ஒரு நாள் கூத்து 302

நான் மெல்லிய குரலில் சொல்லி முடிக்க, அசோக் சற்றே பெருமிதமாக என்னைப் பார்த்து புன்னகைத்தார். ரேணுகாவும் புன்னகைத்தாள். ஆனால் அந்த புன்னகையில் இருந்தது பெருமிதமா அல்லது கேலியா என்று எனக்கு புரியவில்லை. நான் முகத்தில் சலனமில்லாமல், அவளுடைய ப்ளேட்டை பார்த்தபடி சொன்னேன்.

“உருளைக்கெழங்கு நல்லாருக்காக்கா.. இன்னும் கொஞ்சம் வைக்கவா..?”

“ம்ம்..”

நான் பொரியல் அள்ளி அவளுடைய ப்ளேட்டில் வைக்க, அவள் எடுத்து ருசி பார்த்தாள்.
“நல்லாருக்கு.. ஆனா..” என்று தயங்கினாள்.

“என்ன..?”

“அசோக்குக்கு கொஞ்சம் காரசாரமா இருந்தாதான் புடிக்கும்ல.. இதுல சுத்தமா காரமே இல்ல..?”

“அவருக்கு புடிச்சா.. அப்டியே பண்ணிடனமா..?” நான் சற்றே எள்ளலான குரலில் கேட்டேன்.

“பின்ன..? புருஷனுக்கு எது பிடிச்சிருக்கோ.. அதை பண்றவதான நல்ல பொண்டாட்டி..??” அவளும் கேலியாகவே கேட்டாள்.

“புருஷனுக்கு எது புடிச்சிருக்குன்றதை விட.. எது நல்லதுன்னு பாத்து பண்றவதான் நல்ல பொண்டாட்டி..!!”

நான் பட்டென அப்படி சொன்னதும், ரேணுகா சற்றே திகைப்பாக என்னைப் பார்த்தாள். அப்புறம் எதுவும் பேச வாய் வராதவளாய், அமைதியாக அப்பளம் கடிக்க ஆரம்பித்தாள். அசோக் இப்போது இன்னும் பெருமிதமாக என்னைப் பார்த்தார். ஒருகையால் சோற்றையும், ஓரக்கண்ணால் என்னையும் விழுங்கியவாறு மெல்லிய குரலில் சொன்னார்.

“காரம் கொறைச்சலா இருந்தாலும்.. டேஸ்ட்ல ஒன்னும் கொறை இல்ல பவி..!!”

இப்போது நானும் அவரை காதலாக பார்த்தேன். கண்களாலேயே அவருக்கு நன்றி சொன்னேன். அதை பார்த்த ரேணுகா அவரிடம்,

“பார்டா..!! பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க மாட்டேன்ற..? ம்ம்ம்.. நடத்து நடத்து..!! பவி கொடுத்து வச்சவதான்..!! எனக்கும் ஒருத்தர் வாச்சிருக்காரே.. நான் சமைச்சதை சாப்பிட்டு.. நல்லால்லைன்னு சொல்லக்கூட இதுவரை வாயைத் தெறந்தது இல்ல..!!”

அவள் மறுபடியும் என் அசோக்கோடு அவள் கணவரை கம்பேர் செய்ய.. ‘ம்ம்ஹஹ்ம்ம்.. இவளை திருத்த முடியாது..’ என்று நான் மனதுக்குள் அவளை திட்டினேன். இவள் எப்போதும் இப்படித்தான்.. கொஞ்ச நேரம் கூட வாயை வைத்துக் கொண்டு சும்மா இர இயலாது..!! இந்த மாதிரி என் கணவருடன் அவள் கணவரை ஒப்பிட்டு பேசுவது எனக்கு எரிச்சலையே வரவழைக்கும். அதிலும் அந்த ஒப்பிடுதலில் எப்போதும் என் கணவரையே உயர்வாக அவள் சொல்வது.. எரிச்சலை இருமடங்காக்கும்..!! ‘அசோக்கை இவள் ரசிக்கிறாளோ..? அவர் மாதிரி தன் கணவர் இல்லை என்று எண்ணுகிறாளோ..? அசோக் கிடைத்திருந்தால் நன்றாயிருக்கும் என்று ஏங்குகிறாளோ..?’ என என் உள்மனம் என்னென்னவெல்லாமோ எண்ணம் கொண்டு குமையும்..!!

அவளோ அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.. அந்த மாதிரி பேசுவது என் மனதை எப்படி பாதிக்கும் என்ற அறிவும் இல்லை..!! நாளுக்கு நாள் அவளுடைய பேச்சு என் எரிச்சலை அதிகமாக்கிக் கொண்டே சென்றது. எத்தனை நாள்தான் நானும் பொறுப்பது..? ஒரு நாள் நேரிடையாகவே சொல்லிவிட்டேன்.

