என் காதல் கண்மணி 3 58

ம்ம்ம் சரியா இருக்கா என்பதுபோல தலை ஆட்ட சூப்பர் என்பது போல கைகாட்டி அசைத்தான்.

இப்போது தான் கார்த்திக் மனசை திறந்து பேசுறான்.போதை தெளிஞ்சா கண்டிப்பா நாளைக்கு பேசமாட்டான்.அதனால அவன் என்ன பேசினாலும்,என்ன செஞ்சாலும் ஒன்னும் சொல்ல கூடாது.அவனோடு தானும் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

நம்ம ஆச்சினா எனக்கு உசுரு.அவ்ளோ பிடிக்கும்.நான் என்ன செஞ்சாலும் என்ன விட்டுகொடுக்க மாட்டாங்க.என்மேல அவ்ளோ பாசம்.நான் அவங்களுக்கு பேரன் கிடையாது.மகன் மாதிரி.அவுங்க செத்தப்ப கூட நான் அழவில்லை.கல்லு மாதிரி இருந்தேன்.

ஓஹோ பார்ட்டிக்கு ஆச்சி மேல அவ்ளோ பாசமா.ம்ம்ம் சரி அப்புறம்.

நா ரெண்டாவது தடவ அழுதது எப்ப தெரியுமா.

தெரியாது சொல்லு.

அதெப்படி உனக்கு தெரியும்.ஏன்னா அது எனக்கு மட்டும் தான தெரியும்.உங்கிட்ட கேட்டா உனக்கு எப்படி தெரியும்.

டேய் லூசு.சத்தியமா என்னால முடியலடா.கொள்ளாத.

நா ரெண்டாவது தடவ அழுதது எப்ப தெரியுமா.

டாய்.நீ இன்னைக்கு செத்தடா.என்று அவன்கிட்ட ராஜி நெருங்க

ஓஓஓஓ.சொல்ல கூடாதுல்ல.உஷ் உஷ் உஷ்.என்று வாயை பொத்திக்கொண்டு டோன்ட் டச்.டோன்ட் டச்.உட்காரு உட்காரு.

நான் ரெண்டாவது தடவ அழுதது இன்னைக்குத்தான்.நீ சொன்ன வார்த்தை.அது எந்த போதையிலும் மறக்க மாட்டேங்குதே.

ராஜிக்கு திடுக்கிறது.தான் சொன்ன அந்த ஒருவார்த்தை அவனை இந்த அளவுக்கு காயப்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஐயோ சாரி கார்த்திக்.நான் ஏதோ கோவத்துல சொல்லிட்டேன் ப்ளீஸ் கார்த்திக் என்னை மன்னிச்சுடு கார்த்திக்.என்று அவன் கைகளை பிடித்துக்கொள்ள.

ஹேய் ஹேய் தொடக்கூடாது.தொட கூடாது.டோஒஒஒஒஒஒஒண்ட் டச்.எனக்கு தெரியும் ராஜி.நீ கோவத்துல தான் சொல்லிருப்பன்னு.ஆனா அதை நினைச்சாலேலேலேலேலே ன்னு சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் சாய்ந்தான்.

அவன் சுயநினைவு இல்லாத நேரத்திலும் தான் கூறிய வார்த்தை அவனுக்கு நினைவிருப்பதை எண்ணி அதன் கொடூரம் புரிந்தது.

சில நிமிடம் அவனையே பார்த்துக்கொண்டிருந்த ராஜி கார்த்திக்கின் முகத்தில் சில மாற்றங்களை கவனித்தாள்.

எப்போதும் அழகாக ட்ரிம் செய்து காணப்படும் முகம் அடர்த்தியான தாடியுடன் காணப்பட்டது.கண்களுக்கு கீழே தூங்காமல் கருவளையம் தெரிந்தது.

தம்பி நம்மள காணாம ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கான்.தாடியும் இவனுக்கு க்யூட்டா தான் இருக்கு.இவனை எப்படி பெட்ல கொண்டு போய் படுக்க வைக்க.ம்ம்ம்ம் ஆபத்துக்கு பாவம் இல்லை.தோள்ல கைத்தாங்களா கூட்டிட்டு போய் சோபாவில் படுக்க வைக்கலாம் என்று தோன்றிய உடன் அதையே செயல் படுத்தினாள்.

அவனை சோபாவில் படுக்க வைத்துவிட்டு பெட்ஷீட்டை எடுத்து போர்த்திவிட்டு அவனுடைய போனை எடுத்து அவனுக்கு பக்கத்தில் எடுத்து வைத்துவிட்டு படுக்க சென்றாள்.
மறுநாள் காலை எழுந்தபோது வழக்கம் போல் ராஜி குளித்துவிட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் பத்தி கொளுத்தி சாமிகும்பிட்டாள்.

பின் கார்த்திக்கிற்கு காலை உணவும்,மதியத்திற்கான சாப்பாடை கிச்சனில் தயார் செய்து கொண்டிருந்தாள்.

தூக்கம் கலைந்து எழுந்த கார்த்திக் கண்களை கசக்கி கொண்டு முழித்து பார்த்தான்.

அவனுக்கு நேத்து நைட் நடந்தது எதுவுமே நினைவில் இல்லை.எப்படி ஹால்ல சோபாவில் வந்து படுத்தோம்னு யோசித்து பார்த்தும் சுத்தமாக நினைவிற்கு வரவில்லை.