என் காதல் கண்மணி 5 79

உனக்கு தூக்கம் வருதா.இல்லல.

ஐயோ ராஜி.அதெல்லாம் ஒரு மண்ணும் வரலை.நீ
சொல்லு.

இல்ல எனக்கு தூக்கம் வந்துடுச்சு.தூங்கலாமா.

ப்ச் மயிறு.இதை சொல்லதானா இவ்ளோ இழுத்த.தூக்கம் வந்தா போய் தூங்கி தொலைக்க வேண்டியது தான அவன் மனசாட்சி ராஜியை திட்டியது.

அம்ம்ம்ம்ம்.தூங்கலாமே.நல்லா தூங்கலாம்.படு.இதோ பெட் இருக்கு நல்லா படுத்து தூங்கு.படு.

கார்த்திக் நீஈஈஈஈ.

அஹ்ன் நானா நானேதான்.நான் வழக்கம் போல சோபாவில் படுத்துக்கிடுறேன்.

ம்ம்ம் சரி கார்த்திக்.குட் நைட்.

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லைன்னு மனசில் நினைத்துக்கொண்டு

குட் நைட்.குட் நைட்.

வேற ஒன்னும் இல்லையே.

இல்லையே.ஒன்னும் இல்ல.நீ தூங்கு.

இல்ல நீ ஏதோ சொல்லணும்னு நினைக்கிற மாதிரி தெரியுது.சும்மா சொல்லு.

நான் என்ன சொல்ல.ஆமா சொல்லணும்.மறக்காம பெட் சீட் எடுத்து போத்திக்கோ.

ம்ம்ம் சரி.

ராஜிக்கு கார்த்திக்கை பார்த்து சிரிப்பாக வந்தது.அவன் எதை பற்றி கேட்டான் என்று நன்றாகவே தெரியும்.ஆனால் அவளுக்கு இப்போது கார்த்திக்கின் மேல் இருப்பது ஒரு நல்ல இம்ப்ரெஸ்ஸன்.அதை வெளிக்காட்ட அவளது ஈகோ தடுத்தது.

அவள் படுத்துவிட்டு கார்த்திக்கை பார்க்க கார்த்திக் போர்வையை தலைவரை இழுத்து மூடி இருந்தான்.

இப்போது மெல்லிதாக அவனை பார்த்து சிரித்தாள்.பின் சில நிமிடம் கழித்து.

கார்த்திக்

போர்வையை விலகாமலே என்ன என்றான்.

தூங்குறியா.

இல்ல சாப்பிடுறேன்.

நக்கலா.

ஆமா.தூங்குறவனை பார்த்து தூங்குறியான்னு கேட்டா என்ன சொல்ல சொல்ற.

சரி சரி.கோவப்படாத பிரெண்டு.

ஓகே பிரெண்டு சொல்லுங்க.

இல்ல பிரெண்டு புக்ஸ்லா அதிகமா படிப்பீங்களோ.

ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பிரெண்டு.ஏன் கேக்குறீங்க.

இல்ல பிரெண்டு காலைல போர் அடிக்குதுன்னு உங்க ரேக்கை பார்த்தேன்.அதான் கேட்டேன்.

அதெல்லாம் சும்மா டைம் பாஸுக்காக.அது எதுவுமே நான் படிச்சது கிடையாது.

சும்மா காமெடி பண்ணாதீங்க பிரெண்டு.

போர்வையை விளக்கி விட்டு

இப்போ என்ன வேணும் உனக்கு.

தெரிஞ்சுக்கலாம்னுதான்.சரி உனக்கு எப்படி புக்ஸ் படிக்கிற பழக்கம்லாம் வந்துச்சு.

இப்போ கண்டிப்பா அதை தெரிஞ்சுக்கிடணுமா.

சும்மா சொல்லேன்.ஜாலியா இருக்கும்.

ஜாலியாவா.இருக்கும் இருக்கும்.

சொல்லுப்பா.சீன் போடாத.

அது ஒன்னும் இல்ல பிரெண்டு.நான் காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணேன்.

தெரியுமே.அந்த பொன்னுபேரு கூட ராஜி தான.

ஐயோ செம ஷார்ப்பு பிரெண்டு நீங்க.

சரி மேல சொல்லுங்க.

அவதான் இதுக்கு காரணம்.

போங்க பிரெண்டு.புக்ஸ் படிக்கிறதுக்கும் லவ் பண்றதுக்கும் என்ன பிரெண்டு சம்பந்தம்.

சம்பந்தம் இருக்கு பிரெண்டு.காதல் ஒரு கொடூரமான இரக்கம் இல்லாதவனை கூட செடியில் இருந்து பூவை பரிச்சா அழவைக்கிற சக்தி வாய்ந்தது.அந்த காதல் தான் என்ன மனுஷனாக்குச்சு.என்ன புக்ஸ் படிக்க சொல்லுச்சு.என்னோட வாழ்க்கையவே மாத்துச்சு.அவ மட்டும் அந்த காதலை வராம விட்டிருந்தானா என்னோட இந்த வேலை,புகழ்,இப்படி எதுவுமே இல்லை.எனக்கு அந்த காதல் மட்டும் இல்லன்னா இந்நேரம் நான் எங்கையோ மாசம் 6000க்கும் 7000க்கும் கையேந்துகிட்டு இருந்துருப்பேன்.ஏன் ரௌடியாக்கூட மாரி இருப்பேன்.இதான் பிரெண்டு அந்த புக்ஸ்க்கு பின்னாடி இருக்குற std.

Std னா ஓஹ் வரலாறு.சான்ஸே இல்ல பிரெண்டு.லவ்வ கூட இவ்ளோ பாஸிட்டிவா எடுத்துருக்கீங்க.ஆனா அதுக்கு உங்க ஆளு ஒர்த்தான்னு தெரியுமா.

என் ஆள பத்தி தப்பா பேசாதீங்க பிரெண்டு.எனக்கு கெட்ட கோவம் வரும்.

கோவப்படாதிங்க பிரெண்டு சும்மா கேட்டேன்.

அவ 200 சதவீதம் ஒர்த்து பிரெண்டு. கண்டிப்பா உங்க லவ் சக்ஸஸ் ஆகும் பிரெண்டு.அவகூட இல்லை வேற ஒரு பொண்ணுகூட.

அதெல்லாம் ஆகும் பிரெண்டு.உங்களுக்கு தூக்கம் வரலை.

தூங்கணும் பிரெண்டு.தூங்கலாம்.நாளைக்கு பேசலாம்.குட்நைட்.

4 Comments

  1. கெளதம்

    அடுத்த பாகம் எப்போ வரும்?

  2. hey next part epo?..

  3. hey nice bro…
    next part upload quickly… 🥰

  4. Next part upload pannunga

Comments are closed.