அன்று சண்டே.. அசோக்குக்கும் அவளுக்கும் ஆபீஸ் விடுமுறை..!! அதிகாலையிலேயே எழுந்திருந்த அசோக், மேல் ஃப்ளாட் பேச்சிலர் பையன்களுடன்.. எங்கள் அப்பார்ட்மன்ட்சுக்கு எதிரே இருக்கும் அந்த குட்டி மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார். நான் முதல் மாடி பால்கனியில் இருந்து என் கணவர் பேட்டிங் செய்யும் அழகை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இவள் வந்து சேர்ந்தாள். அசோக் அடித்த ஷாட் ஒன்றிற்காக, உற்சாகமாக கத்திக்கொண்டே வந்தாள்.

“வாவ்…. ஷாட்…!!!!!!!!!”

வாயெல்லாம் பல்லாக வந்தவளை பார்த்து நான் மெலிதாக புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தவாறு, கையில் இருந்த இரண்டு கப்களில் ஒன்றை என்னிடம் நீட்டிக்கொண்டே சொன்னாள்.

“பால் கொஞ்சம் மிச்சம் இருந்தது பவி.. ரெண்டு காபியா போட்டுட்டேன்.. இந்தா..”

“ஓ.. தேங்க்ஸ்க்கா..!!” நான் வாங்கிக் கொண்டேன். வாய் வைத்து கொஞ்சமாய் உறிஞ்சினேன்.

“கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கும் பரவாலையா..? அசோக்குக்கு காபி ஸ்ட்ராங்கா இருந்தாதான் புடிக்கும்.. அந்த நெனப்புலேயே போட்டுட்டேன்.. உன் டேஸ்ட் என்னன்னு தெரியலை..!! ஓகேவா..?”

அவள் சொல்ல.. எனக்கு பட்டென்று அவள் மீது எப்போதும் வரும் அந்த எரிச்சல் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. என் புருஷனுக்கு என்ன புடிக்கும்னு இவளுக்கு என்ன அக்கறை..??? ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், மெல்லிய ஆனால் தீர்க்கமான குரலில் சொன்னேன்.

அவருக்கு என்ன புடிக்குமோ.. அதுதான் எனக்கும் புடிக்கும்..!!”

“தேட்ஸ் நைஸ்..” என்று இளித்தவள், மைதானத்தில் பார்வையை வீசி கொஞ்ச நேரம் கிரிக்கெட் பார்த்தாள். அப்புறம் மீண்டும் ஆரம்பித்தாள்.

“ஹேய்.. பவி.. அசோக் போட்டிருக்குற அந்த டி-ஷர்ட் பாத்தியா..?”

“ம்ம்..”

“நல்லாருக்கா..?”

“ம்ம்.. நல்லாருக்கு.. ஏன்க்கா கேக்குறீங்க..?”

“அது என்னோட சாய்ஸ் தெரியுமா..? நானும் அவனும் போய்தான் அந்த டி-ஷர்ட் எடுத்தோம்..”

அவள் பெருமையாக சொல்ல, அவர் அந்த டி-ஷர்ட்டை கழட்டிப் போட்டதும் முதல் வேலையாக அதை எங்காவது தூரமாக தூக்கிப் போட வேண்டும் என்று நான் மனதுக்குள் முடிவு கட்டினேன். அவளோ என் மனநிலையை உணர்ந்தவளாக தெரியவில்லை. மேலும் எரிச்சல் மூட்டினாள்.

“என் வீட்டுக்காரருக்கு டி-ஷர்ட் போடுறதே புடிக்காது.. ‘போட்டுக்குங்க.. உங்களுக்கு நல்லாருக்கும்’னு.. எவ்ளோ கெஞ்சு.. ம்ஹூம்… முடியாதுன்னா முடியாது..!!”

அவள் சொன்னதைக்கேட்டு நான் புகைந்து கொண்டிருக்கும்போதே, கழுத்து வரை எழும்பி வந்த பந்தை அசோக் மட்டையால் ஓங்கி அறைய.. இவள் கிடந்தது இங்கு துள்ளினாள்.

“வாவ்… சூப்பர் ஷாட்.. இல்ல பவி..?”

“ம்ம்ம்..” என்றேன் நான் பற்களை கடித்துக்கொண்டு.

“அசோக்குக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்ல..? நல்ல இன்ட்ரஸ்ட் இல்ல..?”

“ம்ம்ம்..”

“நான் கூட என்னவோ நெனச்சேன்.. நல்லாவும் ஆடுறான்..!!”

“ம்ம்ம்..”

“அசோக்குக்கு கிரிக்கெட் மட்டும் இல்ல.. எல்லா ஸ்போர்ட்சுமே ரொம்ப இன்ட்ரஸ்ட்.. ஸ்போர்ட் பத்தி பேசுனா.. ரெண்டு பேரும் நேரம் போறது தெரியாம பேசிட்டு இருப்போம்..!!”

“ஓஹோ..?”

