என் காதல் கண்மணி 72

கார்த்திக் தனது மூன்றாவது அத்தையின் மடியில் படுத்திருக்க கல்யாண அலுப்பில் தூங்கி போனான்.அப்போது நான்கு அத்தைகளும் ராஜியிடம் பொறுப்பாக இருக்குனும்.கோவபட கூடாது.பொறுமை ஒரு பொண்ணுக்கு ரொம்ப முக்கியம்.உன் மாமியார் குணம் கொஞ்சம் மோசம் தான்.அதனால பொறுமையா அனுசரிச்சி போகணும்.கார்த்திக் அவ வயித்துல போயா பிறக்கணும்.இந்த வயசுல எவ்ளோ கஷ்டம்.அவனோட மனசுக்கு தான் இப்ப நல்லா இருக்கான்.நல்லபடியா அவனை பாத்துக்கோனு சொல்லி முடிச்சாங்க.அதற்கு ராஜி கண்டிப்பா சித்தி.கார்த்திக் மாதிரி ஒருத்தன் கிடைக்க நா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.அத்தையை பத்தி கவலை படாதிங்க.அவுங்கள நா சமாளிச்சிப்பேன். என்று கூறினால்.

மகளின் இந்த பேச்சை கேட்ட தாய் லக்ஷ்மிக்கோ ரொம்ப சந்தோஷம்.கடைசியில் அன்று இரவே அனைவரும் கிளம்ப ராஜியை தனியாக சந்தித்த லீலாவும்.ப்ரியாவும் கார்த்திக் உன்ன சின்ன வயசுல இருந்து ரொம்ப லவ் பண்றான்.அப்புறம் ஏன் இப்படி செஞ்சான்னு தான் எனக்கு தெரியல.தயவு செஞ்சு அவனை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுனு சொல்லவும் அக்கா எங்களுக்குள எந்த பிரச்சனையும் இல்ல.நாங்க எல்லாத்தையும் நேற்றே எல்லாத்தையும் பேசி தீத்து எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சுட்டோம் என்று கூறினால் ராஜி.

அவளின் இந்த வார்த்தையை கேட்ட இருவரும் மகிழ்ச்சியில் அவளை கட்டி தழுவினர்.சந்தோசமா இருன்னு சொல்லிட்டு கணவருடன் சென்றனர்.அவர்கள் சென்ற உடன் நாம் பேசியதை கார்த்திக் தான் அவர்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.அதனால் தான் இருவரும் தனியாக கூப்பிட்டு சொல்லி விட்டு போவதாக அவளுடைய மனம் தவறாக கணக்கு போட்டது.அவனுடைய charecter இப்படிதான்.என்ன செஞ்சாவது அவன் நினைச்சத அடைஞ்சிடனும்.ஆனால் நான் அவனுக்கு கிடைக்க மாட்டேன் என்று நினைத்து கொண்டு அனைவரும் சென்ற பின் இரவு தனது துணிகளை வைக்க ஆயத்தமானால்.

ரூமிற்கு சென்று தனது சூட்கேசை எடுத்து சேலைகளை ஒவ்வொன்றாக பெடில் எடுத்து வைத்தாள்.பின் கப்போர்டில் இடம் இருகிரதாணு பார்த்தவளுக்கு ஆச்சர்யம்.அங்கு அவளுடைய துனிகளுக்கென இரண்டு ஷெல்ப் காலியாக இருந்தது.ஏன் இப்படி பண்றான்னு குழம்பினால்.இவன் ஏன் இப்படி நடிக்கிறான்னு எண்ணி கொண்டே துணிகளை அடுக்கி வைத்தால்.

அன்று இரவு இருவருக்கும் பேசா இரவாய் அமைய அப்படியே தூங்கி போனார்கள்.மறுநாள் இருவரும் திருசெந்தூர் கோவிலுக்கு சென்று வருமாறு கூற இருவரும் செல்வதாக முடிவானது.ஆனால் ராஜிக்கோ கார்த்திக்குடன் தனியாக செல்வதை நினைத்தாள் கடுப்பாக இருந்தது.தவிர்க்கவும் முடியவில்லை.போதாதற்கு லக்ஷ்மி வேறு கண்டிப்பாக செல்ல வேண்டும்.இதுவும் ஒரு வித சம்பிரதாயம் என்று போன் செய்து கூறினால்.

கார்த்திக்கும் ராஜியின் மனதை அறிந்தவனாக வேலையை காரணம் காட்டி தவிர்க்க முயன்ற போது பெரியவர்கள் கட்டாயம் செல்ல வேண்டும் என கூற வேறு வழி இல்லாமல் கிளம்பினான்.இறுதியில் அவர்களுடன் கார்த்திக்கின் சித்தப்பா மகன் மகேஷும் உடன் வருவதாக முடிவானது.ராஜி கேரளா டைப் சேலையில் மேக்அப் இல்லாமல் தலையில் மல்லிகை பூ வைத்து வகுடில் குங்குமம் வைத்து,நெற்றியில் சிறிது சந்தன கீற்றை வைத்து வரும் போது கார்த்திக் அப்படியே மெய் மறந்து நின்றான்.

