என் காதல் கண்மணி 4 69

நல்லா வருவ.நான் சும்மாதான் கேட்டேன்.டிரைவர் அனுப்பிருக்கேன்.சாப்பாடு வாங்க.நீ சாப்பிடு நான் அப்றமா வரேன்.உன் பொண்டாட்டி உங்கிட்ட எதோ கேக்க வரான்னு நினைக்கிறன்.சாம்பிராணி மாதிரி இருக்காத.புரிஞ்சுக்கோ.ன்னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுத்த பாக்ஸ்சும் எம்ப்டியாக இருந்தது.ஆனால் அதில் ஏதோ எழுதி இருப்பது போல் தெரிய அதை தடவினான்.ஆனால் அழியவில்லை.முந்தைய பாக்சின் கீழ் ஒரு பேப்பர் ஒட்டப்பட்டு இருந்தது.அதில்

நான் நேத்து பேசினது எல்லாம் கோவத்துல பேசினது.எதுவுமே என் மனசுல இருந்து வந்தது இல்லை.உன்ன ஹர்ட் பண்ணினதுக்கு சாரி.இல்லை மன்னிக்கிற அளவுக்கு நான் தகுதியற்றவன்னு நினைக்கிறியா.கொஞ்சம் என் நிலைமையில் இருந்து யோசிச்சி பாரேன்.சாரி சாரி சாரி.1000 டைம்ஸ் சாரி.

படித்த கார்த்திக் உதட்டோரம் லேசாக சிரிப்பு வந்தது.இப்பவாச்சும் மனசு இறங்கி வந்தாலே.ஓவெரா பிகு பண்ணாதடா.அப்பறம் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிட போகுது.மனசாட்சி சொல்லியது.

உடனே போனை எடுத்து ராஜிக்கு கால் செய்தான்.ஆனால் not reachable என்று வந்தது.

டேய் அவ சொல்ற மாதிரி நீ சரியான லூசுதாண்டா.அவ போனை நேத்து உடைச்சிட்டால்ல.அப்ப எப்படி பேசுவா.அவன் மனசாட்சி திட்டியது.

ஆமா.இதை ஏன் நான் யோசிக்காம போனேன்.சரி ஈவினிங் போகும் போது அவளுக்கு ஒரு போன் வாங்கிட்டு போகணும்.அவன் மனசாட்சியிடம் சொன்னான்.

அதை செய் முதல்ல.என்றது மனசாட்சி.

அதன் பிறகு அடுத்த பாக்ஸை எடுத்தவன் அதில் தயிர் சாதமும்,உருளைக்கிளங்கு பொரியலும் இருந்தது.சாப்பிட்டுவிட்டு சைட் விசிட் சென்றவன் வழக்கத்தைவிட சீக்கிரமாக வீட்டிற்கு கிளம்பினான்.

வரும்வழியில் பூர்விகா மொபைல் ஸ்டோர் சென்று ஆப்பிள் ஐபோன் 6 ஆர்டர் செய்தான்.

பின் சிம் போட்டு கால் செய்து பேசுவதற்கு ஏற்றார் போல் அதனை தயார் செய்ய சொன்னான்.அதற்கு ஒரு அரைமணி நேரம் ஆகும் என்று சொன்னதால் பில் போட்டு கார்டை ஸ்விப் செய்தான். போனை ரெடி பண்ணுமாறு சொல்லிவிட்டு கிப்ட் கவரும் ரிப்பனும் வாங்க சென்றான்.பின்ஓ ஒரு பேப்பரில் dont feel guilty.தப்பு என்னோடதுதான்.நான்தான் கொஞ்சம் carefull ஆ இருந்துருக்கணும்.சாரி எல்லாத்துக்கும்.இனி நான் உன்னை எந்த வகையிழும் தொந்தரவு பண்ண மாட்டேன்.அப்புறம் இது கிஸ் பண்ணினத்துக்கு கூலியா தரேன்னு தப்பா நினைச்சிடாத.என்னால உடைஞ்ச உன் போனுக்கு பதிலா என்னால முடிஞ்சது.என் மன்னிப்பை ஏத்துக்கிட்டன்னா இதையும் ஏத்துக்கோன்னு
எழுதினான்.

அரைமணி நேரம் கழித்து போனை வாங்கி கொண்டு எழுதிய பேப்பரை அதனுள் வைத்து அதன் மேல் ஸ்டிக்கரை ஒட்டி ரிப்பனை சுற்றினான்.

ஸ்டிக்கரில் ப்ளீஸ் ஓபன் இட் என்று எழுதி சிரிப்பது போன்ற ஒரு ஸ்மைலி வரைந்தான்.பின் வீட்டை நோக்கி பைக்கை விரட்டினான்.

வீட்டிற்கு வந்த கார்த்திக் காலிங் பெல்லை அடித்தான்.உடனே கதவை திறந்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள் ராஜி.

ரூமிற்கு சென்று பிரெஷ்அப் செய்துவிட்டு கிப்ட் பாக்ஸை எடுத்து கிட்சேன் ஸ்லாபில் வைத்துவிட்டு ஹால்லிற்கு வந்து டிவியை ஆன் செய்தான்.