“ஹ்ஹாஹ்ஹா.. என் ஹஸ்பண்டுக்குத்தான் இதுலலாம் சுத்தமா இன்ட்ரஸ்டே கெடயாது.. ‘வெளையாட்டுலாம் சும்மா வெட்டி வேலை’ன்னு சொல்லுவார்.. நான் தலையில அடிச்சுக்குவேன்..!! அசோக் அந்த வகைல பெஸ்ட்பா..!!”

அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் என்னால் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இருக்க முடியவில்லை. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்..??? கேட்டு விட வேண்டியதுதான்.. ஆனால் நேரிடையாக, அவள் முகத்தில் அடிப்பது மாதிரி வேண்டாம் என்று தோன்றியது. எரிச்சலை மனதுக்குள் போட்டு அடைத்துக்கொண்டு, முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் கேட்டேன்.
உங்ககிட்ட ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?”

“எ..என்ன பவி.. சொல்லு..” அவள் இப்போது முகத்தில் குழப்ப ரேகை ஓட கேட்டாள்.

“புருஷன்றவன் ஒரு பொண்ணுக்கு எவ்வளவு முக்கியமானவன்..”

“ஆ..ஆமாம்..”

“புருஷன்ற அந்த உறவு.. எவ்வளவு புனிதமான உறவு..”

“ம்..ம்ம்ம்..”

“எங்கயோ பிறந்து.. எங்கயோ வளர்ந்து.. நம்மள அவங்க வாழ்க்கைல சேர்த்துக்கிட்டு.. அவங்க சுகதுக்கம்.. கஷ்ட நஷ்டம்லாம் ஷேர் பண்ணிக்கிட்டு.. நமக்கு புடிச்சதெல்லாம் தேடித்தேடி செஞ்சுக்கிட்டு.. நமக்காகவே ஓடிஓடி ஒழைச்சு.. ஓடா தேயுறாங்களே..?? பொண்டாட்டிக்கு புருஷன்றவன்தான் மொதல் புள்ளை.. புருஷனுக்கு கடவுள் கொடுத்த இன்னொரு அம்மாதான் பொண்டாட்டி.. அப்டின்லாம் சொல்றாங்களே..?? எவ்வளவு புனிதமான உறவுல அது..?”

“ம்ம்..!! ஆ..ஆனா.. நீ என்ன சொல்ல வர்றேன்னு…”

“அப்படிப்பட்ட புனிதமான உறவை கொச்சைப் படுத்துற மாதிரி.. உங்க ஹஸ்பண்டை யாராரோடவோ கம்பேர் பண்றீங்களே..? அது தப்பு இல்லையா..?”

நான் சொல்ல சொல்ல.. அவளுடைய முகம் பக்கென அதிர்ச்சியில் சுருங்கி சிறுத்துப் போனது. பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி திகைப்பாக என் முகத்தையே பார்த்தாள். நான் அதே அமைதியான குரலில் தொடர்ந்தேன்.

“எப்படி இருந்தாலும்.. என்ன கொறை இருந்தாலும்.. அவன் என் புருஷன்.. அவனை விட்டுக்கொடுக்க கூடாதுன்னு.. உங்களுக்கு தோணலையா..?”

நான் சொல்லிவிட்டு அவள் முகத்தையே கூர்மையாகப் பார்த்தேன். அவள் ஒருமாதிரி ஸ்தம்பித்துப் போயிருந்தாள். முகம் முழுதும் அதிர்ச்சியில் வெளிற ஆரம்பிக்க, அவளுடைய உதடுகள் படபடவென துடித்தன. கண்கள் கூட லேசாக கலங்கிய மாதிரி தோன்றியது. ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் உறைந்து போய் நின்றிருந்தாள்.

சுகக்குளியல் முடிந்து வெளியே வந்தோம். வேறு ஆடைகள் அணிந்து கொண்டு வெளியே கிளம்பினோம். அப்போது கூட அவருக்கு கிளம்ப மனமில்லை. ‘கண்டிப்பா போகனுமா..?’ என கண்சிமிட்டி கட்டிலை காட்டினார். அவருடைய முதுகைப் பிடித்து தள்ளி, அறையை விட்டு வெளியேற்றுவது பெரிய காரியமாக இருந்தது. காரிலேயே கொடைக்கானல் சுற்றக் கிளம்பினோம்.

போட்டிங் சென்று, ஒருவர் மீது ஒருவர் நீரிறைத்து விளையாடினோம். கோக்கர்ஸ் வாக்கில் ஒரு ஷால் போர்த்தி இருவரும் நடந்தோம். பல உயிர்களை பலிகொண்ட பசுமைப் பள்ளத்தாக்கை, பக்கத்தில் சென்று பார்க்க பயந்தோம். பனிமூட்டம் விலகும்வரை காத்திருந்து, பில்லர் ராக் ரசித்தோம். மாலை முழுதும் பூங்காவில், மலர்கள் ரசித்தவாறு மாறி மாறி மடியில் படுத்திருந்தோம். இரவு ஏழு மணிக்கெல்லாம் அறைக்கு திரும்பி, அடைந்து கொண்டோம்.

“பவி..”