யாரோ இருவர் தலையின் இரண்டு பக்கமும் சுத்தியலால் அடிப்பது போன்று தலைவலி பயங்கரமாக இருந்தது.
என்ன கருமத்தடா குடிச்ச கார்த்தி.இப்படி தலைவலிக்குது.இவ சும்மாவே தையதக்கனு குதிப்பா.இதுல நைட் குடிச்சிட்டு வேற என்ன பன்னி தொலைச்சியோ.அப்ப்பா.என்று மைண்ட் வாய்சில் பேசினான்.
மெதுவாக எழுந்து பேஸ்ட்,பிரஷ் எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று பிரெஷ்அப் ஆக சென்றான்.எல்லாம் முடித்துவிட்டு பேஸ் வாஷ் செய்ய கண்ணாடியை பார்க்கும் போது அங்கு சாரி.நேத்து நடந்ததுக்கு.ப்ளீஸ் மன்னிச்சுடு.என்றும் அதனுடன் அழுவதை போன்ற ஒரு ஸ்மைலியும் லிப்ஸ்டிக்கால் வரையபட்டிருந்தது.
நேத்து நைட் குடிச்சிட்டு அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ.அவளா சாரி கேக்குறா.ம்ம்ம்ம்ம் தெரியலையே.மறுபடியும் மைண்ட் வாய்ஸ்.
பின் துண்டை வைத்து துடைத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து தயாராக வைக்கப்பட்டிருந்த டீ கப்பை எடுத்து ஒரு மடக்கு குடித்தபோது அது ஆறிபோய் இருந்தது.மறுபடியும் குடித்தபோது தான் தெரிந்தது அது தேங்காய் தண்ணீர் என்று.
இவ என்ன லூசா.நானே தலைவலின்னு சொல்லி செத்துட்டு இருக்கேன்.தேங்காய் தண்ணியை வச்சிருக்கா.என்று எண்ணிக்கொண்டு டீகப்பை கீழே வைக்கும் முன் சாசர்க்கு கீழ் ஒரு பேப்பர் இருந்தது.
ஹேங்ஓவெருுக்கு தேங்காய் தண்ணி குடிச்சா உடனே கேட்கும்.அதான் வச்சேன்.ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.ப்ளீஸ் நேத்து பேசினதை மனசுல வச்சுக்காத.சாரி.மறுபடியும் அழுகையுடன் கூடிய ஸ்மைலி.
நமக்கு ஹேங்ஒவெர்னு இவளுக்கு எப்படி தெரியும்.தெரிஞ்சிருக்கும்.கொஞ்சமாடா நேத்து குடிச்சிருக்க.அதுவும் இல்லாம மட்டமான சரக்கு வேற.என்ன வாடை அடிக்கும்.அதான் கண்டுபிடிச்சிட்டா.அவனுடைய மைண்ட் வாய்ஸ் சொன்னது.பின் அதை குடித்துவிட்டு அன்றைய நியூஸ் பேப்பரை படித்து முடிக்கும்போது தான் அவனுக்கு ஒரு மாற்றம் தெரிந்தது.இப்போது தலைவலி குறைந்திருந்தது.
இவளுக்கு எப்படி தெரியும்.ஹேங்ஓவெறுக்கு தேங்காய் தண்ணி குடிச்சா சரி ஆகும்னு.ம்ம்ம்ம்ம்ம் அப்ப நேத்து நைட் கண்டிப்பா எதோ நடந்துருக்கு.
ஒருவேளை அடங்கா பெண் ஆனாலும் ஒரு ஆண்மகனின் கை பட்டால் அடங்கித்தான் போகணும்னு வடிவேலு ஒரு படத்துல சொல்லிருப்பாரே.ஒருவேளை அப்படி எதாவது நடந்துருக்குமோ.இல்லையே அப்படினா உதட்டுக்கு கீழே அவளுக்கு ரத்தம் வந்துருக்கணும்,நமக்கும் முதுகுல,கன்னத்துல நகக்கீறல் இருக்கணும்.அப்படி எதுவும் இல்லையே.
