என் காதல் கண்மணி 5 79

கார்த்திக்கின் மூச்சு சீராக வருவதை பார்த்து தூங்குவதை உறுதி செய்துகொண்டு ரமேஷுக்கு டைப் செய்தாள்.

என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சிது

நம்ம பிரென்ட் கஸ்தூரி கிட்ட உண்ண பத்தி விசாரிப்பான்.அவதான் சொன்னா.முதல்ல அவ தரமாட்டேன்னு தான் சொன்னா.நான் தான் கெஞ்சி கஷ்டப்பட்டு வாங்குனேன்.

சரி எதுக்கு வாங்குன.எதுக்கு நீ என்கிட்டே பேசணும்.

என்ன ராஜி இப்படி பேசுற.

பிறகு எப்படி பேச சொல்ற.எனக்கு மேரேஜ் ஆகிட்டு உனக்கு தெரியுமா.

தெரியும் ராஜி.இப்போ உங்களுக்குள்ள என்ன பிரச்சனை ஓடிட்டு இருக்கும்னும் எனக்கு தெரியும்.நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.ப்ளீஸ் நாளைக்கு பேசலாமா.

உனக்கு எவ்ளோ தைரியம்.எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை.நாங்க ரொம்ப சந்தோசமா இருக்கோம்.இனிமேல் என்கூட பேச ட்ரை பண்ணாத.அண்ட் அடுத்தவங்க பெர்சனல் விஷயத்துல மூக்கை நொழைக்கிறது அநாகரிகம்.டோன்ட் மெசேஜ் மீ.பை.

ராஜி நான் உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்.ப்ளீஸ் ராஜி.நாளைக்கு ஒருதடவை மட்டும் பேசு.அப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.

மெசேஜை பார்த்துவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு கார்த்திக்கை பார்த்தாள்.அவன் நன்றாக தூங்கி கொண்டிருந்தான்.பின் அவளும் தூங்கியும் போனாள்.

மறுநாள் வழக்கம் போல கார்த்திக் துணிகளை அயன் செய்து வைத்து விட்டு வழக்கம் போல அவனை ஆபிஸிற்கு அனுப்பி வைத்தாள்.

இருவரும் அன்று காலை எதுவும் பேசிக்கொள்ளவில்லை.அன்று காலை ஆபிசில் வைத்து நேற்று வந்த அதே நம்பரில் இருந்து கால் வந்தது.போனை அட்டென்ட் செய்த கார்த்திக்

ஹலோ வணக்கம்.சொல்லுங்க என்றான்.

ஹலோ நான் மான்வி பேசுறேன்.

எந்த மான்வி.

அதான் அன்னைக்கு கே எப் சி ல,பர்த் டே பார்ட்டி,சக்தி பிரென்ட்,ட்ரீட்.

ஒஹ் ஆமா ஆமா.சொல்லுங்க என்ன விஷயம்.எதாவது ஹெல்ப் வேணுமா.

அதெல்லாம் ஒன்னும் இல்லை.நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.

நீங்க ஏன் என்கிட்ட பேசணும்.எதுனாலும் சக்திகிட்ட சொல்லுங்க.வைக்கிறேன்.

ஹலோ ஹலோ ஒரு நிமிஷம்.வச்சிடாதீங்க.

உங்களுக்கு என்ன வேணும்.ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்றீங்க.

முதல்ல இந்த வாங்க போங்கன்னு சொல்றதை நிறுத்துங்க.நான் உங்களைவிட சின்ன பொண்ணுதான்.சோ என்ன நீ,வா ன்னே சொல்லலாம்.இல்ல பேர் சொல்லி கூப்பிடுங்க.

இதை பாருங்க.உங்களுக்கு என்ன ப்ராப்ளேம்.எனக்கு ஆயிரம் வேலை இருக்குது.உங்களுக்கு என்ன வேணும்.என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சுது.

சக்திகிட்ட தான் வாங்குனேன்.ப்ளீஸ் அவகிட்ட சொல்லிடாதீங்க.எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.உங்களை பத்தி சக்தி நிறைய சொல்லிருக்கா.அதான் உங்ககூட பழகலாம்னு.

இதை பாருங்க எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.தயவுசெஞ்சு என்ன தொந்தரவு பண்ணாம போய் படிக்கிற வழிய பாருங்க.
என்று சொல்லிவிட்டு காலை கட் செய்தான்.

வேளைகளில் மூழ்கி இருந்த கார்த்திக்கை ஆபிஸ் பாய் வந்து உங்களை தேடி ஒரு பொண்ணு வந்திருப்பதாக சொல்ல யாரென்று இருக்கும் என்று எண்ணிக்கொண்டு சரி வரேன்னு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை மூடிவைத்து விட்டு சென்றான்.

