புதிய முயற்சி – Part 3 87

த்ரியா சிரித்த முகத்துடன் அரேபிய குதிரை போல நடந்து வருவதை பார்த்த ஆருஷின் முகம் பேயறைந்தது போல மாறியது. இருந்தாலும் அடுத்த கணமே சுதாரித்துவிட்டு ஒரு வெற்று புன்னகையை உதிர்த்தான்.

மேடையில் வேக வேகமாக இன்னொரு இருக்கை த்ரியாவுக்கென வைக்கப்பட ஆருஷின் வலதுபக்கம் படத்தின் கதாநாயகி உட்கார்ந்து இருக்க த்ரியா ஆரூஸுக்கு இடது பக்கமாக உட்கார வைக்கப்பட்டாள். பின்னர் டைரக்ட்டர் பேசி கொண்டு இருந்த இடத்தில் இருந்து தொடர்ந்தார்.

“ஹாய் டியர்” த்ரியா ஆருஷ் காதில் மெலிதாக சொன்னாள்.

“நீ எப்படி வந்தே டியர்” ஆருஷ் அதிர்ச்சியை வெளிக்காட்டி கொள்ளாமல் கேட்டான்.

“என்ன டியர் ஆர் யூ சர்ப்ரைஸ்ட்” த்ரியாவின் முகத்தில் புன்னகை பூத்தது. அது காதல் கலந்த புன்னகையா அல்லது விஷமம் கலந்த புன்னகையா என்பதன் அர்த்தம் ஆரூஸுக்கு விளங்கவில்லை அதை யோசித்து கொண்டே த்ரியாவுக்கு பதில் அளிக்கவில்லை.

“என்ன டியர் சர்ப்ரைஸ் ஆகாம சாக் ஆகிட்டியா” மீண்டும் அவள் முகத்தில் அதே சிரிப்பு.

“டோட்டலி சர்ப்ரைஸ்ட் டியர்” என்று அவள் காதருகே சொன்னான்.

“குட் ஐ ஹோப் யூ லைக் சர்ப்ரைசஸ். இனி உனக்கு அப்பப்போ சர்ப்ரைஸ் கொடுக்க போறேன் டியர். மேரேஜ் லைப்ல அப்பப்போ பார்ட்னருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திட்டு இருந்தா தான் சுவாரஸ்யமா இருக்கும்னு ஒரு ஆர்டிகிள் படிச்சேன்”

“ஹ்ம்ம்” மீண்டும் ஒரு வெற்று புன்னகை விட்டான்.

அதன் பிறகு ஹஹீரோ, ஹீரோயின், த்ரியா, டைரக்டர், ப்ரோடுயூசர் என அனைவரும் குத்து விளக்கு ஏற்றி படத்தின் பூஜை முடிக்க பட்டது.

விழா முடிந்து ஆருஷிம் த்ரியாவும் கிளம்பும் வேலையில் த்ரியா ஆருஷின் கையை பிடித்து நிறுத்தினாள்.
“என்ன டியர்” ஆருஷ் கேட்டான்.

“அன்னைக்கு ஒரு ஸ்டில் போட்டோகிராபர் ட்ரோப் பண்ணினேன்னு சொன்னியே, அவ இங்கே இருக்காளா”

“எனக்கு எப்படி தெரியும் த்ரியா” கொஞ்சம் கடுப்புடன் கேட்டான்.

“டென்ஷன் ஆகாதே. அந்த படத்தோட காமெராமன் தானே இந்த படத்தோட டைரக்டர் அண்ட் காமெராமேன். தன்னோட ஸ்டில் போட்டோக்ராபர் எல்லாரையும் இன்வைட் பண்ணி இருக்க மாட்டாரா என்ன”

“…” ஆருஷ் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தான்.

“நான் போய் டைரக்டர் கிட்ட கேட்கவா ஆருஷ்” என்றாள்.

டைரெக்ட்டரிடம் இவள் போய் கேட்டால் இவன் தான் அவளை வேலைக்கே சேர்த்துவிட்டோம் என்கிற விஷயம் வெளியே தெரிந்து விடும் என்பதால் “அவரை டிஸ்டர்ப் பண்ணாதே த்ரியா, இரு நானே காட்டுறேன்”

கொஞ்சம் நேரம் தேடுவது போல பாவனை செய்துவிட்டு “அந்த பிங்க் கலர் பார்டர் இருக்க சாரீ” என்று அங்கே நின்று கொண்டிருந்த அனுவை காட்டினான். அவளை மேலும் கீழும் பார்த்த த்ரியா அதன் பிறகு ஒன்றுமே பேசவில்லை. ஆரூஸ் த்ரியா இருவரும் வீட்டிற்கு கிளம்பி வந்தனர்.

வீட்டிற்கு வந்தவுடனே த்ரியா தான் பேச்சை ஆரம்பித்தாள்.

“டைரக்டர் கிட்ட சொல்லி அந்த பெண்ணை வேலையை விட்டு தூக்க சொல்லு ஆருஷ்” த்ரியா கோபத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் சொன்னாள்.

“வாட்” அதை கேட்ட ஆருஷ் அதிர்ச்சி ஆனான்.

“ஜஸ்ட் இந்த படத்தை விட்டு தூக்க சொன்னதுக்கு எதுக்கு இவளோ ஷாக் ஆகுறே”

“அதில்ல த்ரியா, ஏன் திடிர்னு அப்படி சொல்லுறே”

“எனக்கு அவளை புடிக்கல”

“அவ யாரு என்னன்னே தெரியாது, அதுக்குள்ள எப்படி புடிக்காம போகும்”

“அதெல்லாம் அப்படிதான்”

“எக்ஸ்பிளேன் இட் டு மீ த்ரியா. வாளிட் ரீசனா இருந்தா நீ சொன்னதை கேக்குறேன்”

“எல்லா பெண்ணுக்கும் தப்பு நடக்க போகுதுன்னா நடக்க போகுதுன்னு ஒரு இன்ஸ்டின்க்ட் சொல்லிட்டே இருக்கும் ஆருஷ். இந்த பொண்ணை பார்த்தா எனக்கு அப்படி தோணுது”

“வாட் டூ யூ மீன்”

“இல்லை மச்சிலீக்ஸ்ல வந்ததை பார்த்ததில் இருந்து எனக்கு மூட் அப்செட்”

ஆருஷ் தன்னுடைய எதிர்ப்பை இப்போது தீவிரமாக காட்டவில்லை என்றால் த்ரியா தன்னுடைய டாமினன்ஸை ஆரம்பிப்பாள் என்று ஆரூசுக்கு தெரியும். அதனால் அவன் டாமினேட் செய்ய நினைத்தான்.