என் காதல் கண்மணி 5 79

குட்நைட்.

இருவரும் போர்வையை தலை வரை இழுத்து மூடினர்.ஆனால் தூங்கவில்லை.இருவரும் கண்ணை மூடியபடி சந்தோசமாக இன்று பேசியதை நினைத்து பார்த்தனர்.எப்போது தூங்கினார்கள் என்று தெரியாமல் தூங்கியும் போனார்கள்.

மறுநாள் பொழுது விடிந்தது.வழக்கம் போல ராஜி எழுந்து வேலைகளை கவனித்தாள்.கார்த்திக் எழுந்து ஆபிஸிற்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

அவன் பைக் சாவியை எடுக்க ரூமிற்கு சென்றபோது பின்னாள் வந்த ராஜி அவன் சாவி,பேக்,லன்ச் பேக்கை எடுத்துக்கொடுத்தாள்.

பின் கார்த்திக்கிடம் கார்த்திக் ஒரு செலஃபீ எடுத்துக்கிடலாமான்னு கேட்டாள்.

ம்ம் எடுக்கலாமே என்று தனது போனை எடுத்தான் கார்த்திக்.

ம்ஹூம்.என் போன்லதான் எடுக்கணும்.இதான் இந்த போன்ல எடுக்குற பர்ஸ்ட் போட்டோ.அதனால ரெண்டு பெரும் சேர்ந்து எடுக்கலாம்.

சரி சீக்கிரம் எடு.டைம் ஆகுது.

போகலாம்பா.அந்த பேக்கை அங்க வை என்று சொல்லிவிட்டு அவனுடன் நெருங்கி நின்று ஒரு போட்டோ எடுத்தாள் ராஜி.

அது திருப்தியாக இருக்க ம்ம்ம் சரி இப்ப கிளம்பு.

கார்த்திக் அவளுடைய போனை எட்டி பார்த்து போட்டோவை பார்க்க அதை தன் மார்போடு மறைத்துவிட்டு காட்டமாட்டேன் என்பதுபோல் தலையை அசைத்தாள்.

கார்த்திக்கும் பதிலுக்கு சிரித்துவிட்டு போய்ட்டுவாரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

அவன் சென்ற பின் நேற்று நடந்த நிகழ்வுகளின் தாக்கம் ராஜியை ரொம்பவே பாதித்தது.அவளையும் அறியாமல் அடிக்கடி சிரித்துக்கொண்டாள்.அப்போது அவளுடைய இருமணமும் வெளியே வந்தது.

அவளுடைய கேட்ட மனம் என்னடி புதுசா அவனை நினைச்சு நினைச்சு சிரிக்க.என்ன அவனை லவ் பண்ணிட்டியா.ச்சீ.என்னமோ பெருசா சபதம் போட்ட.அவ்ளோதானா நீ என்றது.

ஆமாடி.அவ லவ் பண்ரா.நாந்தான் அப்படி திரும்ப திரும்ப நினைக்க வச்சேன்.அவளும் லவ் பண்ணுவா.என்றது அவளுடைய நல்ல மனம்.

அவன் உன் வாழ்க்கையை கெடுத்தவண்டி.உன்ன ஏமாத்திருக்காண்.

இல்ல அவன் உன்னைய லவ் பன்றான்.உன்னை எப்போதுமே ஏமாத்தள.உன்ன அவன் எப்பவாவது கஷ்டப்படுத்துற மாதிரி நடந்துக்கிடுறானா.நேத்துகூட உனக்காக எவ்ளோ பண்ணினான்.

எல்லாம் நடிப்பு.கஷ்டப்படுத்தாதவன் தான் அன்னைக்கு கிஸ் பண்ணினானா.

அதுஅது தெரியாம நடந்தது.

தெரிஞ்சுதான் நடந்துருக்கு.

நான் சொல்றத கேளு.நான் எப்போதும் உனக்கு நல்லதுதான் சொல்லுவேன்.பேசாம அவனை லவ் பண்ணினதை ஓத்துக்கிட்டு சந்தோசமா இருக்க வழிய பாரு.

நான் சொல்றதை கேளு.அவனை நீ லவ் பண்றதா சொல்லி அசிங்கப்படாத.நீ அவன் விட்ட சவால்ல தோத்து போய்டுவ.

இப்படியாக இரு மனங்களின் சண்டையில் அவளுடைய ஈகோ என்கிற கெட்ட எண்ணமேவ வெற்றிகொண்டது.இனி மீதம் உள்ள நாட்கள் வரை கார்த்திக்கிடம் கொஞ்சம் தள்ளி இருப்பதே இருவருக்கும் நல்லது என்று முடிவெடுத்தால் ராஜி.

பரபரப்பாக வேலைகளை பார்த்துகொண்டிருந்த கார்த்திக் நேற்று ராஜியுடன் நடந்த சம்பவங்கள் நியாபகத்திற்கு வந்து இம்சித்தது.

