என் காதல் கண்மணி 4 69

தாங்ஸ் என்று வாங்கிக்கொண்டு காபியை வாங்கியவன் ஒரு மிடறு குடித்தவன் இனிப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்து உடனே கப்பை எடுத்துகொண்டான்.

என்ன காபி நல்லா இல்லையா.

இல்ல சுகர் ஜாஸ்தியா இருக்கு.அதான்.பரவா இல்லை.அட்ஜஸ்ட் பண்ணிக்கிடுறேன்.

தெரியும் தம்பி.வேணும்னு தான போட்டேன்.பொண்ணுக எப்போதுமே சந்தோஷத்தையும்,துக்கத்தையும் சாப்பாட்டுலதான் காமிப்போம்.பாக்கலாம் புரிஞ்சிடுறியா இல்லையான்னு.மனதுக்குள் நினைத்து கொண்டு உதட்டை சுளித்துக்கொண்டு சிரித்தாள்.

சாரி அண்ட் தாங்ஸ் ராஜி.

எதுக்கு.

இல்ல சாரி நேத்து நடந்துகிடத்துக்கு.தாங்ஸ் வந்து

பிரெண்ட்ஸ் என்று அவள் கை நீட்ட.

புரியல.

பிரெண்ட்ஸ் என்று மீண்டும் ராஜி கை நீட்ட

ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்து தலை ஆட்டிக்கொண்டே தயக்கத்துடனே கைநீட்டி குலுக்கினான்.

கார்த்திக் ப்ளீஸ் நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் மறந்துடுவோம்.இனிமேல் நாம ரெண்டுபேரும் பிரெண்ட்ஸ்.அதுக்கு அப்றம் நடக்குறதெல்லாம் நடக்கட்டும்.

ம்ம்ம் சரி.

உனக்கு எதாவது வேலை இருக்கா.

இல்லை.அப்ப ஏன் இன்னும் கைய பிடிச்சிட்டு இருக்க.பார்மாலிட்டிக்கு கை குலுக்கினா இப்படி 10 நிமிஷமா பிடிச்சி வைக்க கூடாதுப்பா.

ஓஹ் சாரி சாரி.

ம்ம்ம் முதல்ல இந்த சாரி சொல்றத நிறுத்து.உனக்கு செட்டே ஆகலை.

ம்ம்ம் சரி.

பின் ராஜி கப்பை வாங்கிக்கொண்டு கிச்சனுக்குள் செல்ல

ராஜி ஒரு நிமிஷம்.

என்ன என்பது போல அவனை பார்க்க.

இல்ல.அதுவந்து நேத்து.நேத்து.நைட்டுடுடுடு.இல்ல ஒன்னும் இல்ல.நீ போ.நீ போ.

இல்ல.ஏதோ கேக்க வந்த.சொல்லு.வாய் வரைக்கும் வந்துடுச்சு.சும்மா கேளு. நேத்து நைட்.எனக்கு நல்ல போதை.என்ன நடந்துச்சுன்னு தெரியல.அதான் என்ன நடந்துச்சுன்னு கேட்கலாம்னு

ஒன்னும் நடக்கல.நல்லா யோசிச்சி பாரு.புரியும்.

ஐயோ ராஜி சத்தியமா எனக்கு எதுவுமே நியாபகத்துல இல்லை.அட்லீஸ்ட் என்ன சொன்னன்னு ஆச்சும் சொல்லேன்.

உண்மைய சொன்ன என்று தலைவர் ஸ்டைலில் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள் ராஜி.

ராஜி அப்புறம்..

மறுபடியும் என்ன.

ஹேங்ஓவெறுக்கு தேங்காய் தண்ணி குடிச்சா சரி ஆகும்னு உனக்கு எப்படி தெரியும்.அதுவும் இல்லாம எனக்கு ஹாங்ஓவர்னு உனக்கு எப்படி தெரியும்.

அதான் முன்னாடி குடிச்சிட்டு தலைவலின்னு சொல்லுவியே.அதை வச்சுத்தான் தெரியும்.ஹேங்ஓவெறுக்கு தேங்காய் தண்ணிகுடிச்சா நல்லதுன்னு ரமணாமகரிஷி சொல்லிருக்காரு.அதான் கொடுத்தேன்.இப்போ எதுக்கு இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி எல்லாம்.போ.எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு.டின்னெர் ரெடி பண்ணனும்.சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் ராஜி. ரமணமஹரிஷியா. ம்ம்ம் அவரு இதுக்கெல்லாமா தீர்வு சொல்லிருக்காரு.

