ஐயோ இது வேறயா.இந்த கண்ராவி வேரைய.என்று நினைத்துக்கொண்டு கார்த்திக்கை பார்க்க அவன் ராஜியை பார்த்துவிட்டு கண்ணடித்துவிட்டு மாட்டினடி இன்னைக்கு என்று கண்ணாலையே சொன்னான்.
அத்தையிடம் வேண்டாம் என்று சொன்னால் ரெண்டு பேருக்கும் நடுவில் உள்ள பிரச்சனை தெரியதுக்கு காரணமாகிவிடும்.எல்லாம் என் தலை விதி என்று நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள் ராஜி.
கார்த்திக் இப்போது தேவைக்கு அதிகமாக சாதத்தை வைத்து பிசைந்துகொண்டிருந்தான்.
கறிகளும் அதிகமாக வைத்துவிட்டு வேண்டும் என்றே வாயில் வைத்துவிட்டு இலையில் வைத்தான்.பின் புறை ஏறுவதுபோல் செய்ய வாயில் இருந்து சோற்று பருக்குகள் இலையில் விழுந்தது.பின் தண்ணீரை எடுத்து குடித்தான்.
இதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு ஆத்திரத்தில் அழுகையாக வந்தது.கார்த்திக் வேண்டும் என்றே தன்னை பழிவாங்குகிறான் என்று அவன்மேல் ஆத்திரமாக வந்தது.
தண்ணீர் எடுக்க செல்வது போல் கிச்சன் சென்று கண்ணீரை துடைத்துவிட்டு வந்தான்.
அப்போதும் கார்த்திக் வேண்டும் என்றே அதுபோல் செய்ய ராஜி என்ன செய்வது என்பதுபோல் சேலை முந்தியை கைகளால் சுருட்டி கொண்டே பதற்றத்துடன் நின்றாள்.
ராஜியை பார்த்த கார்த்திக் அவளுடைய இந்த நிலையை பார்க்க அவனுக்குள் ஏதோ செய்தது.ராஜியும் முகம் அருவருப்பாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
ராஜியை பார்த்துக்கொண்டே மீண்டும் தண்ணீர் எடுத்து குடித்தவன் தெரியாமல் கை தவறி விடுவது போல் கிளாசை இலையில் விட்டான்.தண்ணீர் முழுவதும் இலையில் கொட்ட சட்டென்று எழுந்துகொண்டான்.
ச்ச தெரியாம கொட்டிட்டு.சாரி சாரி என்றான்.
என்னடா அந்த பொண்ணு எவ்ளோ ஆசையா இருந்துச்சு.இப்படி பண்ணிட்ட என்றார் கார்த்திக்கின் அப்பா.
சாந்தாவும் தன் பங்கிற்கு அதையே சொல்ல
தெரியாம கை தவறிட்டு.விடுங்க வேற இலையில சாப்பிட்டா என்ன.இன்னொருநாள் பாத்துக்கலாம். என்றான் கார்த்திக்.
இதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு இப்போதுதான் உயிரே வந்தது.உதட்டில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு பரவா இல்லை மாமா.இன்னொருநாள் சாப்பிட்டுகிடுறேன் என்று அந்த இலையை எடுத்து குப்பையில் போட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு சாந்தாவுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
ராஜிக்கு தெரியும் கார்த்திக் இதை தனக்காகத்தான் செய்தான் என்று.உடனடியாக அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது ராஜிக்கு.
அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு வேகமாக பெட்ரூமை நோக்கி ஓடினாள் ராஜி.
அங்கு நின்று கொண்டிருந்த ராஜி ஓடிச்சென்று கார்த்திக் மார்பின் மேல் முகம் புதைத்து தேங்ஸ்.கார்த்திக்.நீ எனக்காகத்தான் இதெல்லாம் செஞ்சன்னு எனக்கு தெரியும்.உன்ன தப்பா நினைச்சிட்டேன்.சாரி என்று அழத்தொடங்கினாள்.
கார்த்திக் எதுவும் செய்யாமல் சிலையாக நின்றுகொண்டிருந்தான்.ராஜி இப்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறாள்.இந்த நேரம் அவளை தொட்டால்கூட விபரீதம் ஆகிவிடும்.அவளாக அடங்கும் வரை அசையமல் நின்றிருந்தான்.
பின் ராஜியின் அழுகை அடங்கியபின் தான் இருக்கும் நிலை உணர்ந்து சாரி சாரி கார்த்திக்.கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.சாரி.
பரவா இல்லை.நீ எமோஷனலா இருக்கன்னு தெரியும்.விடு.
தாங்ஸ் கார்த்திக்.
தாங்க்ஸ்லா வேண்டாம் ராஜி.நான் ஒன்னும் இதை உனக்காக பண்ணல.ஸோ தேங்க்ஸ்லா வேண்டாம்.
எனக்காக பண்ணலையா.ஏன்.
சொல்றேன். ரிலாக்ஸா இருக்கியா.
ம்ம்ம்ம் சொல்லு
எனக்கு இந்த ஒருத்தர் சாப்பிட்ட இலையில இன்னொருத்தர் சாப்பிடுறது எனக்கு சுத்தமா பிடிக்காது.எங்க அம்மா சாப்பிட்டாலே நான் திட்டுவேன்.அதனாலதான் நான் அப்படி பண்ணேன்.மத்தபடி உன்ன இம்ப்ரெஸ் பன்னதுக்காக பண்ணலை.
என்னை இம்ப்ரெஸ் பண்ணதுக்கு பண்ணிருந்தாலும் நான் ஒன்னும் சொல்லலை.போதுமா.
ம்ம்ம்ம் சரி.
அப்புறம்.
அப்புறம்ம்ம்ம்ம் தூங்க வேண்டியதுதான்.
அப்ப தூங்கு.
தூங்கலாம்.பட் நீ இன்னும் தூங்கலையே.சோ உனக்கு கம்பெனி கொடுக்கலாம்னு இருக்கேன்.
சரி அப்ப கம்பெனி கொடு.
ம்ம்ம் சரி.அப்புறம்.
அப்புறம்ம்ம்ம்ம்.
ராஜி உனக்கு அது வந்துடுச்சுல்ல.
எது.
அதான்.
அதான்னா எது.
அதான் ராஜி.சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லிடு.
சொல்லிடவா.
ம்ம்ம் சொல்லு ராஜி.
அது வந்து கார்த்திக்
ம்ம்ம்ம்ம் சொல்லு
இல்ல நீ தப்பா எடுத்துக்க மாட்டியே.
அதெல்லாம் ஒன்னும் இல்லை.நீ சொல்லு.
அடுத்த பாகம் எப்போ வரும்?
hey next part epo?..
hey nice bro…
next part upload quickly… 🥰
Next part upload pannunga