ஒரு சிலர் மட்டும் தான் எல்லா விதமான உடையிலும் அழகாக இருப்பார்கள்.எல்லாவிதமான உணர்வுகளை வெளிபடுத்தும் போதும் அழகாக இருப்பார்கள்.என்னவள் அந்த ரகம்.சிறு வயதில் சுடியில் மட்டுமே பார்த்த அவளை தற்போது இந்த கோலத்தில் பார்ப்பது மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போல்.

அப்போது தான் அவன் ஒன்றை கவனித்தான்.அவள் உடுத்தியிரிந்த சேலை கார்த்திக் காலேஜ் முடித்து வேலைக்கு சென்ற போது அவனுடைய முதல் மாத சம்பளம் பத்தாயிரம் ருபாய்.அவன் முதல் மாத சம்பளத்தில் ராஜிக்கு எதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது.
என்னவ வாங்கி கொடுக்கலாம் என்று யோசித்த போது தான்.அவனுக்கு தோன்றியது.ராஜி சேலை கட்டி பார்க்க வேண்டும் என்பது அவனது ஆசை.எவ்வளவு மொக்கையான பெண்ணும் சேலை கட்டி வரும் போதும் அது அவர்களை அழகாக காட்டும் என்பது கார்த்திக்கின் எண்ணம்.அப்போது அவன் வேலை பார்த்த இடம் திருவனந்தபுரம்.அங்கு இருக்கும் போத்திஸ்க்கு சென்று சேலை செலக்ட் செய்யும் போது அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை.அப்போது தான் அவன் கண்ணில் பட்டது கேரளா சாரீஸ் செக்சன்.அங்கு பொய் தேடிய போது இறுதியில் பச்சை நிற பார்டரில் அழகான எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட சேலை அவளுக்கு சூப்பராக இருக்கும் என்று அதை பில் போட சொன்னான்.

அந்த சேலையை தன்னுடைய திருமண நாள் அன்று அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணிய அவன் அதை பத்திரமாக வைத்திருந்தான்ஆனால் அதை கடைசி வரை அதை அவளுக்கு கொடுக்கவே இல்லை.ஒரு ஆண் தனது தாய்க்கு மட்டுமே தனது முதல் மாத சம்பளத்தில் சேலை வாங்கி தருவான்.

மற்றவர்களுக்கு கொடுத்தாலும் வேறு எதாவது நகையோ பொருளோ கொடுபானே தவிர சேலை கொடுக்க மாட்டன்.அதனால் அந்த சேலை கார்த்திக்கிற்கு ரொம்ப ஸ்பெஷல்.அது எப்படி நாம் கொடுக்காமலே இவளிடம் அந்த சேலை என்று யோசித்து கொண்டிருந்தான்.அப்போது தான் நினைவுக்கு வந்தது.அவள் நேற்று துணிகளை கப்போர்டில் எடுத்து வைக்கும் போது அவனுடைய துணிகளுடன் இருந்த சேலையை அவளுடையது என்று நினைத்து எடுத்திருக்க வேண்டும் என்று.எது எப்படியோ யாருக்காக பார்த்து பார்த்து வாங்கினோமோ அது அவளிடமே போய் சேர்ந்ததில் கார்த்திக்கிற்கு ரொம்ப சந்தோசம்.ஆனால் அது எதுவும் இன்று நீடிக்க போவதில்லை என்பதை அறியாமல்……

காரை கார்த்திக் ஓட்ட முன் சீட்டில் மகேஷும் பின்னால் ராஜியும் இருக்க கார் சென்றது திருசெந்துருக்கு.மூவரும் அமைதியாக செல்ல மகேஷ்தான் காரில் பாட்டு எதாவது போடலாம் என்று சவுண்ட் சிஸ்டத்தைஒன் ஆன் செய்ய மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ என்று எஸ்.பி.பி உருக கார்த்திக் கண்ணாடி வழியாக ராஜியை பார்த்தான்.

அவளோ சட்டென்று தன் முகத்தை திருப்பி கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்க்க தொடங்கினால்.ஏனோ ராஜிக்கு அந்த பாடல் பிடித்திருந்தாலும் அதை கேட்கும் மணநிலையில் அவள் இல்லை.

