும் பாதுகாப்பா வெளியே நில்லு”
“சரி பாஸ்” என்று சொல்லிவிட்டு கிளம்பியவனை “பைலட், கிட்ட ஸ்பெஷல் கார்கோ ஒன்னு இல்லை ரெண்டுனு சொல்லு”
“எஸ் பாஸ்” அவன் போனை எடுத்து டயல் செய்துகொண்டே வெளியே போனான்.
“என்னடி என்னையே ஏமாத்திட்டு போகலாம்னு பார்த்தியா. சங்கர் இவளை விக்கிறப்போவே இவ இந்தியாவை பொறுத்தவரைக்கும் செத்துட்டான்னு தான் சொல்லி வித்தான். பாலன் மேல இவளோட கொலை பழி போட்டதையும் சொன்னான்”
கையில் வைத்து இருந்த கண்ணை டேபிளில் வைத்தான்.
“நேத்து ராத்திரி உன்னை பார்தப்போவே தெரியும், இவளை காப்பாத்த தான் வந்து இருக்கேன்னு. எதுவரைக்கும் போறேன்னு பார்க்க தான் சும்மா உன் கூட சேர்ந்து நடிச்சேன். நான் எல்லாம் ஒரு பாட்டில் ஸ்காட்ச் குடிச்சாலே தெளிவே நிப்பேன் ஒரு கிளாஸ் ஒயின் கொடுத்து என்னை ஏமாத்திட்டு போகலாம்னு பார்த்தியா. எனக்கு எல்லாம் இவ மேல ஒரு இன்டெரெஸ்ட்டும் இல்லை எங்க அப்பன் கிழவன் தான் கேட்டான். இப்போ செலவே பண்ணாம நீயும் வந்து மாட்டிக்கிட்ட. இனி நீங்க ரெண்டு பேருமே எனக்கும் என்னோட அப்பனுக்கும் செக்ஸ் அடிமைங்க தான்”
“கனவுல தாண்டா” அர்ச்சனா துப்பினாள்.
“ஹாஹாஹா உன்னை மாதிரி நெறய பேரு பார்த்து இருக்கிறேண்டி, பாலைவனத்துல ஒரு நாள் காய போட்டா தானா வழிக்கு வருவே. சரி நான் ஒரு மணி நேரமாச்சும் தூங்கணும். பியூட்டி ஸ்லீப். நீங்க கூட தூங்குங்க இல்லைனா எல்லாம் சீக்கிரமா தொங்கிடும்”
அவன் பெட்டில் படுத்தான்.
“அக்கா நீங்க ஏன் ஓடல”
“உன்னை கண்டிப்பா சுட்டு இருப்பான் அர்ச்சனா”
“ஐயோ சுட்டு இருந்தா என்ன. ஓடி போய் போலீஸ் கூட்டி வந்து இருந்தா என்னோட டெட் பாடி வச்சி கூட பாலன் மாமாவை காப்பாத்தி இருக்கலாம்.”
“நோ அர்ச்சனா, உன்னை பழி கொடுத்து ஒன்னும் அவரை மீட்க வேண்டாம்”.
“ஏய் சத்தம் போடாம தூங்குகடி” ஷேக் கத்தினான். நான் இருவரும் பேசுவதை நிறுத்த அறையே நிசப்தம் ஆனது.
“டப் டப் டப்”
கதவு தட்டப்பட்ட போது தான் அனைவருமே விழித்தோம். நானும் அர்ச்சனாவும் கூட கண்ணயர்ந்து விட்டோம்.
ஷேக் எழுந்தவுடன் மணியை பார்த்தான். மணி 6 ஆகிடுச்சு ஏர்போர்ட் போக கார் வந்துடுச்சு. கடைசியா ஒரு தடவை ஊரை பாத்துகிட்டு ஊரோட காற்றை சுவாசித்து கொள்ளுங்க. இனிமேல் முழிக்கிறப்போ எங்க ஊருல தான்” என்று ட்ராயரில் எதையோ தேடினான்.
“டப் டப் டப்”
“அட இவன் வேற அவசரத்துக்கு பொறந்தவன். மயக்க மருந்தை எடுக்கறதுக்குள்ளே தட்டிகிட்டி இருக்கான்”
“டப் டப் டப்”
“ஒத்த இன்னைக்கு நீ செத்தடா” ஷேக் கடுப்பாகி மயக்க மருந்து தேடுவதை நிறுத்திவிட்டு வேகமாக போய் கதவை திறக்க “டமால்” என்ற சத்தம் கேட்க நானும் அர்ச்சனாவும் அந்த பக்கம் திரும்பினோம் .
“பொத்” என்று சத்தத்துடன் ஷேக் பறந்து வந்து கீழே விழ அங்கே “ஹாய் லேடிஸ்” என்று வெரோனிகா நின்று கொண்டு இருந்தாள்.
“வெளியே குண்டன் ஒருத்தன் இருந்தானே வெரோனிகா”
“இதோ” அவனையும் இழுத்து வந்து எங்கள் இருவரின் கட்டையும் அவிழ்த்து விட்டாள்.
“நல்ல வேலை ரூம் நம்பர் சொன்னே வித்யா. இல்லைனா இவளோ ஈஸியா இருந்து இருக்காது”
“வெரோனிகா வா கிளம்பலாம்” நான் அங்கே இருந்த ஷேக்கின் துப்பாக்கியை எடுத்து வைத்து கொண்டே கூப்பிட்டேன்.
“பாலனோட ஜட்ஜ்மென்ட் 11.30 மணிக்குனு நினைக்கிறன். அதனாலே நீங்க ரெண்டு பேரும் உடனே கிளம்புங்க. நான் இவனுங்க ரெண்டு பேரையும் ப்ரொபேரா கம்பி எண்ண வச்சிட்டு வரேன்” அவளுடைய கார் சாவியை கொடுத்தாள்.
“தேங்க்ஸ் வெரோனிகா”
“இங்கேயே நிக்காதீங்க, கிளம்புங்க இன்னும் 5.30 மணி நேரம் தான் இருக்கு”
கிளம்பிய போது “அர்ச்சனா, இவன் கிட்ட இருந்து சங்கருக்கு எந்த மெஸ்ஸஜும் போகல, நீ வரது அவனுக்கு பெரிய ஷாக்கிங் ஆக இருக்க போகுது. எனக்கு அதை வீடியோ எடுத்து வை”
“ஸ்யூர்” அர்ச்சனா சிரித்து கொண்டே சொல்ல இருவரும் வெரோனிகாவின் காரை எடுத்து கொண்டு பெங்களூரை நோக்கி விரைந்தோம்.
பாலன்
கோர்ட்டில் தீர்ப்புக்காக போலீஸ் ஜீப்பில் வந்து இறக்கிவிடப்பட்டேன். என்னுடைய லாயர், வித்யா என்று யாரையுமே காணவில்லை.
தூரத்தில் இருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்த சங்கர் என்னருகே வந்தான்,
“என்னையே ஜெயில்ல போடா பார்த்தல்ல, எப்படி உனக்கே ஆப்பு வச்சேனா. மக்கள் எல்லாம் உனக்கு தூக்கு தண்டனை கொடுக்கனும்னு போராடிட்டு இருக்காங்க, அதனாலே ஆயுள் தண்டனை கிடைச்சா கூட உனக்கு கம்மி தான்”