அது போன மாசம்.இது இந்த மாசம்.நானும் வைப்பேன்.
சிரித்துக்கொண்டே சரி வச்சுக்கோ.யப்பா இதை உனக்கு கொடுக்கிறதுக்குள்ள முடியலடா சாமி.சரியான பிசாசு ராஜி நீ.
அது அப்படித்தான்.நான் பிசாசாவே இருந்துட்டு போறேன்.சீக்கிரம் பிரெஷ் ஆகிட்டு வா.காபி கலந்து தரேன்.
ம்ம் சரி.இன்றும் ராஜி இரண்டு ஸ்பூன் சீனியைஎ அதிகமாக கலந்தாள் ராஜி.
பிரெஷ் ஆகிவிட்டு வந்த கார்த்திக் காபியை வாங்கி குடித்தவன் சுகர் அதிகமாக இருப்பதை அறிந்தவன்
ராஜி.பொண்ணுக ரொம்ப சந்தோசமா இருந்தா அதை சாப்பாட்டுல தான் காட்டுவாங்க.நீ ரொம்ப சந்தோசமா தானே இருக்க.
ஏன் இப்படி கேக்குற.
இல்ல.இன்னைக்கும் காபில சுகர் அதிகமாக இருக்கு.அதான் கேட்டேன்.
எப்படி இவ்ளோ கரெக்டா கண்டுபிடிக்கிறான்.கடவுளே இவன் சொன்ன மாதிரியே லவ் பண்ணிடுவோமோ.ம்ம்ஹ்ம்வ மாட்டேன்.கண்டிப்பா அப்படி எதுவும் நடக்காது.
அப்படிலா ஒன்னும் இல்லை.தேவை இல்லாம கண்டதையும் கற்பனை பண்ணிக்காத.
ம்ம்ம்ம் சரி.சரி.
இல்ல நீ நினைக்கிற எதுவும் நடக்காது.
நான் என்ன நினைச்சேன்.
இல்ல நீ சரி சரின்னு ஏதோ நினைச்ச அதை சொன்னேன்.
நான் என்ன நினைச்சேன் தெரியுமா.
வேண்டாம் எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்.
இல்ல நான் சொல்லுவேன்.
நான் கேக்க மாட்டேன் என்று அவன் எதிரில் கேட்பது போல நின்றாள்.
கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு கேக்குறதுக்கு நிக்குற.
நான் ஒன்னும் கேக்குறதுக்கு நிக்கலை.கப்பை கொடு வாஷ் பண்ணனும்.அதான் நிக்குறேன்.
சரி அதுக்குத்தான் நிக்குறன்னு எனக்கு தெரியும்.இருந்தாலும் நான் சொல்லிடுறேன்.நாளைக்கு அப்பாவும் அம்மாவும் வராங்க.அதான் சொல்ல வந்தேன்.
சரி என்று மட்டும் சொன்னவள் அதன் பின் என்னது அதையும் மாமாவும் வரங்காளா.
ஆமா.அதான நானும் சொன்னேன்.
இல்ல ஏதோ ஞாபகத்துல.சரி எப்ப வராங்க.
நாளைக்கு காலைல.என்னையும் லீவ் போட சொன்னாங்க.
எதுக்கு.
நாளைக்கு ஏதோ விரதமாம்.அதான் இருக்க சொன்னாங்க.
சரி.நான் அப்போ நாளைக்கு வீட்டை கிளீன் பண்ணி வச்சிடுறேன்.இன்னைக்கு மளிகை சாமான் எல்லாம் தீர்ந்து போச்சு. வாங்கணும் கார்த்திக்.
ஓகே.ஒன்னு பண்ணு எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு வை.அப்றமா நான் வாங்கிட்டு வந்துடுறேன்.
ஓகே.
பின் இருவரும் சேர்ந்து லிஸ்ட் போட்டு கார்த்திக் வாங்குவதற்கு சென்றான்.
அதன் பின் அன்றைய இரவு அதிக பேச்சுகளுடனும் சின்ன சின்ன சண்டைகளுடனும் முடிந்தது. மறுநாள் காலை கார்த்திக்கின் அப்பாவும்,அம்மாவும் யாத்திரை முடிந்து வந்துவிட கார்த்திக்கும் ராஜியும் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டனர்.
பின் பயணம் பற்றி ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.பின்னர் குளித்துவிட்டு காலை உணவு முடிந்தது.
பின் சாந்தா மருமகளிடம் வந்து என்னமா ரெண்டுபேரும் சந்தோசமா இருந்திங்களா.என்றாள்.
ம்ம்ம் சந்தோசமா இருந்தோம் அத்தை என்று வராத வெட்கத்தை வரவைத்துக்கொண்டு சொன்னாள்.
சரிம்மா கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது.எதாவது நல்ல செய்தி உண்டாம்மா.
ராஜிக்கு திடுக்கென்றானது.இப்போதான் எல்லா பிரச்சனையும் முடிந்தது.இப்போ புது பிரச்சனையா என்று நினைத்துக்கொண்டாள்.
இல்லத்தை.நாங்களும் அதுக்குத்தான் காத்துகிட்டு இருக்கோம்.என்று ஒரு பொய்யை சொல்லி வைத்தாள்.
நாங்களும் அங்க ஒவ்வொரு தெய்வத்துக்கிட்டையும் அதான்மா வேண்டிக்கிட்டோம்.அதுக்கு ஒரு சாமியார் சொன்னாரு அந்த முருகனை நினைச்சிட்டு தினமும் அவருக்கு தினமும் தீபம் போட சொன்னாரும்மா.நீயும் கொஞ்சம் சிரமம் பாக்காம செய்யுமா.
கண்டிப்பா செய்யுறேன் அத்தை.எனக்கும் அதான் வேணும்.
பின் இருவரும் யாத்திரையில் நடந்த விஷயங்கள்,அங்கு சென்ற கோவில்களின் சிறப்புகள் என்று பேசிக்கொண்டேஎ மதிய சாப்பாட்டை தயார் செய்தனர்.
கார்த்திக்கும் அப்பாவிடம் இதையே பேசிக்கொண்டிருந்தான்.அப்படியாக அவர்கள் பேசிக்கொண்டது நேரம் போனதே தெரியவில்லை.
பின் ஆண்கள் இருவருக்கும் வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது.ராஜியையும் சாப்பிட சொல்ல இல்லத்தை நான் அப்புறமா சாப்பிட்டுக்கிடுறேன் என்றாள்.
ஓஹ் புருஷன் சாப்பிட்டதை சாப்பிடணும்னு ஆசை படுறியா.சரி படிச்ச பொண்ணு இதெல்லாம் பிடிக்காதுன்னு நினைச்சுட்டேன்.சரிம்மா கொஞ்சம் பொறு.நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றாள் சாந்தா.
அடுத்த பாகம் எப்போ வரும்?
hey next part epo?..
hey nice bro…
next part upload quickly… 🥰
Next part upload pannunga