என் காதல் கண்மணி 4 69

பிடிக்கும்.ஆனா இந்த சீரியல் பிடிக்காது.

எனக்கு இதுல எனக்கு பிடிச்ச ஜோடியே சரவணனும் மீனாட்சியும் தான்.உனக்கு

நமக்கு எப்போதுமே கார்த்திக்,ராஜிதான்.

என்னது.

இல்லப்பா ஆபிஸ் சீரியல்ல வருவாங்களே அந்த கார்த்திக்,ராஜீய சொன்னேன்.

அதான பாத்தேன்.நீ இன்னைக்கு வாங்கி கட்டிக்கத்தான் போற.

பாக்கலாம் பாக்கலாம்.

ஹே மாத்துப்பா.

முடியாது.

இப்ப நீ மாத்தலை ரிமோட்டை பிடிங்கி மாத்துவேன்.

எங்க மாத்தித்தான் பாரேன்.

சட்டென்று அவளிடம் பிடிங்கி சண்மியுசிக் வைத்தான்.

பின் கார்த்திக்கிடம் சண்டை போட்டு ரிமோட்டை பிடிங்கி விஜய் டிவி மாற்றினாள்.

உன்னை என்று சொல்லிவிட்டு டிவிக்கு பக்கத்தில் சென்று டிவியில் சேனல் மாற்றினான்.

அவன் மாற்றியதும் டிவியில் மீண்டும் ராஜி மாற்றினாள்.

பின் கார்த்திக் டிவியில் சேனல் மாற்றிவிட்டு சென்சாரை கைகளால் மறைத்துக்கொண்டான்.

ராஜி ரிமோட்டில் மாற்ற சேனல் மாறாததால்

தள்ளிப்போ கார்த்திக்.

முடியாது.முடிஞ்சா மாத்திக்கோ.

அவன் அருகில் சென்ற ராஜி அவனை தள்ளிவிட்டு சேனலை மாற்றினால்.

பின் கார்த்திக் பிடுங்க பதிலுக்கு ராஜியும் பிடுங்க என்றுஇப்படியாக யார் பெரிய புடுங்கி என்று அவர்களின் ரிமோட் பிடுங்கல் சண்டை முடிந்தது.

பின் இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர்.

சாப்பிட்டுவிட்டு கார்த்திக் ரூமிற்கு சென்று மெத்தையில் படுத்துக்கொண்டு செல்லை பார்த்துக்கொண்டிருந்தான்.

அங்கு வந்த ராஜி 5 நிமிடமாக இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

அப்போது அவளை பார்த்த கார்த்திக் என்ன என்றான்.

என்ன திமிரா. இல்லையே.நீதான சொன்ன அதான்.வா வந்து படுத்துக்கோ.எனக்கு ஒன்னும் அப்ஜெக்ட்க்ஷன் இல்லை.

ஏதோ பழமொழி சொல்லுவாங்க.இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்டானா ஒருத்தன்.அது உனக்கு சரியாய் இருக்கு.கார்த்திக் எனக்கு செம டயர்டா இருக்கு.கடுப்ப கிளப்பாம நகரு.

இப்போதெரியுதா ஆம்பளைங்க எவ்ளோ அடஜஸ்ட் பண்ணறோம்னு.பொண்ணுகளுக்குத்தான் இரக்கமே இல்லை.இவ்ளோ பெரிய மெத்தைல தனியாத்தான் படுப்பாங்களாம்.நல்லா படுத்து உருளு.குட் நைட்.

ம்ம்ம்ம்.அது.இதை முதல்லயே செஞ்சிருக்கலாம்ல.தாங்ஸ் நண்பா.

ஏய் குண்டாத்தி.பேசாம தூங்குடி.

சரி நண்பா கோச்சுக்காதடா.குட் நைட்.நல்லா தூங்கு.

ம்ம்ம்ம் ம்ம்ம் குட் நைட்.

பின் இருவரும் நன்றாக தூங்கினர்.

மறுநாள் காலை வழக்கம் போல் குளித்துவிட்டு தனதுவேலைகளை பார்க்கத்தொடங்கினாள் ராஜி.

கார்த்திக் எழுந்து பிரஷ்அப் ஆகிவிட்டு கிச்சன் செல்ல கையில் காபி உடன் வந்தாள் ராஜி.

குட் மார்னிங்.சாருக்கு இப்பதான் விடிஞ்சுதா.

குட் மார்னிங் ராஜி.ரொம்பநாள் கழிச்சு நேத்துதான் நல்லா தூங்கினேன்.அதான் லேட்டா ஆகிடுச்சு.

ம்ம்ம் சரி கிளம்பு குளிச்சிட்டு கிளம்பு கார்த்திக்.டைம் ஆகிடுச்சு.உன் ட்ரெஸ்ஸல்லாம் மேல அயன் பண்ணி வச்சிட்டேன்.சீக்கிரம்.

அயன் பண்ணினியா.தன் கையை கிள்ளி பார்த்துவிட்டு நிஜம்தானா.ராஜி காலையிலே இன்ப அதிர்ச்சி கொடுக்கிறியே.

மூடிட்டு போடா.உனக்கு போய் ஹெல்ப் பண்ணேன் பாரு என்ன சொல்லணும்.இனிமேல் பண்ணமாட்டேன் சாமி நீயே பாத்துக்கோ.

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க பிரெண்டு.

சரிங்க பிரெண்டு கிளம்புங்க.

பின் கார்த்திக் குளித்துவிட்டு ஆபிஸ் சென்றுவிட வழக்கம் போல ராஜிக்கு தனிமை வாட்டியது.

பின் ரூமிற்கு சென்று எதாவது செய்யலாம் என்று எண்ணியவள் ரூமிற்கு சென்றாள்.

அப்போதுதான் அங்கு புத்தகங்கள் அடுக்கி இருப்பதாய் கண்டாள்.

அதன் அருகே சென்றவள் அதை பார்த்துவிட்டு

ம்ம்ம் புக்ஸ்லா படிக்கிறானா.அதான் பார்ட்டி ஒரு வார்த்தை பேசுறதுக்கு ஒன்பது வார்த்தைல பதில் சொல்றானா.சரி எதாவது ஒரு புக்கை படிப்போம் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக தேடினாள்.

கல்கியின் பொன்னியின் செல்வனில் இருந்து ஆரம்பித்து கடைசியில் உமா பாலகுமாரன் நாவல்கள் முடிந்து,சேத்தன் பகத்தின் கலெக்சன் முடிந்தது.எதுவும் பிடிக்கவில்லை.

பின் அடுத்த ரேக்கில் மிட்டல்,அம்பானி,அப்துல்கலாம் என்று இந்தியாவின் சிறப்பு மிக்கவர்களின் பையோபிக் புத்தகங்கள்.அதிலும் அவளுக்கு விருப்பம் இல்லை.

எவ்ளோ புக்ஸ் வச்சிருக்கான்.ஆனா எல்லாமே இந்தியன் ஆதர்சா இருகாங்க.ஏன் பாரின் ஆதர்ஸ் படிக்க மாட்டான்.சரி அடுத்து பார்ப்போம் என்று தேடினாள்.

அப்போது தான் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் அணிலாடும் மூன்றில் புத்தகத்தை பார்த்தாள்.சரி இதை படிக்கலாம் என்று எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.