அவன் அப்பா ராஜி வீட்டிற்கு சென்று கார்த்திக் ராஜியை விரும்புவதாகவும் அவனுக்கு ராஜியை கட்டி கொடுக்க சம்மதம் தெரிவிக்கும் படியும் தங்கையிடம் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.இதை கேட்ட ராஜிக்கோ உலகமே நின்று விடுவது போல்.யாரை வாழ்நாள் முழுவதும் பார்க்க கூடாது என்று இருந்தோமோ அவனுடனே நம் வாழ்வா.கடவுளே இது நடக்க கூடாது என்று மனதார வேண்டினால்.ராஜியின் அம்மா லக்ஷ்மிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை.அவளுக்கு ராஜியை கார்த்திக்கிற்கு கொடுக்க விருப்பம் தான்.ஆனால் தன் குடும்பத்துடன் சண்டை போட்டு இருபது வருடங்கள் பேசாமல் இருக்கும் தன் கணவனை எப்படி சம்மதிக்க வைப்பது என்று எண்ணி சரி அண்ணே கூடிய சீக்கிரமே நல்ல பதிலா சொல்றேண்ணே என்று கூறி அனுப்பி வைத்தாள்.
அதன் பின்பு இரண்டு வாரம் கழித்து கார்த்திக் அத்தையை தனியாக சந்தித்தான்.நான் ராஜியை சின்ன வயசில் இருந்தே லவ் பண்றேன்.எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்.நீங்க வேற யாருக்கோ அவள கட்டி தரதுக்கு எனக்கு கொடுங்க நான் அவள நல்லா பாத்துகுடுவென்.உங்கள என் அம்மா ஸ்தானத்துல வச்சிருக்கேன்.நீங்க என்ன சொல்றிங்கன்னு தான் எனக்கு முக்கியம்.மாமாவ பத்தி எனக்கு கவலை இல்ல.நீங்களும் இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்தத பத்தி பேச மாட்டிங்கனு நம்புறேன்.அப்புறம் உங்க விருப்பம்எ.என்று கூறினான்.
லக்ஷ்மியோ சிறிது நேர மௌனத்திற்கு பிறகு தீர்க்கமாக சொன்னால் எனக்கு சம்மதம் மாமா கிட்ட பேசி சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு.மத்த விஷயத்தை நான் அண்ணன் கிட்ட பேசிகிட்றேன்னு சொன்னால்.ப்ரெண்ட் வீட்டிற்கு சென்று விட்டு வந்த ராஜியிடம் நடந்தவற்றை சொல்லி அவளின் சம்மதத்தை கேட்டாள் லக்ஷ்மி.
அவளுக்கோ கார்த்திக்குடன் வாழ துளி அளவும் விருப்பம் இல்லை என்று அம்மாவிடம் எப்படி சொல்வது.சொன்னாலும் அதற்கான காரணத்தை கேட்டாள் தன் பழைய காதலால் என்று சொல்ல அவளுக்கு தைரியம் இல்லை.அதனால் எனக்கு சம்மதம் ஆனால் அப்பாக்கு பிடிக்கலனா வேண்டாம் என்று அப்பாவை பயன்படுத்தி கொண்டாள்.
