ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்..!!!!! எல்லாம் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் எனக்கு பிடித்து என்ன பிரயோஜனம்..? அவருக்கல்லவா பிடிக்க வேண்டும்..? பிடிக்குமா..??? ‘பாக்கலாம்’ என்று எனக்குள்ளேயே சொல்லிவிட்டு கண் சிமிட்டிக் கொண்டேன். ஷவர் வால்வை திருகினேன்.
குளித்து முடித்து வெளியே வந்தேன். மேனியை அதிகம் உறுத்தாத அந்த மாற்று புடவையை அணிந்து கொண்டேன். மூக்கை துளைக்கும் செயற்கை வாசனை திரவியங்கள் அவருக்கு பிடிக்காது. ஒருமுறை போனில் சொல்லியிருக்கிறார். அதனால் அந்த மாதிரி எதுவும் முயலவில்லை. மல்லிகைப்பூ மட்டும் தலைநிறைய அள்ளி வைத்துக் கொண்டேன்.
“பட்.. பட்.. பட்.. பட்..” கதவு தட்டப்பட நான் சென்று திறந்தேன்.
“என்னடி ரெடியாயிட்டியா..? மாப்ளை ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கார்டி..”
சொல்லிக்கொண்டே அம்மா உள்ளே நுழைந்தாள். கையிலிருந்த பால் தம்ளரை என்னிடம் கொடுத்தாள். நான் அதை கையில் வாங்கிக்கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் ஒருமுறை என்னை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பாத்தாள். முகத்தில் புன்னகை பரவ, பெருமிதமாக சொன்னாள்.
“என் கண்ணே பட்ரும் போல இருக்குடி..” அம்மா நெட்டி முறிக்க, நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.
“ஹ்ம்ம்.. புருஷன் மனசு கோணாம நடந்துக்குறதுதான் பொண்ணுக்கு லட்சணம் பவித்ரா..”
“ம்ம்ம்..””அவர் மனசுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கோ.. சரியா..?”
“ம்ம்ம்.. சரிம்மா..”
“அவரை ஏதோ புது மனுஷனா நெனைக்க கூடாது.. உன்னை தொட்டு தாலி கட்டுன புருஷன்னு நெனைப்பு இருக்கணும்.. சொல்றது புரியுதா..?”
“ம்ம்ம்..”
“சரி சரி.. அவர் காத்துக்கிட்டு இருப்பார்.. நீ கெளம்பு.. எந்த ரூம்னு தெரியும்ல..? அந்த எதுத்தாப்ல..”
“ம்ம்ம்.. தெரியும்..”
சொல்லிவிட்டு நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். இருட்டாய் இருந்த ஹாலில் நுழைந்து பொறுமையாய் நடந்தேன். மற்ற அறைகள் இருட்டாய் அமைதியாய் இருக்க, ஒரே ஒரு அறையில் மட்டுந்தான் பளிச்சென விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த அறையை நெருங்கியவள், திறந்திருந்த கதவை தள்ளி உள்ளே நுழைந்தேன்.
மெத்தையில் அசோக் அமர்ந்திருந்தார். ஆப்பிள் கடித்துக் கொண்டிருந்தவர் என்னை பார்த்ததும், அவசர அவசரமாய் அதை விழுங்கிவிட்டு எழுந்தார். பாதி கடித்த ஆப்பிளை தட்டில் வைத்துவிட்டு, ‘ஹி..ஹி..’ என அவர் அசடு வழிய, நான் எழுந்த சிரிப்பை அடக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன்.
“வா.. ப..பவி..”
அவர் தட்டுத்தடுமாறி சொன்னார். நான் திரும்பி கதவை மூடி தாழிட்டேன். கையிலிருந்த பால் தம்ளரை அவரிடம் நீட்டினேன்.
“ம்ம்ம்ம்.. இந்தாங்க..”
அவர் வாங்கிக் கொண்டார். எனக்கு அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது. படாரென அவருடைய காலில் விழுந்தேன். அவர் பதறிப் போனார்.
“அ..அய்யோ… என்ன பண்ற பவி நீ.. எந்திரி..” டம்ளரை அருகில் வைத்து விட்டு என் தோள் தொட்டு எழுப்ப முயன்றார்.
“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..”
“அதெல்லாம் எனக்கு பண்ண தெரியாது.. நீ மொதல்ல எந்திரி..”
“சும்மா.. நல்லாருன்னு சொல்லுங்க.. போதும்..”
“சரி நல்லாரு..!! எந்திரி..!!”
எழுந்தேன். நான் திடீரென காலில் விழுந்ததை அவர் எதிர்பார்க்கவில்லை போல. அவருடைய முகத்தில் இன்னும் அந்த பதற்றம் தெளிவாக தெரிந்தது. எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. ‘மனைவி தன் காலில் விழுந்து கிடக்கவேண்டும் என்று நினைப்பவன் அல்ல என் கணவன்..!!’ என்ற எண்ணம்தான் அந்த சந்தோஷத்திற்கு காரணம். இப்போது அவர் சற்றே சலிப்பான குரலில் கேட்டார்.
“என்ன பவி நீ..? கால்லலாம் விழுந்துக்கிட்டு..?”
“இதெல்லாம் சம்பிரதாயம்.. கண்டிப்பா பண்ணனும்னு அம்மா சொல்லி அனுப்பிச்சா..”
“ஓஹோ..? வேற என்ன சொன்னாங்க.. உன் அம்மா..?” அவருடைய குரலில் இப்போது லேசான கிண்டல் தொனித்தது.
“அ..அந்த பால்…”
“வேணுமா உனக்கு..?”
“இல்ல..”
“அப்புறம்..?”