என் காதல் கண்மணி 4 69

ஓகே ராஜி.உன் மனசு எனக்கு புரியுது.ஆனா அப்பா அம்மா வந்தா நடிச்சுதான் ஆகணும்.அப்ப என்ன பண்ண.

அதான் நீயே சொல்லிடியே நடிக்கணும்னு.நடிச்சுதான் ஆகணும்னு.நடிப்போம்.

ம்ம்ம் சரி.தாங்ஸ் ராஜி.

எதுக்கு.

இல்ல இப்பவாச்சும் சொன்னியே.இதுதான் நான்னு.அதுவரைக்கும் சந்தோசம்.ஆனால் நீதான் இப்படியா இல்லை உங்க மொத்த குடும்பமே இப்படித்தானா.

ஹே என்ன ரொம்ப ஒவேரா பேசுற.

அப்புறம் என்னடி.இவுங்க ஒரே வீட்ல இருப்பாங்களாம்.புருஷன் பொண்டாட்டியா நடிப்பாங்களாம்.ஆனால் பிரெண்ட்ஸா மட்டும் இருப்பங்களாம்.எங்கடி நடக்கும்.

கார்த்திக் நீ ரொம்ப பேசுற.

அப்படிதாண்டி பேசுவேன்.என்னடி பண்ணுவ.

ச்சி போடா.உன்கிட்ட போய் பேசினேன் பாரு என்ன சொல்லணும்.

பின் இருவரும் பேசாமல் இருந்தனர்.

சரி.

இன்னைக்கு சொல்றேன் ராஜி.வர டிசம்பர் 17 உனக்கு பர்த் டே.அன்னைக்குள்ள நீயா வந்து கார்த்திக் நான் உன்னை லவ் பன்றேன்னு சொல்ல வைக்கலை.என் பேரு கார்த்திக் இல்லடி.

என்ன சவாலா.

ம்ம்ம்ம்ம்ம் சவால்னே வச்சிக்கையேன்.

வேண்டாம் கார்த்திக்.தோத்து போய்டுவ.6 வருஷமா உன்மேல வராத காதல் இந்த 6 மாசத்துல வந்துடும்னு நினைக்கிறியா.

இன்னும் ஆறே மாசத்துல வரும்.இன்னைக்கு தேதி ஜூலை 17.இந்த 6 மாசத்துல ஒருதடவையாச்சும் உன் கண்ணுல அந்த காதலை பாத்துடுவேன்னு நான் நம்புறேன்.என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.உன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா.

நீ சொல்றதை பார்த்தாள் சிரிப்புதான் வருது.என்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.வீனா சவால் விட்டு உன்காதல் தான் தோத்து போக போகுது. ம்ம்ம் அதையும் பாக்கலாம்.பட் ஒன் கண்டிஷன்.

என்ன .

நாம இதே மாதிரி இந்த ஆறு மாசமும் பிரெண்ட்ஸாதான் இருக்கணும்.எப்போதும் போல பேசிக்கணும்சரியா.

இதைத்தானே நான் முதல்லயே சொன்னேன்.

சரி ரெண்டாவது தடவையும் சொல்லு.

சரி பிரெண்ட்ஸாவே இருப்போம்.ஆனால் சவாள்னு வந்துட்டா யாராவது ஒருத்தர்தான் ஜெயிப்பாங்க.ஒருத்தர் தோத்துடுவாங்க.இதனால ஜெயிக்கிறவங்களுக்கு என்ன லாபம்.

அதையும் நீயே சொல்லிடு.

சரி அப்படி நீ ஜெயிச்சா நீ என்ன சொன்னாலும் நான் முழுமனசோடு ஏத்துக்கிடுறேன்.நான் ஜெயிச்சா.

ஹ்ம்ம் சொல்லு.ஏதோ முடிவு பண்ணிட்ட. நான் ஜெயிச்சா நாம ரெண்டு பேரும் டைவோர்ஸ் பண்ணிக்கணும்.இதுக்கு உங்க வீட்டுல எங்க வீட்டுல எல்லாருகிட்டயும் பேச சமாளிக்க வேண்டியது உன் பொறுப்பு.அதனால எந்த பிரச்சனை வந்தாலும் உன் பொறுப்பு.யாரு என்ன கேட்டாலும் நீதான் எல்லாத்துக்கும் காரணம்னு நான் சொல்லுவேன்.என் பேரு கெடாத அளவுக்கு எனக்கு டிவோர்ஸ் வாங்கித்தரனும்.சம்மதிக்கிறியா.