ஆனால் லக்ஷ்மியோ தனது மூத்த மகளின் உதவியுடன் பல போராட்டங்களுக்கு பிறகு கணவனை சம்மதிக்க வைத்தாள்.தனது அப்பா இப்படி காலை வாறுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.இறுதியில் இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி கார்த்திக்கிடம் பேசிவது தான் என்று முடிவெடுத்து அவனிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்தால்.இருவரும் கோவிலில் சந்திக்க தேங்க்ஸ் ராஜி.இவ்வளவு நாள் கழித்து என்கிட்டே பேசினதுக்கு அப்புறம் கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கும் என்று சொல்லிவிட்டு அவளுக்கு பிடித்த டைரிமில்க் சில்க் chocholate நீட்டினான்.சடக்கென அதை பிடுங்கி வீசி விட்டு இதோ பாரு கார்த்திக் எனக்கு இதில் விருப்பம் இல்லை என்றும் அதனால் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடு.எங்க அம்மா சொன்னதால தான் நான் இதுக்கு ஒத்துகிட்டேன்.மத்தபடி உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கல.ப்ளீஸ் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடுனு சொன்னால்.சரி ராஜி என்மேல உனக்கு இருந்த கோவம் போயிருக்கும்,நீ மாறி இருப்பனு நினைச்சு தான் நா இதெல்லாம் பண்ணேன்.பட் நீ இன்னும் மாறவே இல்ல.ஆனால் நான் இன்னும் அதே கார்திக்கா அதே காதலோட தான் இருக்கேன்.இட்ஸ் ஓகே.இனி இந்த கல்யாணம் நடக்காது.இப்ப உடனே வீட்ல சொன்னா தேவை இல்லாத பிரச்சனை வரும்.ஸோ எல்லாம் நடக்கட்டும்.நாளைக்கு காலைல கல்யாணம் நடக்குற மாதிரி ஒரு சூழ்நிலை வந்தாலும் இன்னைக்கு நைட் நா நிறுத்திடுவேன்.கொஞ்சம் பொறுமையா இரு. தேங்க்ஸ் கார்த்திக் என்ன புரிஞ்சிகிட்டதுக்கு நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் சாரி என்றாள்.இட்ஸ் ஓகே பிரெண்ட்ஸ் என்றான் கார்த்திக்.சிரித்து கொண்டே நேரமாகிடுச்சு கிளம்பனும் போலாமா என்றாள் ராஜி.நான் சொன்னதுக்கு பதில் சொல்லவே இல்ல என்று கேட்டான் கார்த்திக்.சிரித்து கொண்டே பிரெண்ட்ஸ்.பட் நோ லவ் நோ பெயின் என்று சொல்லிவிட்டு சென்றால் ராஜி.
பின்பு இரு வீட்டாரும் பேசி முடித்து ஒரு நல்ல நாளில் பேசி முடித்து கல்யாண தேதியும் நிச்சயதார்த்த தேதியும் முடிவானது.நிச்சயதார்த்தம் அன்று ராஜி கார்த்திக்கிடம் என்ன பண்ண போற நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.எதாவது பண்ணு.எனக்கு ரொம்ப பயமா இருக்குனு சொன்னால்.கவலையே படாத ராஜி ப்ரீயா இரு.அதுக்கான பிளான் எல்லாம் நான் பண்ணிட்டேன்.என்னனு மட்டும் கேக்காத.சஸ்பென்ஸ்.ஆமா உன்கிட்ட ஒன்னு கேக்கனுன்னு நினைச்சேன்.இந்த கல்யாணத்த நிறுத்த சொல்லிட்ட.எப்படியும் அடுத்து உனக்கு கல்யாண பேச்ச வீட்ல எடுப்பாங்க.அப்பவும் வேண்டாம்னு சொல்லிடுவ.லைப் புல்லா இப்படியேவா இருக்க போறனு கேட்டான்.தெரியல போற வரைக்கும் போகட்டும் அப்புறம் பாத்துக்கலாம்னு ராஜி சொல்ல ஹே எப்படினாலும் எவனையாவது கல்யாணம் பண்ணிக்க போற அது ஏன் நானா இருக்க கூடாது.ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கலாம்லனு கார்த்திக் கேட்டான்.
ஹலோ நீ பேசுறதெல்லாம் பார்த்தா கல்யாணத்தை நிறுத்த எந்த ஐடியாவும் இல்லன்னு நினைக்கறேன்.மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறுதா.பிரெண்ட்ச்னு சொல்லிருக்க நியாபகம் இருக்கட்டும்னு ராஜி சொன்னால்.ஹே அப்படி இல்லப்பா சும்மா கேட்டான்.சத்தியமா இந்த கல்யாணம் நடக்காது போதுமா.என்னமோ கார்த்திக் உன்னதான் ரொம்ப நம்பி இருக்கேன்.பாத்துகோனு சொல்லிட்டு சாப்பிட சென்றார்கள்.ஒருவாராக கல்யாண நாளும் நெருங்க நாளை கல்யாணம்.சொந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள்.இங்கு ராஜியோ பயத்துடன் கானபட்டால்.கார்த்திக்கிற்கு போன் செய்து என்னாச்சு கல்யாணத்த நிறுத்திடுவேன்னு சொல்லி சொல்லி கல்யாண நாளும் வந்துட்டு உன்ன போய் நம்பினேன் பாரு என்ன சொல்லனும்னு சொன்னால்.