ஒரு நாள் கூத்து 2 125

“என்ன கஷ்டப்பட்டிருக்க போறீங்க..? ‘உன் பக்கத்துலயே எனக்கு ஒரு வீடு பாரு ரேணு..’ன்னு அவகிட்ட வழிஞ்சுருப்பீங்க.. அவளும் உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாம எல்லாம் பண்ணிக் கொடுத்திருப்பா..!!”

“ஓஹோ..?? சரி.. அப்டியே இருந்துட்டு போகட்டும்.. உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்..!! பேச்சை விடு..!!”

“விடுறேன்.. வேற வீடு எப்போ போறோம்னு சொல்லுங்க.. விடுறேன்..!!”

“இங்க பாரு.. இந்த வீடும், வேலையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. கம்ஃபர்ட்டபிளா இருக்குது..!! நீ காரணம் இல்லாம கத்துறதுக்காகலாம் நான் கஷ்டப்பட்டுட்டு இருக்க முடியாது..!!” அவர் சற்றே கடுமையாக சொல்ல, எனக்கு சுரீர் என கோபம் வந்தது.

“யாரு..??? நான் கத்துறனா..??? நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கெளம்பி உக்காந்திருப்பேன்.. நீங்க அவகூட குடிச்சு கூத்தடிச்சுட்டு வருவீங்க..? நான் எதுவும் சொல்ல கூடாது..?? அப்டித்தான..? சொன்னா.. கத்துறேன்னு சொல்வீங்க..!!” இப்போது நான் நிஜமாகவே கத்தினேன்.

“ஹேய்.. ஆபீஸ்ல திடீர்னு அரேஞ்ச் பண்ணிட்டாங்கம்மா.. க்ளையன்ட்லாம் வந்திருந்தாங்க.. நீ வரலைன்னா நல்லாருக்காதுன்னு..” அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

“அந்த ரேணுகா சொன்னாளா..?” நான் பட்டென கேட்டேன்.

“ம்ம்.. அவதான என் பாஸ்..?”

“அப்போ.. என்னை விட உங்களுக்கு அவதான் முக்கியம் இல்ல..??”

“ப்ச்..!! அறிவில்லாம பேசாத பவி.. ரேணுகா மேல அப்டி என்ன கோவம் உனக்கு..?”

“ஹ்ஹா.. யாரு..? நான் அறிவில்லாம பேசுறனா..? அவதான் அப்டிலாம் பேசுவா..?”

“அவ பேசுவாளா..? என்ன பேசுவா..?”

“ம்ம்ம்ம்.. கட்டுன புருஷனை கண்டவங்க கூடவும் கம்பேர் பண்ணிப் பேசுவா.. என் புருஷன் சரியில்லைன்னு எல்லார்கிட்டயும் போய் சொல்வா.. வேற யாராவது நல்ல புருஷன் கெடைக்க மாட்டாங்களான்னு ஏங்குவா..” நான் ஓரக்கண்ணால் அவரை பார்த்தபடி சொல்லவும், அவருக்கு மொத்தமும் சட்டென புரிந்து போனது. உடனே சீறினார்.

“வாயை மூடு பவி.. ரேணுகாவைப் பத்தி என்ன தெரியும் உனக்கு..?”

“ஓஹோ.. அவளைப் பத்தி சொன்னா.. உங்களுக்கு கோவம் பொறுக்கலையோ..? நல்லாத்தான் மயக்கி வச்சிருக்கா..!!”

அவ்வளவுதான்..!! அவருடைய ஆத்திரம் எல்லை மீறியது..!! என் கன்னத்தில் அறைய கையை ஓங்கியவாறு கத்தினார்.

“வாயை மூடுன்னு சொல்றேன்லடி..?? பல்லை உடைச்சிடுவேன்..!!”

விழிகளை அகலமாய் திறந்து, ரவுத்திரமாய் ஒரு பார்வை பார்த்தபடி என்னை அறைய கையை ஓங்கிய என் கணவரை பார்த்ததும், என்னால் எழுந்த துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் இன்ஸ்டண்டாய் ஒரு அருவி உற்பத்தியாகி, பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது. ஆத்திரம் மொத்தமும் அடங்கி, இப்போது பரிதாபமான குரலில் சொன்னேன்.

“அறைங்க.. ஏன் நிறுத்திட்டீங்க..? அவளுக்காக என்னை அடிக்கிற அளவுக்கு வந்துட்டீங்கல்ல..?”

இப்போது அவருடைய முகம் பட்டென மாறியது. ரவுத்திரம் இருந்த இடம் முழுக்க, இப்போது என் மீதான காதல் வந்து ஒட்டிக் கொண்டது. ஓங்கிய கையை படக்கென கீழே இறக்கினார். அவரும் கண்கள் கலங்க என்னை பார்த்தவாறு, அதே கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தபடி.. அன்பும், வருத்தமும் கலந்த குரலில் சொன்னார்.

“ஐ..ஐயோ.. ஸாரி பவிம்மா.. ஸாரிடா..!!”

“பேசாதீங்க.. போங்க.. அவதான உங்களுக்கு முக்கியம்.. அவகிட்டயே போங்க..!!”

அழுகையும், ஆத்திரமுமாய் சொல்லிவிட்டு நான் எழுந்து உள்ளே ஓடினேன். படுக்கையறைக்குள் நுழைந்து பொத்தென மெத்தையில் விழுந்தேன். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். மனதெல்லாம் தாங்க முடியா வேதனை..!! அவருடைய அழகு முகத்தில் இப்படி ஒரு ரவுத்திரம் தாண்டவமாடியதையும் இன்றுதான் முதன்முதலாய் காண நேரந்தது..!! எவளோ ஒருத்திக்காக என்னை அறைய கையோங்கி விட்டாரே..? என்னைவிட அவள்தானா முக்கியம் அவருக்கு..??

“பவி.. என்னம்மா நீ..??” அவர் கேட்டுக்கொண்டே என் தோள் மீது கை வைத்தார்.

“என்னை கொஞ்ச நேரம் நிம்மதியா அழவாவது விடுங்க.. போயிடுங்க..” நான் சீறினேன்.

“ஸாரி பவிம்மா.. நான் உன்னை அடிக்க வந்தது தப்புதான்.. மன்னிச்சுடுடா.. ப்ளீஸ்…!!”

“ஒன்னும் வேணாம்.. போங்க..!!”

“ஹேய்..”