கண்டிப்பா.நீ இதைத்தான் சொல்லுவான்னு எனக்கு நல்லா தெரியும்.அதுவும் இல்லாம உனக்கு ஒன்னும் இது புதிது இல்லையே.

அப்புறம் நீ ஒரு கண்டிஷன் போட்டல்ல.நானும் ஒரு கண்டிஷன் போடுறேன்நமக்குள்ள இருக்க இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது.வெளி உலகத்துக்கு பொறுத்தவரைக்கும் நாம சந்தோசமாதான் இருக்கோம்னு தெரியணும்.சரியாய்.

தெளிவாத்தான் இருக்க.இந்த செகண்ட்ல இருந்து ஆரம்பிச்சிக்கலாம்..
ம்ம்ம் ஓகே.அவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.ஆல் த பெஸ்ட் ராஜி.

உனக்கும்தான்.

கைகொடுக்க மாட்டியா ராஜி.

மாட்டேன்.கண்டிப்பா.என்னைக்காவது ஒருநாள் விடத்தான போறேன்.

பாக்கலாம்.

சரி இன்னைக்கு என்ன டின்னெர்.

பூரியும் கிழங்கும் செய்யணும்.கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.

சரி பண்ணிடலாம்.

பின் இருவரும் சாப்பாடு தயார் செய்துவிட்டு வெளியேவ வந்தனர்.

அப்புறம் கார்த்திக்.உன் விரதத்தை இன்னையோட முடிச்சுக்கோ.

என்ன விரதம்.

ஆம்.முனிவர் விரதம்.கேக்குறத பாரு.எப்படியும் 6 மாசம்தான் ஒண்ணா இருக்க போறோம்.சோ நம்ம ரூம்லையே இருக்கலாம்.உன் திங்க்ஸ் எல்லாத்தையும் நம்ம ரூம்லையே எடுத்து வச்சுட்டேன்.அண்ட் நீயும் நைட் அங்கையே தூங்கு.

இல்ல அது வந்து.

என்னப்பா உன்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.

ஹஹஹஹா யாரு நானா.விசுவாமித்திரன் வம்சம்டி.எங்ககிட்டையேவா.

ப்ளீஸ் கார்த்திக் தயவு செஞ்சு இதே மாதிரி சிரிக்காம காமெடி பண்ணாத.ஐயோ அப்பா சிரிக்க முடியலையே. என்று வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் ராஜி.

ஓகே ஓகே ரிலாக்ஸ்னு சொல்லிக்கொன்டு கண்ணீர் வரும்வரை சிரித்தவள் பின்

நேத்து இழுத்துவச்சு கிஸ் அடிக்கும்போது பாத்தேனே விசுவாமித்திரனை.

ஹலோ அது போன மாசம்.இது இந்த மாசம்.

போடா.போ.மொக்கை போடாத.

நீ இங்க வந்து இன்னைக்குத்தான் ராஜி கண்ணீர் வர அளவுக்கு சிரிச்சிருக்க.

அதைக்கேட்டு மௌனமாக இருந்தவள் சரி டிவி பார்க்கலாமா.

ம்ம் பாக்கலாம்.நீ தெய்வமகள் சீரியல் பாப்பியா ராஜி.

ஹ்ம்ம் பாப்பேன்.ஏன் நீயும் பார்ப்பியா.

ஆமா.நம்ம காயு டார்லிங் காகவே அந்த சீரியல் பார்ப்பேன்.

ம்ம்.நான் பிரகாஷ்காக பார்ப்பேன்.

பின் இருவரும் அந்த சீரியலை பார்த்துவிட்டு விஜய் டீவியை மாற்றினாள் ராஜி.

ஹே ராஜி அது மட்டும் வைக்காத.மொக்க சீரியல்.அது.

ஏன் நீ சரவணன் மீனாட்சி பாக்க மாட்டியா.எனக்கு ரியோன்னா ரொம்ப பிடிக்கும்.அவனுக்காகவே பார்ப்பேன்.

எனக்கு பிடிக்கவே பிடிக்காது.ஒரு பொண்ணு மூணு பேரு காதலிப்பாங்க.சீரியல் மாறும்.பொண்ணு மட்டும் மாறாது.எப்படித்தான் மூணு பேர லவ் பன்றாளோ.

ஹலோ பொண்ணு அப்படியேதான் இருக்கு பசங்கதான் மாறிட்டு இருக்காங்க.

ஹாஹாஹா இப்போ அந்த பிரச்சனையே வேண்டாம்.ஆண் பொண்ணுன்னு பேச வேண்டாம்.வேற சேனல் மாத்துப்பா.

மாட்டேன்.ஆமா உனக்கு லவ் சீரியலே பிடிக்காதா.