டேய் அடச்சீ.வர வர தமிழ் சினிமா பாத்து ரொம்ப கெட்டு போயிருக்கடா நீ.உன்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.அதுவும் இல்லாம ராஜீய போய் எப்படிடா.த்தூ.மூடிட்டு ஆபிஸ்க்கு கிளம்புற வேலைய பாரு என்று அவனுடைய மனசாட்சி அவன் முன்னாள் வந்து சொல்ல
ஆமால்ல.சரி கிளம்புவோம் என்று குளிக்க சென்றான்.
ட்ரெஸ் செய்து சாப்பிட சென்றவன் அங்கு ராஜி இல்லாததை கண்டு சற்று வருத்தம் அடைந்தாலும் அவளுடைய மன்னிப்பு அவனுக்கு சற்று இதமாக இருந்தது.
பிளேட்டை கவிழ்த்து சாப்பாடை வைத்தவன் பிளேட்டுக்கு கீழே இருந்த பேப்பரை எடுத்து படித்தான்.
திரும்பவும் தொந்தரவு பண்ணறேன்னு நினைக்காத ப்ளீஸ் நீ இங்க இருந்து போறதுக்குள்ள மன்னிச்சிட்டேன்னு ஒருவார்த்தை சொல்லிடேன்.என்னால உன் முகத்தை கூட பாக்க முடியல.ப்ளீஸ்.
படித்துவிட்டு மடித்து வைத்தவன் லன்ச் பேக்கை எடுத்து கொண்டு கிளம்பினான்.
அவன் சென்ற உடன் கீழே வந்த ராஜி கார்த்திக் மன்னிக்கவில்லை என்று தெரிந்து அழுகையாக வந்தது.மன்னிக்கிற அளவுக்கு நான் அப்படி என்ன சொல்லிட்டேன்.இல்ல நான் அதுக்கு தகுதி இல்லாதவன்னு நினைக்கிறானோ.சரி இதுவெல்லாம் நேத்தே தெரிஞ்சதுதான அவன்கிட்ட சாரி கேட்டோம்.அவன் மன்னிக்கிற வரைக்கும் அவனை விடக்கூடாதுன்னு அவளுடைய மனசாட்சி அவளுக்கு சொல்லியது.
பின் இயந்திரத்தனமாக சாப்பிட்டவள் கார்த்திக் வரும்வரை நேரம் போக்குவதற்காக மகேஷின் அம்மாவிடம் சென்று சமையலுக்கு உதவிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள்.
ஆபிசில் வேலை அதிகமாக இருந்ததால் ராஜியை மறந்து வேளையில் கவனத்தை செலுத்தினான்.
பின் லன்ச் டைம் வர டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றான்.அங்கு அவனுடைய மேலதிகாரி இருக்க
என்னப்பா புதுமாப்பிள்ளை.கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு.
ம்ம்ம்ம் சூப்பரா போகுது சார்.மனசுக்கு புடிச்ச பொண்டாட்டி,உள்ளங்கைல வச்சி தாங்குறா.
பார்ரா.வீட்டம்மா வந்துட்டா போல. டிபன்பார்ரா.வீட்டம்மா வந்துட்டா போல. டிபன் பாக்ஸ் கொண்டுவந்துருக்க.சரி என்ன செஞ்சி கொடுத்துருக்கா இன்னைக்கு உன் பொண்டாட்டி.
எப்போதும் நான் ரெண்டுவகையான கறி இல்லாம சாப்பிடமாட்டேன்னு அவளுக்கு நல்லா தெரியும்.டிபன் பாக்ஸ் இருக்க வெயிட்டை பார்த்தா இன்னைக்கு விருந்து சாப்பாடுதான்னு நினைக்கிறன்.
சரி ஓபன் பண்ணு.நானும் கலந்துக்கிடுறேன் விருந்துல.
கண்டிப்பா சார்.உங்களுக்கு இல்லாமலா.என்று பாக்ஸை ஓபன் செய்ய முதல் பாக்சில் எம்ப்டியாக இருந்தது.
தம்பி பாக்ஸை பாத்தாலே தெரியுது உனக்கு இன்னைக்கு விருந்துதான்னு.நான் வேணும்னா என்னோட சாப்பாட்டை தரவா.
ஐயோ இல்ல வேண்டாம் சார்.அவளுக்கு எப்போதும் என்கூட விளையாடிட்டே இருக்கனும்.அதான் இப்படி பண்ணிருப்பா.இருங்க இன்னும் ரெண்டு பாக்ஸ் இருக்கு அதுல பாக்கலாம்.