கவலை படாத நாளைக்கு கல்யாணம் கண்டிப்பா நடக்காது அதுக்கு நான் .என்னமோ கார்த்திக் உன்னதான் ரொம்ப நம்பி இருக்கேன்.பாத்துகோனு சொல்லிட்டு சாப்பிட சென்றார்கள்.ஒருவாராக கல்யாண நாளும் நெருங்க நாளை கல்யாணம்.சொந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள்.இங்கு ராஜியோ பயத்துடன் கானபட்டால்.கார்த்திக்கிற்கு போன் செய்து என்னாச்சு கல்யாணத்த நிறுத்திடுவேன்னு சொல்லி சொல்லி கல்யாண நாளும் வந்துட்டு உன்ன போய் நம்பினேன் பாரு என்ன சொல்லனும்னு சொன்னால்.கவலை படாத நாளைக்கு கல்யாணம் கண்டிப்பா நடக்காது அதுக்கு நான் பொறுப்பு.குழப்பிக்காம போய் தூங்கு குட் நைட்னு சொன்னான்.ஆனால் ராஜிக்கோ தூக்கமே வரவில்லை.என்ன செய்வதென்றும் தெரியவில்லை.கார்த்திக்கை நம்புவதை தவிர வேறு வழி இல்லை என்று உணர்ந்தவளாய் மனதை சமாதான படுத்தினாள்.கல்யாண நாள் காலை அவளை எழுப்பி அலங்காரம் செய்ய அவள் அக்கா தங்கை எல்லாரும் இருக்க இவளோ நடப்பது எல்லாம் கை மீறி போய் விட்டது.கார்த்திக் ஏமாற்றி விட்டான்.பாவி என்று மனதுக்குள் அழ தொடங்கினால்.முஹூர்த்த நேரம் நெருங்க நெருங்க அவள் சிலை போல ஆனால்.அவள் கண்கள் அவளையும் அறியாமல் கண்ணீரை வடித்தது.மணமேடையில் அவள் அமரும் போது அவள் கார்த்திக்கையே பார்க்க கார்த்திக் அவளை பார்க்காமல் மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தான்.
கெட்டிமேளம் முழங்க ஐயர் தாலி எடுத்து கொடுக்க அதனை அவளது கழுத்தில் கட்டினான் கார்த்திக்.நடந்தவற்றை நினைத்து பார்த்து கொண்டிருந்தவளுக்கு திடீரென விக்கல் வர பெட்டை விட்டு எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்தால்.படுப்பதற்கு முன் சோபாவை பார்க்க அங்கு கார்த்திக் தூங்கி கொண்டிருந்தான்.ராஜியும் லைட்டை ஆப் செய்து விட்டு அப்படியே தூங்கி போனாள்.பத்து நிமிடம் கழித்து திரும்பிய கார்த்திக் எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்து சோபாவில் படுத்தான்.ராஜியை பார்க்க அவள் அப்போது தான் தூங்கியிருந்தாள்.அவள் முகத்தில் ஒற்றை முடிகள் மட்டும் காற்றில் ஆடிகொண்டிருந்தது.அவளை பார்த்து கொண்டிருக்கும் போதே அவனுடைய நினைவுகள்ப பின்னோக்கி சென்றது…………
அப்போது கார்த்திக்கு வயது 6,அவனுடைய அப்பா அம்மாவிற்குள் அடிக்கடி சண்டை வரும்.இவனும் பயங்கர சேட்டை செய்வான்.அதனால மொத்த கோவமும் இவன் மேல திரும்பும்.அடிவிழகூடிய நேரத்துல கரெக்டா பாட்டி வீட்டுக்கு ஓடி வந்துடுவான்.அவனுடைய பாட்டிக்கு கடைசி பையன் ஒருத்தன் பிறந்த உடனே இறந்துட்டான்.அதனால கடைசி பையன் தான் தனக்கு பேரனா பிறந்துருக்கன்னு இவன பாசமா வளத்தாங்க.அதுவும் இல்லாம அவுங்க குடும்பத்துல முதல் ஆண் வாரிசு.அதனால கார்த்திக் மேல தனி பாசம் எல்லாத்துக்கும்.அப்ப ராஜிக்கு மூணு வயசு.ஒவ்வொரு வருடமும் மே மாதம் பள்ளி விடுமுறைக்கு கார்த்திக்கின் குடும்பத்துடன் செலவிடுவது லக்ஷ்மியின் வழக்கம்.அப்போதெல்லாம் தாயம் விளையாடுவது,ஆற்றில் சென்று குளிப்பது, ஒன்றாக இருந்து கார்ட்ஸ் விளையடுவதுன்னு சந்தோசமாக இருப்பார்கள்.அப்போதெல்லாம் கார்த்திக்கு ராஜின்னா தனி பிரியம்.அவளோட அக்கா கூட சண்டை போட்டுடே இருப்பான்.எல்லா நேரமும் ராஜி கார்த்திக் பக்கம் தான் இருப்பாள்.ஒவ்வொரு வருட விடுமுரை முடிந்த பின்பும் அடுத்த விடுமுறைக்கு காத்திருப்பான்.அவன் 10த் படிக்கும் போது அவள் கார்த்திக்கின் வீட்டிற்கு வந்திருந்தாள்.அப்போது ஒரு நாள் ராஜியை சைக்கிளில் வைத்து கடைக்கு கூட்டி சென்றான்.அதை பார்த்த அவனது நண்பர்கள் அவனை கூப்பிட்டு சைகையில் கிண்டல் செய்ய அவன் அதை கண்டு கொள்ளாத மாதிரி சென்று விட்டான்.அதை கவனித்த ராஜி ஏன் உன் பிரெண்ட்ஸ் அப்படி சொல்றாங்கன்னு கேட்டாள்.அதற்கு கார்த்திக் அவுங்க சும்மா கிண்டல் பண்ணுவாங்க நீ கண்டுகிடாதன்னு சொன்னான்.
