ஒரு நாள் கூத்து 2 126

“போகலை..!!”

“நான்தான் ஸாரி கேட்டுட்டன்ல..?”

“ஸாரி கேட்டுட்டா..?”

“இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்னு சொல்றேன்ல..?”

“இனிமேலா..? இப்போ ஏன் அப்படி பண்ணினேன்னுதான் எனக்கு கோவம்..!!”

“தெரியாம பண்ணிட்டேன் சாமி.. தப்புதான்..!! எல்லாம் அந்த அன்பரசிதான் வந்து என்னை கொழப்பிட்டு போயிட்டா..!!”

“அன்பரசியா.. அவ எங்க இங்க வந்தா..?” அவருடைய குரலில் இப்போது கோபம் குறைந்து ஆர்வம் அதிகமாகியது.

“மதியம் வந்தா..!! இந்தப்பக்கம் எதோ வேலை இருந்ததாமாம்..!! புதுசா எதோ கோர்ஸ் படிச்சாளாம்.. உங்க கம்பெனில எதுவும் ஜாப் ஆப்பர்ச்சூனிட்டி இருக்குமான்னு கேட்டா..!! அதான்.. அவர்கிட்டயே பேசுன்னு சொல்லிட்டு நான் உங்களுக்கு கால் பண்ணினேன்.. ரொம்ப நேரம் என்கேஜ்டாவே இருந்தது..!!”

“உடனே உனக்கு சந்தேகம் வந்துடுச்சாக்கும்..?”

“எனக்கு இல்ல.. அவளுக்கு..!!” நான் சொன்னதும் அவர் ஒருமாதிரி வித்தியாசமாக என்னை பார்த்தார். எனக்கு அந்த பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்டேன்.

“ஏன் அப்படி பாக்குறீங்க..?”

“இல்ல.. நீ அவ்ளோ நல்லவளா ஆயிட்டியான்னு பாக்குறேன்..”

“ப்ச்.. வெளையாடாதீங்க..!! நெஜமாவே நான்கூட எதுவும் நெனைக்கலை.. அவதான்.. ஏதேதோ சொல்லி.. எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணு வச்சுக்கோன்னு சொன்னா..”

“ஓஹோ..?? வேற என்ன சொன்னா..?”

“வேற என்ன சொன்னா.. ஆங்.. அப்புறமா உங்ககிட்ட பேசுறேன்னு சொன்னா..!!”

“எதுக்கு..?”

“அவ ஜாப் விஷயமா..!!” நான் சொல்ல, அவர் கடுப்பானார்.

“ஜாப்பா..? என் வீட்டுக்குள்ளயே பூந்து எனக்கு ஆப்பு வச்சிட்டு போயிருக்கா.. அவளுக்கு ஜாப்பு வேறயா ஜாப்பு..???” அவர் ஒருமாதிரி வடிவேலு ஸ்டைலில் சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹ்ஹ்ஹ்ஹஹா ஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹா..!!!!”

“ஜாப்லாம் ஒன்னும் கெடயாது.. போக சொல்லு அவளை..!!” அவர் எரிச்சலாக சொல்ல,

“ஐயோ.. பாவங்க அவ..!!” நான் இப்போது இரக்கமான குரலில் சொன்னேன்.

“என்ன பாவம்..? எனக்கென்னவோ இவ இப்டி இருக்குறதாலத்தான்.. அவ புருஷன் அப்டி பண்ணிட்டான்னு நெனைக்கிறேன்..!!”

“ச்ச்சே.. அவ புருஷன் அப்டி பண்ணினதாலதான்.. இவ இப்டி இருக்குறா..!!”

“என்னவோ போ..!!”

“ப்ச்.. பாவங்க அவ..!! கைல புள்ளையை வேற வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறா..!! உங்க கம்பெனிலயும் பாருங்க.. உங்க பிரண்ட்ஸ்கிட்டயும் கேளுங்க..!! அவளுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தா.. கஷ்டத்துல இருக்குறவளுக்கு நல்ல ஹெல்ப் பண்ணின மாதிரி இருக்கும்..!!”