திருசெந்தூர் சென்ற உடன் காரை பார்க் செய்து விட்டு மூவரும் கோவிலுக்கு சென்றனர்.உள்ளே சென்று முருகனை வேண்டினான் கார்த்திக்.ஒவ்வொரு வருடமும் உன்னை வந்து பார்க்கும் போதெல்லாம் எனக்கு ராஜி வேணும்.அவளோட தான் என் வாழ்க்கை அமையனும்.அவ எனக்கு மட்டும் தான்னு உங்கிட்ட சுயநலமா வேண்டிகிட்டேன்அதே மாதிரி நீயும் கொடுத்துட்ட.அதே மாதிரி அவ கூடிய சீக்கிரமே என்ன புரிஞ்சிகிடனும்னு வேண்டிகிட்டான்.

ராஜியோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.அப்பா.அம்மா சந்தோசத்துக்காக நான் ஏன் இப்படி நிம்மதி இல்லாம வாழனும்.எனக்கு எப்படியாவது இந்த கல்யாண வாழ்க்கைல இருந்து விடுதலை கொடுன்னு மனமுருகி வேண்டிக்கிட்டு இருக்க அவள் கண்கள் ஓரம் நீர்த்துளி கசிந்திருந்தது.அவள் கண்களை திறந்து பார்க்கும் போது அவள் பெயருக்கு அர்ச்சனை கொடுத்து கொண்டிருந்தான் கார்த்திக்.

இவனுக்கு எப்படி நம் ராசி நட்சத்திரம் தெரியும் என்று குளம்பினால்.பின்பு சாமி கும்பிட்டு விட்டு வெளியே வர அங்கு வரிசையாக கல்யாணம் நடை பெற்று கொண்டிருந்தது.அதை பார்த்த ராஜிக்கோ இவர்களும் நம்மை போல தான் என்று நினைத்து கொண்டால்

.பின்பு கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் அலைகளில் கால் நனைத்து கொண்டிருந்தனர்.ராஜிக்கு கடல் அலையில் கால் நனைத்து கொண்டு விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.ஒவ்வொரு முறையும் அவள் அப்பா உடன் வரும்போது நீண்ட நேரம் அப்படி விளையடுவாள்.ஆனால் இன்று எப்போது இங்கு இருந்து கிளம்புவோம் என்று இருந்தது.

அப்போது ஒரு போடோகிரப்பர் வந்து போட்டோ எடுத்துகோங்க சார் ப்ளீஸ் என்று கூற வேண்டாம் என்றனர்.அவர் விடாது வற்புறுத்த இவர்களும் ஒத்துகொண்டனர்.அந்த நேரம் மகேஷிற்கு போன் வர அவன் பேச சென்றான்.இவர்கள் இருவரும் சற்று இடைவெளி விட்டு நிற்க போடோக்ராபர் ஒட்டி நிற்க சொல்ல இருவரும் ஒரு இன்ச் கேப் விட்டு நிற்க மீண்டும் ஒட்டி நிற்க சொல்ல இருவரது தோள்களும் உரசிகொண்டன.

உடனே அமிலம் பட்டது போல ராஜி விலக பொது இடம் என்று கருதி மீண்டும் அருகில் நின்று கொண்டால்.போட்டோ எடுத்த உடன் இருவரும் விலக அப்போது அங்கு வந்த மகேஷ் மைனி உங்க தோளில் கை போட்ருக்க மாதிரி ஒரு போட்டோ எடுங்கனு சொல்ல தர்மசங்கடத்தில் நெளிந்தாள்.

அவள் கார்த்திகை பார்க்க அவன் கண்களால் சாரி கேட்டு கொண்டான்.சரி இந்த ஒரு போடோவோடு நிறுத்தி கொள்வோம் என்று நினைத்த ராஜி வராத சிரிப்பை வரவழைத்து கொண்டு தலை ஆட்டினாள்.அவள் தோளில் காதலுடன் கை போட்டு கொண்டு சிரித்தவாறு நின்றான்

கார்த்திக்.போடோக்ராபர் போட்டோ எடுக்க மகேஷ் தான் வைத்திருந்த கார்த்திக்கின் ஹன்டிகாமில் படம் பிடித்தான்.ராஜியோ உடல் முழுவதும் நெருப்பில் எரிவதை போல் உணர்ந்தால்.அவளுக்கு கோவம் பீறிட்டு வந்தது.எங்கே நாம் கத்திவிடுவோமோ என்று பயந்த அவள் சூழ்நிலையை மாற்ற எண்ணி சாப்பிட போகலாமா என்று கேட்டாள்.போட்டோவை வாங்கிகொண்டு ஹோட்டல் சென்று சாபிட்டனர்.பின்பு மூவரும் மணப்பாடு சென்று அங்கு இருக்கும் சர்ச் சென்றனர்.மனப்ப்படை சுற்றி பார்த்து விட்டு மூவரும் 7 மணியளவில் வீடு வந்தனர்.