குறும்பு – Part 2 166

தனியாக அமர்ந்து அவன் டிரான்ஸ்ஃபர் செய்த ஷார்ட் பிலிம் விடியோ பார்க்க ஆரம்பித்தேன்.

உண்மையாகவே நன்றாக இருந்தது. சில காட்சிகள் மிக சிறப்பாக genuine ஆக எடுத்து இருந்தான். அக்கா மிக அற்புதமாக நடித்து இருக்க, அவன் ஹீரோவும் நன்கு செய்து இருந்தான். அவர்கள் இருவருக்கும் இடையே 7 வருடம் இடைவெளி, அக்கா அவனை விட மிக மூத்தவள் என்பது எங்கும் தெரிய வில்லை, சொன்னாலும் எவனும் நம்ப மாட்டான் அவ்வளவு இளமையாக இருந்தாள்.எங்கும் எந்த ஒரு முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை, ஸ்கிரிப்ட் படி 2 சொல்லி இருந்தாலும் இந்த 20 நிமிட படத்தில் 5 இடங்களில் கன்னத்தில் முத்தம் இடும் காட்சி இருந்தாலும் மிக கண்ணியமாக காதல் மட்டுமே இருந்தது. கண்களுக்கு சில க்ளோஸ் அப் ஷாட் அக்காவை தேவதை போல காட்டியது. அவனே சொன்னது போல இப்போது இருந்த BGM படு கேவலமாக பழையதாக இருந்தது.

முதல் பத்து நிமிடங்கள் பார்த்ததில் ஒரு இசைத் துணுக்கு கூட புதிதாக இல்லாமல், அங்கங்கே VTV பட இசை, ஒரிரு இடங்களில் யுவன், கொஞ்சம் ராஜா என எல்லாமே சினிமா படங்களில் இருந்து முழுக்க சுட்டது.

இசைக் கோர்வை மட்டுமே படத்தின் தரத்தை கீழே தள்ளியது. முழுக்க பார்த்து முடித்தேன். சக ஷார்ட் பிலிம் மேக்கர் ஆக எனக்கு படம் பிடித்து இருந்தது, எடிட்டிங் பக்காவாக செய்து நல்ல ஒரு இசையும் சேர்த்தால் கண்டிப்பாக ஒரு சிறந்த ரொமான்டிக் ஷார்ட் பிலிம் என தோணியது.

அவனை அழைத்து பாராட்டினேன். அவனுக்கும் மிக சந்தோசம் நானே பாரட்டியதில். கூடவே music சுமாராக கூட இல்லை, கண்டிப்பாக முழுக்க மாற்றினால் நல்லது என்றேன். “அண்ணா, செலவாகும் அதான் பார்க்கிறேன்”

“குமாரு, இப்போ இருக்கிறது எதோ கல்யாண ஆல்பம் போடுவாங்க இல்லையா ஒரு டெம்ப்ளேட் மாதிரி, அந்த லட்சணத்தில் இருக்கு, கம்மி செலவுல எவ்ளோ நல்லதா பண்ண முடியும் பாரு, நான் போன தரம் பண்ணின ஆளை refer பண்றேன். போய் பாரு, ஜோஸப், அவன் கொஞ்சம் கிராக்கி பண்ணுவான் பிஸி அப்படி, ஆனா உன் படத்தை பார்த்தா கண்டிப்பா பண்ணுவான்.”

“தாங்க்ஸ் அண்ணே” என்று மனமார சொன்னான்.

அந்த பையன் பிரவீன் அவனை நான் அடுத்த சில நாட்கள் காணவே இல்லை.

வீட்டில் அக்காவும் நானும் அடுத்த சில நாட்கள் ஒரு வித தயக்கம், தடுமாற்றம் உடனே பழகினோம், என்னால் அக்காவிடம் எதையும் கேட்க முடிய வில்லை. அவளும் எதுவும் சொல்ல வில்லை. கொஞ்சம் இயல்பு நிலைக்கு அந்த வார இறுதிக்குள் திரும்பினோம். ஆனால் எனக்கு உள்ளுக்குள் உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

அந்த வாரம் தான் என் ஃபைனல் இயர் ப்ரெண்ட் ஒரு பார்ட்டிக்கு அழைத்தான், அவன் இரண்டு மூன்று மாதங்கள் முன் செய்த குறும்படம் யூடியூப் சேனல் 5 லட்சம் பார்வைகளைத் தாண்டியது. அந்த மகிழ்ச்சியில் இந்த party நண்பர்கள் மட்டும் ஒரு 20 பேர் வரை அழைப்பதாக சொன்னான்.

அது நல்ல ஒரு காமெடி ஷார்ட் பிலிம், மிக சின்னதாக ஒரு 6 நிமிடம் ஓடக் கூடிய ஒன்று. சரியாக சொன்னால் எனது முதல் trial படத்தின், நான் 3 வருடம் முன்பு செய்த கான்செப்ட்.
அப்போது நான் கேமரா ஆர்வத்தில் ஒரு திருமண கேமரா நபரிடம் ஜாலிக்கு பணி செய்தேன். அப்போது தோணியது அது, எந்த செலவும் இல்லாமல் எனக்கு ஷார்ட் பிலிம் எடுக்க வருமா என செக் செய்ய எழுதி எடுத்த படம்.
கதை மிக simple, வீட்டில் பேசி நிச்சயம் செய்த மணமக்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ளும் கதை.
பெண்ணின் அப்பாவின் POV இல் வரும் கதை. அப்பா கேட்கையில் பெண் சொல்வாள், இத்தனை லட்சம், மடபம், சாப்பாடு, துணி மணி, செலவைக் குறைக்க தான் ஓடிப் போய் கல்யாணம் பண்ணியதாக.
பெண்ணின் அப்பா இதை தன் நண்பரிடம் சொல்வதாக, அந்த நண்பர் “உங்க பொண்ணு கிரேட் சார், உங்க செலவை மிச்சம் பண்ண ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டா” பெண்ணை புகழ்வதுபோல அதற்கு அப்பா “நீங்க வேற, அந்த செலவு பணம் 10 லட்சத்தையும் அவ அக்கவுண்ட் அனுப்ப சொல்லிட்டா!” என்பதாக கதை முடியும்.

திருமண விடியோ எடுத்துக் கொண்டு இருந்ததால் நிஜ பெண் மாப்பிள்ளையையே நடிக்க வைத்து எந்த செலவும் இல்லாமல் எடுத்தேன் அப்போது.

1 Comment

  1. Author should have avoided her sleeping with juniors. It would have been better.

Comments are closed.