காபி தயாரித்து கொண்டிருந்த ராஜி கிப்ட் பாக்ஸை எடுத்தவள் அதில் ஓபன் இட் என்று எழுதியிருக்க அதை பிரித்தவள் ஐபோனை பார்த்து அதிர்ந்து போனாள்.

கிஸ் பண்ணினதுக்கு இவ்ளோ காஸ்டலி போன்னா.அவன்கூட படுத்து எல்லாம் நடந்துருந்துதுன்னா அப்ப நிறைய காச வச்சிருப்பான்ல.என்ன பிராஸ் ரேஞ்சுக்கு நினைச்ட்டான்ல.நேத்து என்ன சொன்னான்.அந்த ஒரு முத்தம் போதும் வாழ்நாள் முழுக்கண்ணு சொன்னானே.அதை நம்பித்தான அவன்கூட பழகனும்னு முடிவு பண்ணேன்.ச்சி.அசிங்கம்.அழ வேண்டும் போல இருந்தது.அழவில்லை.கைகளால் வாயை பொத்திக்கொண்டு போன் பாக்ஸை எடுத்துக்கொண்டு பெட் ரூமிற்கு ஓடினாள்.

பாக்ஸை பார்த்து ராஜி தன்னிடம் பேச வருவாள்.என்ன சொல்லுவாளோ என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த கார்த்திக்குக்கு அவள் எதுவும் பேசாமல் ரூமிற்கு சென்றது ஏமாற்றமாக இருந்தது.

அவளாகத்தானே சாரி கேட்டாள்.அவளாகத்தானே பேசணும்னு சொன்னாள்.இப்போ வாயை பொத்திக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள்.சரி எதுவா இருந்தாலும் அவள் போக்கிலே விட்டுட வேண்டியது தான் என்ற முடிவுடன் வெளியே சென்றான்.

ரூமில் தான் வைத்திருந்த பாக்ஸை மெத்தையில் வீசியவள் கண்ணாடியை பார்த்து கதறி அழுதாள்.நான் ப்ராஸ்ஸா.நான் ப்ராஸ்ஸா. என்று கேட்டுக்கொண்டே அழுதாள்.

அப்போதுதான் மெத்தையில் கிடந்த பாக்ஸ் கண்ணாடியில் தெரிந்தது.போனை தவிர மேலும் இரண்டு இருப்பது தெரிந்தது.

கண்ணீரை துடைத்துவிட்டு அதை எடுத்து பார்த்தவள் ஒன்று அவளுக்கு பிடித்த டைரி மில்க் ப்ரூட் நட்ஸ் சாக்கலேட்டும் இன்னொரு லெட்டரும் இருந்தது.

அதை எடுத்து படித்தவள் அதை தன் முகத்தில் வைத்துக்கொண்டு அழுதாள்.

அவளையும் அறியாமல் அவள் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்தது.சாரி கார்த்திக்.என்ன மன்னிச்சிடுடா.எப்போதுமே உன்னை தப்பா பார்த்த மனசு இப்பவும் அப்படி நினைச்சிட்டுடா.

போனை எடுத்து தனது சிம்மை போட்டு முதல் முதலாக கார்த்திக்கு கால் செய்தாள்.

ஒரே ரிங்கில் அட்டென்ட் செய்தவன் ஹலோ என்றான்.

இவள் பேசவில்லை.ஹ

ஹலோ இருக்கியா.என்ன விஷயம் ராஜி.ஹலோ.

அவளுக்கு பேச தைரியம் இல்லை.பெருமூச்சு விட்டு விட்டு கார்த்திக் தனியா இருக்ககே எரிச்சலா இருக்கு.கொஞ்சம் வீட்டுக்கு வரியா.ப்ளீஸ் என்றாள்.

ம்ம்ம்.இதோ வரேன்.ஒரு கப் காபி போட்டு வையென்.5 நிமிஷத்துல வீட்டுல இருப்பேன்.

ம்ம்ம் சரி.வைக்கிறேன்.

ம்ம்ம்.சரி.

சிட்டாக கிச்சன் சென்றவள் காபி கலந்தவள் சீனி கலக்கும் போது எல்லா விஷயத்துலையும் நம்ம மனசை கரெக்டா ரீட் பன்றானே.ஆனால் இப்ப நம்ம தப்பா நினைச்சதை அவன்கிட்ட சொன்னா வெறுத்து ஒதுக்கிடுவான்.அதனால அவன்கிட்ட இதை காட்டிக்காம சமாளிக்கணும் என்று நினைத்துக்கொண்டு எக்ஸ்ட்ரா இரண்டு ஸ்பூன் கலந்துவிட்டாள்.

வீட்டிற்கு வந்த கார்த்திக் ராஜியை தேட கிச்சனில் இருந்து ம்ம்ம்ம்க்க்கும் என்று இருமினாள்.

காபி என்று அவனிடம் நீட்டினாள்.