அதன் பின்பு அவனுடைய நண்பர்களிடம் சென்று ஏன் மானத்த வாங்குரிங்கடா.அவ இருக்கும் போது எதுக்குடா கிண்டல் பண்றீங்க.அவ என்னனு கேக்**னு சொன்னான்.அதற்கு அவனுடைய நண்பன் டேய் அக்காவ விட்டுட்டு தங்கச்சிய கரெக்ட் பண்ற போலன்னு கிண்டல் செய்தார்கள்.பதின் வயதை தொட்ட அவனுக்கு அப்போது தான் உரைத்தது.தான் இவ்வளவு நாளும் அவளுடன் சிறுபிள்ளைதனமாக பழகியிருக்கிறோம் என்று.உடனே சுதாரித்து கொண்டவன் நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.நாங்க பிரெண்ட்ஸ் அவ்வளவுதான் வரட்டுமா என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.அவனுக்கு ராஜியின் மேலான முதல் நேச விதை அன்றில் இருந்து துளிர் விட ஆரம்பித்தது.அதன் பிறகு ராஜி அவன் அருகில் வரும் போதெல்லாம் அவள் மேல் உரசாதவாரு தள்ளி இருந்து கொள்வான்.அவளிடம் பேசும் போதெல்லாம் அவள் முகம் அவனை பேச விடாமல் செய்தது.இதை எதுவுமே புரிந்து கொள்ள முடியாத ராஜியோ அவனிடம் இயல்பாக பழகினால்.இவ்வாறாக நாட்கள் செல்ல அவன் 12th முடித்துவிட்டு டிப்ளோமா சேர்ந்தான்.அவனுடைய அம்மா வழி பாட்டி வீட்டில் இருந்து தங்கி படிக்க வீட்டில் முடிவானது.அந்த ஊர் ராஜியின் வீட்டிற்கு மிக அருகில் உள்ள ஊர்.அப்போது தான் இருவரின் கைகளிலும் போன் இருக்க தினமும் சாட்டிங்கில் பல மணிநேரம் உரையாடுவார்கள்.சனி,ஞாயிறுகளில் அவளுடைய அக்கா போனை எடுத்து கொள்வாள்.அப்போது அவளுடைய அக்கா அவனிடம் பேசி கொண்டிருப்பாள்.சரியாக ஒவ்வொரு நாளும் 6 மணிக்கு ஆரம்பிப்பார்கள்.இரவு 10 மணி வரை நீளும். 10 மணிக்கு பின்பு அவளுடன் அன்றைய நாளின் நிகழ்வுகளை வார்த்தைகளாக டைரியில் எழுதுவான்.இப்படியாக கார்த்திக்கிற்கு காலேஜ் முதல் வருடம் முடிய ராஜி 11 படித்து கொண்டிருந்தாள். அப்போது அவனுடைய காலேஜ் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கார்த்திக்கை ப்ரொபோஸ் செய்ய சொல்ல இவனுக்கோ அவள் 11 படிக்கிற பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்.தேவை இல்லாம அவள் மனசை கெடுக்க வேண்டாம்னு நினைத்தான்.கடைசியாக அந்த வருட நியூ இயர் அன்று அவளிடம் ப்ரொபோஸ் செய்தான்.