என் காதல் கண்மணி 5 79

சரி என்னமோ பன்னி தொலைக்கிறேன்.எல்லாம் உன்னை சொல்லணும்.நீ மட்டும் இப்போ கைல கிடைச்ச கொன்னுடுவேன்.சரி வை.

தேங்ஸ் கார்த்திக்.அவளுக்கு அப்பா அம்மா மட்டும்தான்.அதான் ஜாயின் பாமிலினா ரொம்ப அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.என்ன பார்த்தாள் பொறாமையா இருக்குன்னுகூட சொல்லுவா.கொஞ்சம் அவ மனசு கஷ்டபடாத மாதிரி பேசு கார்த்திக்.

சரி நான் பாத்துக்கிடுறேன்.அப்புறம் இந்த விஷயத்தை உங்க அக்கா கிட்ட சொல்லி தொலைச்சிடாத.டின்னு கட்டிடுவா.

கண்டிப்பா சொல்ல மாட்டேன்.சரி பை என்று கட் செய்தாள் சக்தி.

பின் மான்வி இடம் சென்ற கார்த்திக் காபி சாப்பிட போகலாமா என்றான்.

இதை முதல்லையே சொல்லிருக்கலாம்ல.நான் சாப்பிடாம கூட நிக்குறேன்.மனசு மாறுறதுக்குள்ள வாங்க போகலாம்.என்றாள் மான்வி.

அவள் சாப்பிடவில்லை என்று சொன்னதும் அவள் மீது லேசான இரக்கம் வந்தது கார்த்திக்குக்கு.

பின் இருவரும் ரெஸ்டாரெண்ட் சென்றனர்.மெனு கார்டை பார்த்து நெய் ரோஸ்ட்,பன்னீர் மசாலா,சிக்கென் ரோஸ்ட் ஆர்டர் செய்து விட்டு உனக்கு என்றான் கார்த்திக்.

பசில இருக்குறது நானு ஒருவார்த்தை என்ன சாப்பிடுறானு கேக்காம ஆர்டர் செய்யுறத பாரு என்று நினைத்துக்கொண்டு எனக்கு ஒரு கப் கோல்டு காபி என்றாள் மான்வி.

அப்போது கார்த்திக்கும் எனக்கும் ஒரு கப் காபி என்றான்.

பேரர் சென்றுவிட தாங்ஸ் என்கூட காபி சாப்பிட வந்ததற்கு என்றாள் மான்வி.

உனக்காகலா வரலை.சக்தி சொன்னா அதான் வந்தேன்.

எப்படியோ வந்திங்கள்ள.அதுவரைக்கும் சந்தோசம்.சக்தி உங்களை பத்தி நிறைய சொல்லிருக்கா.உங்க மேரேஜ்க்கு தான் என்னால வரமுடியலை.சாரி.

பரவா இல்லை.உங்க வீட்ல எத்தனை பேரு.

நான்,அம்மா,அப்பா அவ்ளோதான்.

அதான் ஜாயின் பாமிலினா ரொம்ப பிடிக்குமோ.

ம்ம்ம் ஆமா.உங்க லவ் மேட்டெர்கூட எனக்கு தெரியும்.சான்ஸே இல்லை.ரியலி கிரேட் நீங்க.

போதும் போதும்.

அப்போது ஆர்டர் செய்தது வந்துவிட எல்லாவற்றையும் எடுத்து மான்வி பக்கம் எடுத்துவைத்தான்.காபியை மட்டும் அவன் எடுத்துக்கொண்டான்.

எதுக்கு நீங்க ஆர்டர் பண்ணினதை என்கிட்ட வைக்கிறீங்க.எனக்கு வேண்டாம்.நீங்க சாப்பிடுங்க.

எனக்கு சாப்பிடுறதுக்கு வாங்கலை.நீதான் இப்போ பசில இருக்க.சாப்பிடு என்று அவள் பக்கம் நீட்டினான். இல்ல வேண்டாம்.

ஷ்ஷ்ஷ் சாப்பிடு.இன்னைக்கு ஒரு நாள் டையட் பாக்காம சாப்பிடு.ம்ம்ம்.

தாங்ஸ்.

எதுக்கு.

நான் இன்னும் சாப்பிடலை அத கூட கேக்காம நீங்க ஆர்டர் பண்றிங்கன்னு நினைச்சேன் பட் எனக்குத்தான் ஆர்டர் பன்னிருக்கிங்கனு சொன்னதும் சந்தோசமா இருந்தது.அதான்.

அதெல்லாம் இருக்கட்டும் சாப்பிடு.

அப்போது அவளுக்கு புரை ஏற பாத்து பாத்து மூச்சை நல்லா வேகமா இழுத்து விடு என்றான் கார்த்திக்.

மூச்சை இழுத்துவிட்டு சரியான பின் கார்த்திக் கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்தாள் மான்வி.

