அதே கதையை தான் இருவரும் டிஸ்கஸ் செய்து அவன் புதிதாக இயக்கி இன்று 5 லட்சம் வியூஸ்.
“கார்த்தி, நீ கண்டிப்பா party வரணும், உன் கதை டா இது”
நான் சென்ற வார நிகழ்வுகளால் கொஞ்சம் சரியாக இல்லை. “முடிஞ்சா வரேன், கொஞ்சம் வேலை இருக்கு”
அந்த சனி வார இறுதி, அக்கா நான் இருவரும் வீட்டில் இருந்தோம், இயல்பாக பேசிக் கொள்வது போல நடித்தோம் எனினும் எனக்கு கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தது. திடீரென முடிவு எடுத்து பார்டிக்கு கிளம்பினேன்.
வெகு நாட்களுக்கு பிறகு இந்த party. முன்பெல்லாம் மாதம் ஒரு முறையாவது இருக்கும். கொஞ்ச நாள் அந்த குறும்பட போட்டி காரணமாக கலந்து கொள்ள வில்லை.
ஒரு அரை மணி நேரம் அவர்களோடு party enjoy செய்வதாக பேர் செய்து பின் ஒரு பியருடன் ஒதுங்கினேன்.
சிறிது நேரத்தில் “ஹாய் கார்த்திக்”
திரும்பினேன். ஒரு ஸ்லிம் இளம்பெண், அழகான முகம் நிறைந்த புன்னகையுடன் நின்றாள்.
“ஹாய்” என்றேன் எனக்கு அவளை சரியாக தெரிய வில்லை, ஏற்கனவே பார்த்தது போல இருந்தது. அவள் புரிந்து
“சாரி, நான் அபி, இந்த ஷார்ட் பிலிம் ல” எனக்கு தெரிந்தது. இதில் நாயகியாக நடித்தவள், இப்போது தான் நேரில் பார்க்கிறேன், படத்தில் புடவையில் பார்த்தது, நேரில் மிக ஸ்லிம் இன்னும் அழகாக இருந்தாள்.
“சாரி, சட்டுனு அடையாளம் தெரியல”
“இட்ஸ் ஓகே” என புன்னகைத்து.
“உங்களுக்கு என்ன எப்படி”
“ஹலோ, நான் உங்க ஷார்ட் பிலிம் எல்லாம், அந்த போட்டி முழுக்க பார்த்து இருக்கேன். Actually நீங்க தான் வின் பண்ணி இருக்கணும்”
அவளின் வார்த்தைகள் சற்று மகிழ்வைத் தந்தது. கொஞ்சம் நேரம் பேசியதில் அவளுக்கு என் மீதான ஒரு ஈர்ப்பு லேசாக புரிந்தது. மலையாளி, இன்னும் தன்னைப் பற்றிய சில தகவல்கள் சொல்ல ஆர்வம் இல்லாமல் கேட்டேன். இதுவே சென்ற மாதமாக இருந்தால் இந்த இளம்பெண்ணின் உரையாடல் என்னை ஈர்த்து இருக்கும். இப்போது ஏனோ தானோ என கேட்டேன், சட்டென “சாரி, நான் உங்களை ரொம்ப ஓவரா தொந்தரவு பண்றேன் ”
“அப்படின்னு இல்ல, ஐ ஆம் லிட்டில் டயர்ட்” என சங்கடமாக சொன்னேன்.
அவளும் “ஓகே, டேக் கேர்” என்று விலகினாள், நான் அவளை தெரியாமல் hurt செய்ததாக உணர்ந்தேன். இன்னும் சில பியர்களுக்கு பின் கிளம்பினேன். எப்போதும் ஒரு பியருக்கு மேல் அடிக்க மாட்டேன் முன்னர்.
அக்கா நான் வீடு திரும்பும்போது ஹாலில் என்னைப் பார்த்தாள், என் மீதான பியர் வாசனை அவளை சங்கடப் படுத்தியதை உணர்ந்து சில நிமிடம் கழித்து அவளிடம் விடை பெற்று ரூமுக்கு சென்றேன். அக்கா என்னைத் தொடர்ந்து வந்தாள். எனக்கு அக்கா ஏன் இன்னைக்கு அதிகம் குடித்தாய் என கேட்பாளோ என அவஸ்தை இருந்தது.
“கார்த்தி” என்றாள். நான் திரும்பினேன். தயக்கம் இருந்தது.
அக்கா என் கண்ணை, என் தயக்கத்தை பார்த்தாள். “குட் நைட்” என என்னை அணைத்து சொன்னாள். கூடவே எவ்வித கோபமும் இல்லாமல் அன்போடு என் தலையைக் கோதி “டேக் கேர்” சொன்னாள்.
அடுத்த நாள் காலையில் சட்டென அந்த பெண் அபி நினைவு வந்தது, அவளே தானாக வந்து என்னிடம் பேசி, தன்னைப் பற்றி தகவல்கள் சொல்லி, அவளை தான் சற்று அலட்சியமாக நடத்தி hurt செய்ததாக உணர்ந்தேன். நிஜமாகவே அவள் வசீகரமாக தான் இருந்தாள், ஹெலன் படத்தில் வரும் ஹீரோயின் அன்னா பென் போல.
அவளிடம் நான் நேற்று கொஞ்சம் நல்ல மூடில் இல்லை, அதனால் தான் உன்னிடம் சரியாக பேச முடிய வில்லை என்று சொல்ல எண்ணினேன். அவள் எண் கூட இல்லை, நண்பனிடம் கேட்கலாமா என்று கூட யோசித்தேன்.
ஆனால் எதிர்பாரா விதமாக அவனே கல்லூரியில் என்னிடம் வந்து கேட்டான்.
“கார்த்தி, எனக்கு ஒரு பெரிய ஹெல்ப்”
ஆச்சர்யம். பொதுவாக எப்போதும் சின்ன ஹெல்ப் என்று கேட்பதே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆரம்பமே பெரிய ஹெல்ப் என்று கேட்கிறான், எதோ ஒரு பெரிய சிக்கல் என்று தோணியது.
Author should have avoided her sleeping with juniors. It would have been better.