அவனுக்கு உடனே ராஜியிடம் பேசவேண்டும் போல் இருந்தது.

போனை எடுத்து ராஜிக்கு டையல் செய்தான்.கார்த்திக்கின் நம்பரை பார்த்த ராஜிக்கு ஏனோ அவனுடன் பேச விருப்பம் இல்லாமல் தோன்றியது.போனை அட்டென்ட் செய்த ராஜி

ஹலோ சொல்லு கார்த்திக் என்றாள்.

ஒன்னும் இல்ல ராஜி.சும்மா உன்கிட்ட பேசணும்போல இருந்துச்சு.அதான் கால் பண்ணேன்.சாப்பிட்டாச்சா.

ம்ம் சாப்பிட்டேன்.

சரி சரி.அம்மா என்ன பண்றாங்க.

அத்தை பக்கத்துவீடு வரை போயிருக்காங்க.

ஓஹ் சரி சரி.

வேற என்ன.

ஏன் ராஜி ஒருமாதிரி பேசுற.பேச பிடிக்கலையா.

மனதில் நினைப்பதை அப்படியே சொல்கிறானே என்று எண்ணியவள்

அப்படிலாம் ஒன்னும் இல்ல.கொஞ்சம் தலைவலி அவ்ளோதான்.

சரி டேப்லெட் போட்டு ரெஸ்ட் எடு.ஈவினிங் பேசிக்கலாம்.பாய்.

ம்ம் சரி.என்று போனை கட் செய்தாள்.அவளுக்கு குழப்பமாக இருந்தது.ஆனாலும் அவளது ஈகோ தெளிவாக சொல்லியது நான் கார்த்திக்கை லவ் பண்ணலை.

ராஜியின் பேச்சில் தெரிந்த மாற்றம் கார்த்திக்கிற்கு தெளிவாக தெரிந்தது.ஆனால் எதுவாக இருந்தாலும் அவன் போக்கிலே செல்ல வேண்டும் என்ற முடிவுடன் வேளையில் ஆழ்ந்தான்.

அப்போது அவன் செல்லுக்கு ஹாய் என்று மெசேஜ் வந்தது.

வாட்ஸ்அப் பார்த்தவன் புது நம்பராக இருந்தது.DP பார்த்தவன் அதில் நயன்தாரா போட்டோ இருந்தது.ஆன்லைன் வேறு காட்டியது.

பிரென்ட் யாராவது இருக்கும் என்று அப்படியே வைத்துவிட்டு வேலைகளை கவனித்தான்.

மீண்டும் என்ன பேசமாட்டீங்களா.அவ்ளோ பிசியா என்று மெசேஜ் வந்தது.

ப்ச் இதுவேற என்று நெட்டை ஆப் செய்தான்.அரைமணி நேரம் கழித்து அந்த நம்பரில் இருந்து கால் வந்தது.

அட்டென்ட் செய்தவன் ஹெலோ என்றான்.

எப்படி இருக்கீங்க என்றது ஒரு பெண்குரல்.

யாருன்னு சொல்லுங்க.

எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவங்கதான் எஎல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவங்கதான் என்றது எதிர்முனை.

பேசாமல் போனை கட் செய்துவிட்டு சைலென்டில் போட்டுவிட்டு மீட்டிங் அட்டென்ட் பண்ண சென்றான் கார்த்திக்.

பின் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக் ராஜியை தேடி ரூமிற்கு சென்றான்.

ஆனால் ராஜி கார்த்திக்கிடம் இருந்து முடிந்த அளவுக்கு தப்பிக்க சாந்தாவுடனே இருந்தாள்.

இவனாக வழிய சென்று பேசினாலும் அவள் ஒருவார்த்தையில் பேசி பதில் தருவாள்.

இப்படியாக இரவு வரை சென்றது.ராஜியின் ஒதுக்கம் கார்த்திக்கை என்னவோ செய்தது.ரூமில் இருவரும் படுக்க இருவரும் ஒன்றும் பேசாமல் தூங்காமல் இருந்தனர்.

அப்போது ராஜியின் வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் வந்தது.சத்தம் கேட்டு போனை எடுத்த ராஜி மெசேஜை பார்த்தாள்.

ஹாய் ராஜி.திஸ் இஸ் ரமேஷ்.ஐ ம் சாரி டு டிஸ்டர்பிங் யு என்று வந்திருந்தது. . . . . . . . . .
மெசேஜை பார்த்த ராஜிக்கு தூக்கி வாரி போட்டது.

இவன் எதுக்கு இப்போ தேவை இல்லாம என்ட்ரி ஆகுறான்னு நினைத்துக்கொண்டு கார்த்திக்கை பார்த்தாள்.

4 Comments

  1. கெளதம்

    அடுத்த பாகம் எப்போ வரும்?

  2. hey next part epo?..

  3. hey nice bro…
    next part upload quickly… 🥰

  4. Next part upload pannunga

Comments are closed.