அவளது கண்களின் ஓரம் கண்ணீர் வடிவதை பார்த்த கார்த்திக் என்னாச்சு சாப்பாடு ரொம்ப காரமா இருக்கா.இந்தா கூட கொஞ்சம் தண்ணி குடி என்றான்.

இல்ல வேண்டாம்.சாப்பாடு ஒன்னும் காரம் இல்ல.சும்மா.

ஆர் யு ஓகே.

ம்ம்ம்ம்.எங்க வீட்ல நான் மட்டும்தான்.அப்பா அம்மா ரொம்ப செல்லம்.எனக்கு எல்லாமே இருக்கு.பட் டெய்லி ஏதோ இல்லாதது மாதிரி இருக்கும்.இவ்ளோத்துக்கும் அப்பாவும் அம்மாவும் என்னை அவ்ளோ தாங்குவாங்க.எனக்கும் அவ்ளோ பிடிக்கும் அவுங்களை.

சரி அப்றம் ஏன்.மேல சொல்லு.

ஆனாலும் டெய்லி சண்டை போடுறதுக்கு அண்ணனோ தம்பியோ,இன்னொரு அம்மா மாதிரி அக்காவோ தங்கச்சியோ,பொண்ணு மாதிரி பாத்துகிட அத்தையோ சித்தியோ,தோலோட தோளில் கைபோட்டு பேச முறைப்பையனோ எனக்கு கிடையாது.என்னோட சந்தோஷம் துக்கம் புல்லா அப்பா,அம்மாவோட மட்டும் தான்.அதான் இன்னைக்கு நீங்க அப்படி பண்ணின உடனே அழுகை வந்துடுச்சு.

உறவுகளுக்காக ரொம்ப ஏங்கி போய் இருக்கிற ஒரு பொண்ண போய் தப்பா நினைச்சிட்டோமோ என்று தன்னைத்தானே கடிந்துகொண்ட கார்த்திக்

அதுக்குத்தான் என்கூட பேச ட்ரை பண்ணினியா என்றான்.

ஆமா.சக்தி உங்களை பத்தி,அவ ரெண்டு அக்கா பத்தி சொல்லும் போதெல்லாம் எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கும்.ஆனா வருத்தமாவும் இருக்கும்.நானும் இந்த மாதிரி பாமிலில இல்லையேன்னு.அதான் இந்த ஒருநாள் ஆச்சும் உங்க கூட ஸ்பென்ட் பண்ணலாம்னு இப்படி பண்ணேன்.நான் உங்களை லவ் எல்லாம் பண்ணலை.பயப்படாதிங்க.நான் எதாவது தப்பா பிஹேவ் பண்ணிருந்தா என்ன மன்னிச்சிடுங்க.

இட்ஸ் ஓகே.பரவா இல்லை நானும் சாரி.நீ என்ன சொல்ல வரேன்னு கேக்காம பேசினதுக்கு.

ஓகே.அப்புறம் எப்படி இருக்காங்க ராஜி அக்கா.

அவளுக்கென்ன ராணி மாதிரி இருக்கா.

இப்படியே இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தனர்.கார்த்திக் பில் கொடுக்க தனது கார்டை எடுக்க,அவனை தடுத்து மான்வி தனது கார்டை கொடுத்து பில் செட்டில் செய்தாள்.பின் சரி மான்வி பாக்கலாம்.இந்த ஒரு நாள் உன்கூட பேசினது ரொம்ப சந்தோசம்.இனி எப்போதுலா உனக்கு என்கூட பேச தோணுதோ அப்போ எனக்கு கால் பண்ணு.எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்டே கேளு ஓகேவா.

ம்ம் ஓகே அண்ணா என்றாள் மான்வி.

அம்மா தாயே நீ கார்த்திக்னு பேர் சொல்லியே கூப்பிடு.நான் ஒன்னும் நினைக்க மாட்டேன்.

இல்ல எனக்கு இதான் பிடிச்சிருக்கு.அதனால நான் அப்படித்தான் கூப்பிடுவேன் அண்ணா.

ஓஹ் சேப்டி.ஒன்னும் பயப்படாத.ஒருவனுக்கு ஒருத்தி கொறவனுக்கு கொறத்தி.இதான் நம்ம பாலிசி.நமக்கு எப்போதுமே ராஜி தான்.

மான்வி சிரித்துக்கொண்டே ரொம்ப காமெடியா பேசுறீங்க.அப்படிலா ஒன்னும் இல்லை.சரி பிரென்ட் போதுமா என்றாள் மான்வி.

இது பெட்டெர்.ஓகே பாக்கலாம் பாய் என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றனர்….

4 Comments

  1. கெளதம்

    அடுத்த பாகம் எப்போ வரும்?

  2. hey next part epo?..

  3. hey nice bro…
    next part upload quickly… 🥰

  4. Next part upload pannunga

Comments are closed.