அங்கு பார்த்தாள் மான்வி நின்று கொண்டிருந்தாள்.அவளை பார்த்ததும் கார்த்திக்கிற்கு கோவமாக வந்தது.இதுவேற இம்சை பண்ணிகிட்டு என்று மனதில் நினைத்துக்கொண்டு கோவத்தை வெளிக்காட்டாமல்

இங்க எதுக்கு வந்த என்றான்.

உங்களை பார்க்கதான்.

அய்யோ என்ன ஏன் நீங்க பாக்கணும்.உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.

சம்பந்தம் இல்ல.இனிமேதான் சம்பந்தம் படுத்திக்கிடனும்.என்னோட ட்ரீட்க்கு நீங்க எதுக்கு காசு கொடுத்தீங்க.

தெரியாம கொடுத்துட்டேன்.படிக்கிற பொண்ணுங்க செலவுக்கு கஷ்டப்படுவீங்களேன்னு கொடுத்தேன்.போதுமா.இனிமேல் தொந்தரவு பண்ணாம கிளம்பு.

அப்படிலாம் கிளம்ப முடியாது.நாங்க உங்க கிட்ட கேட்டோமா.செலவுக்கு காசு இல்ல.பில் கொடுங்கன்னு.

இப்போ என்ன பண்ணனும் அதுக்கு.

சிம்பிள் என்கூட ஒரு கப் காபி சாப்பிடுங்க போதும்.

ஏய் இம்சை இம்சை.நான்தான் சொன்னேனே எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு.அப்புறம் ஏன் இப்படி டார்ச்சர் பண்ற.

அப்படித்தான் பண்ணுவேன்.நீங்க வந்தா விட்டுடுறேன்.

வரமுடியாது போடி என்று சொல்லிவிட்டு நடந்து சென்றான் கார்த்திக்.

நீங்க வரலைன்னா நீங்க வரவரைக்கும் இங்கதான் நிப்பேன்.என் பிடிவாதம் பத்தி உங்களுக்கு தெரியாது.வேணும்னா சக்திகிட்ட கேளுங்க என்று அவன் போகும்வரை கத்தினாள் மான்வி.

அவள் கூறியது எதையும் காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்தான் கார்த்திக்.

மதிய உணவை முடித்துவிட்டு பின் சைட் விசிட் சென்று விட்டான்.அவள் சொன்னது எதையும் அவன் நினைவில் இல்லை. 4 மணி அளவில் அப்போது அவனுடைய மெயிலுக்கு முக்கியமான டாகுமெண்ட்ஸ் வந்திருப்பதாகவும் அதை உடனடியாக தனக்கு அனுப்பும் படியும்மதிய உணவை முடித்துவிட்டு பின் சைட் விசிட் சென்று விட்டான்.அவள் சொன்னது எதையும் அவன் நினைவில் இல்லை. 4 மணி அளவில் அப்போது அவனுடைய மெயிலுக்கு முக்கியமான டாகுமெண்ட்ஸ் வந்திருப்பதாகவும் அதை உடனடியாக தனக்கு அனுப்பும் படியும் அவனது AD கால் செய்ய மீண்டும் ஆபிஸ் சென்றான் கார்த்திக்.

அங்கு ஆபிஸ் வாசலில் மான்வி சொன்னது போலவே தனது ஸ்கூட்டியிலே நின்று கொண்டிருந்தாள்.அப்போது தான் அவள் சொன்னதே நியாபகத்திற்கு வர அவளை பார்த்தான் கார்த்திக்.

கார்த்திக்கை பார்த்த மான்வி ஹாய் என்றாள்.

அவளை முறைத்துக்கொண்டு ஆபிஸ் சென்றவன் தனது லேப்டாப் ஓபன் செய்து மெயிலை படித்துவிட்டு பார்வேர்ட் செய்தான்.பின் சக்திக்கு கால் செய்து உன் பிரென்ட் மான்வி தன்னை சந்திக்க வந்திருப்பதையும் அவள் பேசியதையும் சொன்னான்.மேலும் சக்தியையும் திட்டினான்.

சாரி கார்த்திக்.அவள் ஏன் அப்படி பண்ணினானு எனக்கு தெரியலை.நம்ம பேமிலி மேட்டர் எல்லாம் அவளுக்கு தெரியும்.அவ உன்கிட்ட எதோ சொல்ல நினைக்கிறா.அன்னைக்கு கூட நீ பில் கொடுத்ததுக்கு ரொம்ப பீல் பண்ணினா.ப்ளீஸ் கார்த்திக் அவ என்னோட குளோஸ் பிரென்ட்.ப்ளீஸ் கோவப்படாம அவகிட்ட பேசி அனுப்பி வை கார்த்திக். என்றாள் சக்தி.

4 Comments

  1. கெளதம்

    அடுத்த பாகம் எப்போ வரும்?

  2. hey next part epo?..

  3. hey nice bro…
    next part upload quickly… 🥰

  4. Next part upload pannunga

Comments are closed.