டேய் முட்டாள் அவள் உன்னைய கிண்டல் பண்ணிட்டு போராடா மரமண்டை.அவனுடைய மனசாட்சி பேசியது.

ஐய் ராஜி என்ன கிண்டல் பன்னிட்டா ஜாலிய்ய்ய் என்று குதித்தான் கார்த்திக்.

ஹலோ அங்க என்ன சத்தம்.இன்னும் கிளம்பலையா.

சும்மா பேசிக்கிட்டிருந்தேன்.இதோ போயிடுறேன்.

சொல்லிவிட்டு கிச்சன் சென்றவன். ராஜி போன் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லை.

ஆரம்பிச்சிட்டியா.எனக்கு நிறைய வேலை இருக்கு அப்புறம் பேசலாமே.

ம்ம்ம்ம்ம்ஹூம்.நீ வேலை செஞ்சிட்டே பேசு.

சரி அப்ப ஒரு டீல்.நீ டின்னெர் ரெடி பண்ண எனக்கு ஹெல்ப் பண்ணுவியாம்.நான் பதில் சொல்லிட்டே வேலைய பார்ப்பேனாம்.ஓகேவா.

ம்ம்.டபுள் ஓகே.

ஹே என்னப்பா உடனே ஓகே சொல்லிட்ட.கொஞ்சமாவது பிகு பன்னி ஒத்துக்கணும்ப்பா.

என் பொண்டாட்ட்ட்.ம்ம்ம்ம்ம்க்கும் ம்ம்ம்ம்ம்க்கும்

என்னது.என்ன சொன்னம்.திரும்ப சொல்லு.

இல்ல.என் பிரெண்டுக்கு நான் ஹெல்ப் பண்றேன்.அதுக்கு எதுக்கு நான் பிகு பண்ணனும்னு சொல்ல வந்தேன்.

இல்லையே பொண்டாட்டி னு ஏதோ சொல்ல வந்தமாதிரி இருந்தது.

இல்லையே நான் அப்படி ஒன்னும் சொல்லலியே.ஐ திங்க் உனக்கு ஏதோ ஹியரிங் ப்ராப்லம் இருக்கும்னு நினைக்குறேன்.

ஹலோ எங்களுக்கு எல்லாம் சரியா இருக்கு.உனக்குத்தான் வாய்ல வாஸ்து சரி இல்லனு நினைக்கிறன்.

சரி சரி விடு விடு.

நல்லா சமாளிக்கிற.வடியுது.தொடைச்சிக்கோ.

சரி கிப்ட்டை பத்தி சொல்லவே இல்ல.புடிச்சிருக்கா.

ஏன் இவ்ளோ காஸ்டலி போன்.

ஒரு எஞ்சினீரோட ஒயிப்.இல்ல இல்ல பிரென்ட்.

பரவா சொல்லு.

ஒரு பேசிக் போன் யூஸ் பண்ணலாமா.அதான் வாங்குனேன்.பிடிச்சிருக்குத்தானே.

ரொம்ப பிடிச்சிருக்கு.போனை.

அப்ப போன் வாங்கித்தந்த ஆள பிடிக்காதா.

முன்னாடி பிடிக்காது.இப்போ ஒரு பிரெண்டா பிடிக்கும்.உடனே மூஞ்சை தூக்கி வச்சுக்காத.

நான் ஒன்னும் பீல் பண்ணலை.மேல சொல்லு.

கார்த்திக் இப்போ உன்மேல எனக்கு எந்த லவ் பீலிங்கும் வரலை.பியூட்டர்ல வருமான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல.ஆனால் உன்மேல சின்னதா ஒரு நம்பிக்கை.ஆனால் கல்யாண விசயத்துல நீ பண்ணினதை என்னால மன்னிக்கவே முடியலை.

ராஜி அது வந்து.

நான் பேசிக்கிடுறேன்.அதை நினைச்சாலே நான் பழைய மாதிரி ஆகிடுவேனோன்னு பயமா இருக்கு.சோ நாம பிரெண்ட்ஸா இருக்கவே ட்ரை பண்ணுவோம்.ஆனா இந்தஇந்த பிரெண்ட்ஷிப் வச்சு நெருங்க நினைக்காத.ரொமான்டிக்கா பேசுறதா நினைச்சு உன் மனச புண்ணாக்கிகாத.நான் எதாவது தப்பா பேசிருந்தா சாரி கார்த்திக்.