“ஓ.. என்ன சொன்னாங்க..?”
“நீயும் அசோக்கும்.. ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்ளோ ப்ரியமா இருக்கீங்க.. எவ்ளோ சந்தோஷமா மேரேஜ் லைஃபை என்ஜாய் பண்றீங்க.. எல்லாம் அடிக்கடி பெருமையா சொல்லி பேசிட்டு இருப்பா..”
“ம்ம்ம்…” சொல்லும்போதே என் மனம் சற்று குறுகுறுத்தது.
“ஹ்ஹ்ஹஹ்ஹா.. ஆக்சுவலா.. உங்களைப் பத்தி பேசுறப்போ.. எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரும்..” அவர் ஒரு சிரிப்புடனே அப்படி சொன்னார்.
“சண்டையா.. ஏன்..?” நான் குழப்பமாக கேட்டேன்.
“ஆமாம்..!! ரேணு உன்னைப் பத்தி பெருமையா சொல்லுவா.. நான் அசோக்கை பத்தி பெருமையா சொல்லுவேன்.. உங்களுக்குள்ள யாரு பெஸ்ட்ன்னு எங்களுக்குள்ள சும்மா ஒரு ஜாலி சண்டை..!!”
“ஓ..!!” உடனே என் முகம் லேசாக சுருங்க, அதை அவர் பட்டென புரிந்து கொண்டார்.
“ஸாரி பவி.. டோன்ட் மிஸ்டேக் மீ..!! எனக்கு உன்னைப் பத்தி எதுவும் தெரியாது.. அசோக்கைத்தான் நல்லா தெரியும்.. அதான் அவனைப் பத்தி பெருமையா சொல்லுவேன்..!! மத்தபடி.. ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ..!!”
“சேச்சே.. அதெல்லாம் நான் தப்பா எடுத்துக்கலை..”
நான் புன்னகையுடன் சொல்லவும், அவர் சற்றே அமைதியானார். நல்ல அகலமான, சிரித்த மாதிரியான முகம் அவருக்கு. எந்த நேரமும் இப்படி புன்னகையுடன்தான் இருப்பாரோ என்று தோன்றிற்று. சில வினாடிகள் அங்கே நிலவிய அமைதியை குலைத்தவாறு அவர் பேச ஆரம்பித்தார்.
“அசோக்கை எனக்கு ஒரு அஞ்சு வருஷமா தெரியும் பவி.. ரொம்ப ரொம்ப நல்ல பையன்..!! வயசு வித்தியாசம் இல்லாம ஃப்ரண்ட்ஸ் மாதிரிதான் எங்க பழக்கம்..!!”
“ம்ம்ம்..”
“வாரம் ஒரு தடவையாவது எனக்கு கால் பண்ணி பேசிருவான் தெரியுமா..? பேசினா.. முக்கால்வாசி நேரம் உன்னைப் பத்தித்தான் பேசிட்டு இருப்பான்..!! உன்னை பாராட்டுவான்.. திட்டுவான்.. கேலி பண்ணுவான்.. நீ சொன்னதை நெனச்சு சிரிப்பான்.. உனக்காக கவலைப்படுவான்..!! ஆனா.. என்ன பேசினாலும்.. அதுல உன்மேல அவன் வச்சிருக்குற அன்பு தெரியும்..!!”
“ம்ம்ம்..”
உன்னை பாத்து ரேணுவுக்கு.. என் பக்கத்துல இருக்கணும்னு ஆசை வந்துச்சுனா.. அதே ஆசை எனக்கு அசோக்கைப் பாத்து வந்தது..!! அதனாலதான் இந்தியா வந்துடுங்கன்னு ரேணு சொன்னப்ப.. உடனே நான் ஒத்துக்கிட்டேன்..!! ஆக்சுவலா நாங்க ரெண்டு பெரும்.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்..!!”
“அய்யயோ.. தேங்க்ஸா.. நாங்க என்ன அப்டி பெருசா பண்ணிட்டோம்..?”
“ஹ்ஹாஹ்ஹா.. நீங்க என்ன பண்ணுனீங்கன்னு உங்களுக்கே தெரியாது..!! மெக்கானிக்கலா போயிட்டு இருந்த எங்க லைஃப்ல.. உங்களைப் பாத்தப்புறம் ஒரு புது சந்தோஷம் வந்திருக்கு..!! எங்களுக்கு கொழந்தை இல்லைன்ற கவலைதான்.. எங்க லைஃப் அந்தமாதிரி மெக்கானிக்கலா மாறுனதுக்கு காரணம்..!! ஆனா.. இனிமே நாங்க அதை ஒரு பெரிய விஷயமா நினைக்கப் போறதில்ல.. உங்களை மாதிரி நாங்களும் எப்பவும் சந்தோஷமா இருக்கப் போறோம்..!!”
“ம்ம்ம்ம்..”
“இன்னும் கொஞ்ச நேரத்துல கெளம்பி.. எங்க சொந்த ஊர் போறோம் பவி.. அப்புறம்.. அப்டியே பத்து நாள் மூணாறு, வயநாடுன்னு ஊர் சுத்தப் போறோம்.. செகண்ட் ஹனிமூன்..!!” சொல்லிவிட்டு அவர் ரேணுகாவை பார்த்து கண்ணடிக்க, அவள் புதுப்பெண் மாதிரி ‘ச்சீய்…!!!’ என்று வெட்கப்பட்டாள்.
“சந்தோஷமா போயிட்டு வாங்க..” நானும் நிறைந்த மனதுடன் சொன்னேன்.
“ம்ம்.. அப்புறம் இன்னொரு மேட்டர் பவி..” அவர் சொல்ல,
“எ..என்ன..?” நான் ஆர்வமாக கேட்டேன்.
“அந்த பேக் ஃபுல்லா என்ன இருக்கு தெரியுமா..?” சற்றுமுன் ரேணுகா தூக்கி வந்த பையை சுட்டிக்காட்டி அவர் கேட்டார்.
“அதுக்குள்ளே என்ன இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும்..?” நான் ஒரு இலகுவான புன்னகையுடனே கேட்டேன்.
“ஹ்ஹ்ஹா.. அதுக்குள்ளே இருக்குறதுலாம் நான் ஃபாரீன்ல இருந்து வாங்கிட்டு வந்த திங்க்ஸ்னு சொல்லலாம்.. வேற மாதிரியும் சொல்லலாம்..”
“வேற மாதிரின்னா..?”

Iloveyou jayar