என் காதல் கண்மணி 4 69

உறவுகளின் உன்னதத்தை சொல்லும் அற்புதமான படைப்பு.

முதல் பக்கத்தை திரும்பியவள் அழகாக கார்த்தி என்று எழுதப்பட்டு இருந்தது.

புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாள் ராஜி.

வேளைக்கு வந்த கார்த்திக் அன்றைய வேலைகளை முடித்துவிட்டு சைட் விசிட் சென்றான்.

பின் அவனுடைய ஆபிஸ் பிரென்ட் ஒருவனுடன் KFC சென்றான்.

அங்கு சென்று பாக்கெட் சிக்கன் ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவனுடைய பின்சீட்டில் இருந்த பொண்ணுக கூட்டம் ஹாப்பி பார்த் டே மான்வி.என்று சொல்லி கோக் சியர்ஸ் சொல்லும் சத்தம் கேட்டது.

எல்லோரும் அவர்களையே பார்க்க கார்த்திக்கும் திரும்பி பார்த்தான்.

அப்போது அவனுடைய பிரென்ட் பார்த்தியா நண்பா ஓசில ட்ரீட்ங்கிற பேருல பண்ற அம்பல.

விடுடா.ஜாலியா இருக்காங்க.நீயும் காலேஜ் டைம்ல இப்படித்தான அலைஞ்சிருப்ப அப்புறம் என்ன.

என்னடா நீ இப்படிலா பேசக்கூடிய ஆள் கிடையாதே.

அதெல்லாம் ஒன்னும் இல்லடா அவுங்க பாட்டுக்கு என்ஜாய் பன்றாங்க.உனக்கென்ன.

டாய் பொண்டாட்டி வந்தா எல்லாரும் மாறிடிறீங்கடா.

ஆமா இவரு மட்டும் ரொக்கம்.அலையாத.மூடிட்டு சாப்பிடு.

அங்க பாருடா.அந்த ட்ரீட் கொடுக்குற பொண்ண செமையா இருக்காடா.மான்வி பேருகூட அழகா இருக்குடா.

அப்படியா போட்டோ எடுத்து உன் பொண்டாட்டிகிட்ட அனுப்புறேன்.அவ கிட்ட போய் கேளு.சொல்லுவா.

எப்பா.அதையும் இதையும் சொல்லி எனக்கு உலை வச்சிடாத.சும்மாவே ஊமை குத்தா குத்துறா.

தெரியுதுல.சாப்பிடு.

அவனிடம் பேசிவிட்டு கார்த்திக் திரும்பி பார்க்க அந்த ஆறு பொண்ணுகளில் சக்தியும் இருந்தாள்.

ஹேய் சக்தி.மச்சி ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு அந்த டேபிளுக்கு சென்றான் கார்த்திக். அங்கு சென்ற கார்த்திக் சக்தியிடம் சென்று ஹலோ. என்ன காலேஜூக்குலாம் போறது இல்ல.ஒரே ஊரை சுத்துதுறதுதான் வேலை போல.

அவன் சொல்லியதை கேட்ட பெண்கள் அனைவரும் அவனை பார்த்து திரும்ப அப்போது தான் சக்தி கார்த்திக்கை பார்த்தாள்.

ஹேய் கார்த்திக்.நீ எங்க இங்க.

அதை நான் கேட்கணும்.என்ன ட்ரீட்டா.

ஆமா.என் பிரெண்டுக்கு இன்னைக்கு பெர்த் டே.அதான் இந்த ட்ரீட்.நீ எங்க இங்க.

ஹ்ம்ம்.என் லவ்வெறும் நானும் வந்தோம்.அப்படியே உன்னை பாத்தேன்.வந்துட்டேன்.ப்ச் என்று உதட்டை பிதுக்கினான்.

ஐயோ முடியலப்பா சாமி.எங்க உன் லவ்வேரை காட்டு பாப்போம்.

அது உன்னை பார்த்த உடனே அவளை போக சொல்லிட்டேன்.

ஏன் கார்த்திக்.உனக்கே இது ஓவெரா தெரியல.

இல்லையே.சரி எங்களுக்குலாம் ட்ரீட் கிடையாதா.

ம்ம்ம் கண்டிப்பா.உனக்கு இல்லாததா.பட் நீ ட்ரீட் கேட்டா வேற ஒண்ணுலா கேப்ப.அதுக்கு இங்க பார் இல்லையே.

சரி சரி கம்பெனி சீக்கிரட்ட வெளிய சொல்லாத.

அப்போது சக்தியின் பிரெண்ட்ஸ் அனைவரும் இவர்களையே வெறித்து பார்த்து கொண்டிருந்தனர்.

அதை கவனித்த சக்தி ஓஹ்.சாரி.இவுங்கல்லாம் என் பிரெண்ட்ஸ்.கௌரி,சுஜி,ரம்யா,கௌசல்யா,மான்வி,அப்புறம் நான் சக்தி.

அதான் தெரியுமே.நீ சக்தின்னு.பொதுவாக எல்லோரையும் பார்த்து ஹை னு சொல்லிவிட்டு தனது அக்மார்க் சிரிப்பை உதிர்த்தான் கார்த்திக்.

எல்லாரும் பதிலுக்கு சிரித்துவிட்டு ஹாய் என்றனர்.

அப்புறம் பிரெண்ட்ஸ் இவரு என்று சொல்லும் முன் அனைவரும் கார்த்திக் என்றனர் கோரஸாக.

கார்த்திக் பதிலுக்கு சிரித்துவிட்டு சரி சக்தி.நீங்க கன்டினியூ பண்ணுங்க.நான் கிளம்புறேன்.பாய்.என்று சொல்லிவிட்டு திரும்ப.

ஹலோ ஒரு நிமிஷம்.ட்ரீட் கேட்டுட்டு எங்க ஓடுறிங்க.வாங்க நீங்களும் ஜாயின் பண்ணிக்கங்க என்றாள் மான்வி.

திரும்பிய கார்த்திக் மான்வியை பார்த்து உங்க நேம் ம்ம்ம்ம்ம்ம்ம் எஸ் மான்வி.விஷ் யு எ ஹாப்பி பார்த் டே.அண்ட் தாங்ஸ் பார் யுவர் கன்செர்ன்.

ஹே கார்த்திக்.அதான் சொல்ராள்ள.இரேன்.ப்ளீஸ்.

ஹே இல்ல.எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு.சோ இன்னொரு நாள் பாக்கலாம்.பட் அணைக்கு என்னோட ட்ரீட்.ஓகேவா.

ம்ம்ம்ம் ஓகே என்றனர் அனைவரும்.

ஓகே டேக் கேர்.பாய்.என்று சொல்லிவிட்டு கார்த்திக் பில் செட்டில் செய்துவிட்டு நண்பனுடன் சென்றுவிட்டான்.