என் காதல் கண்மணி 3 58

வா சாப்பிடலாம்.என்றாள் ராஜி.

ம்ம்ஹூம்.எனக்கு வேண்டாம்.நீ போட்டு சாப்பிட்டுக்கோ.

அப்படியா சரி எனக்கும் வேண்டாம்.போலாம்.

ம்ம்ம்ஸ் சரி.

இதை ராஜி எதிர் பார்க்கவில்லை தான்.அவளும் இன்னும் சாப்பிடவில்லை.காலையில் அம்மா வீட்டில் சாப்பிட்டது.இப்போது வரை துளி தண்ணீர் நாக்கில் படவில்லை.இப்போது கார்த்திக்கை பார்த்த பின்பு தான் அவளுக்கு பசியின் ஞாபகம் வந்தது.

பிரியாணி,சிக்கன் என அவன் மதியம் டேபிளில் வைக்கும்போது இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டணும்னு முடிவுசெய்திருந்தாள்.ஆனால் வீம்பாக பேசி வடை போச்செ கதையில் இருந்தாள்.

இருவரும் எதிரெதிர் டேபிளில் அமர்ந்திருக்க ஒவ்வொரு நிமிடமும் மௌனமாக சென்றது.

ஆனால் ராஜியோ மனதுக்குள் கார்த்திக்கை வசை பாடிக்கொண்டிருந்தால்.சீக்கிரமா சொல்லுடா.எனக்காக யாரும் பட்டினியா இருக்க வேண்டாம்.நான் சாப்பிடுறேன்னு சொல்லுனு மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்தால்.

10 நிமிடத்திற்கு பிறகுர்
ராஜி இனியும்ல் லேட் பண்ணின உசுருக்கு உத்திரவாதம்இ இல்லை.நல்லா யோசி.சோரா,சொரணையா.கடைசியில் மைன்ட்வாய்ஸ் சொன்னது.சோறுதான் முக்கியம்.சனியன் எப்படியும் போகுது நீ சாப்பிட போ என்று அவள் எழும்ப அதே நேரம்

கார்த்திக் எதுவும் பேசவில்லை.திடீரென்று எனக்கு பசிக்குது நான் சாப்பிடப்போறேன் என்றான்.

அப்பாடா இப்பவாவது இதுக்கு பசிச்சுதே.சரி என்று பிளேட்டை வைத்து சாப்பாடு வைத்தாள்.

கார்த்திக்கு சாப்பாடு வைத்துவிட்டு தனக்கும் போட்டுகொண்டு இரண்டு லெக் பீஸ்களை ஆளுக்கு ஒன்றாக சாப்பிட தொடங்கினர்.

கார்த்திக்கும் இருந்த போதையில் வேகமாக சாப்பிட,ஏதோ யோசனை வந்தவனாக எதிரே பார்க்க அங்கு ராஜி வேகவேகமாக சாப்பாடை முழுங்கிக்கொண்டிருந்தால்.கார்த்திக் சாப்பிடாமல் அதையே பார்த்துக்கொண்டிருக்க ராஜிக்கு விக்கல் வந்தது.

உடனே தண்ணீரை எடுத்து அவளிடம் நீட்ட அதை வேகமாக வாங்கி மடக்மடக்கென குடித்தாள்.அப்போதும் அவளுக்கு தொடர்ந்து விக்கல் நிற்காமல் இருக்க உடனே கார்த்திக் தள்ளாடியபடி எழுந்து அவள் தலையில் தட்ட போக ராஜி அவனை பார்த்து சற்று விலகினால்.

உடனே மறுபடியும் அமர்ந்த கார்த்திக் ஓஓஓஓஓ.ஸ்ஸ்ஸ்ஸ்.தொட கூடாது.தொடகூடாது.தொடக்கூடாதுல.சாரி.சாப்பிடு.நீ சாப்பிடு.

மறுபடியும் வேகவேகமாக அள்ளி சாப்பிடகே தொடங்கினாள்.சாப்பாடும் ருசியாக இருக்க காலையில் கார்த்திக் தன்னைத்தானே மெச்சிக்கொள்ள சொன்ன வார்த்தைகள் நியாபகத்திற்கு வந்தது.

அவளையும் அறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் வர சாப்பாடை முழுங்கி கொண்டே கண்ணீரை துடைத்தாள்.

எதேச்சையாக திரும்பியவள் எதிரே கார்த்திக் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்டாள்.
ப்ச்ப்ச் ஒன்னும் இல்ல எனக்கும் சாப்பாடும் வேணாம்னு வீம்பா சொல்லிட்டு இப்ப ரெண்டாவதுபி பிளேட் பிரியாணியை வச்சு வெளுத்துகட்டுறியே அதான் பார்த்தான்.

ஹலோ நான் சாப்பிடுறத பார்த்து யாரும் கண்ணு வைக்க வேண்டாம்.உனக்கு பசிக்கல.சாப்பிட வேண்டியது தான.

இல்ல எனக்கு போதை ஓவெரா ஆகிடுச்சா.பசி இல்ல நீ சாப்பிடு.

பின் இருவரும் கைகழுவி கொண்டு டேபிளில் இருந்தனர்.அப்போது கார்த்திக் ஆரம்பித்தான்.

நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா.

இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம பேசுற.

இல்ல சம்பந்தம் இருக்கு.சொல்லு நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா

பிறந்த உடனே அழுத்திருப்ப.

ஐயோ.செம ஜோக்.பட் சிரிப்புதான் தான் வரல.சொல்லு நான் முதல் முதல்ல எப்ப அழுதேன் தெரியுமா.

டேய் லூசு நீ முதல் முதல்ல எப்ப அழுதன்னு எனக்கு எப்படி தெரியும்.

இல்ல.அட்லீஸ்ட் எப்ப அழுதன்னு ஆச்சும் கேக்கலாம்ல.

கேக்கலைன்னா சொல்லாம விடப்போறியா.சொல்லி தொலை

நான் முதல் முதல்ல எப்ப என்று ஹ பிட்சில் கார்த்திக் கேக்கும் முன் கடுப்பான ராஜி டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து அவன் கழுத்தில் வைத்து ஏ எருமை,சனியன்,மெண்டல்,லூசு.மாடு இனிமேல் இந்த டைலாக்க சொன்ன மவனே கழுத்தை அறுத்து கண்ணு ரெண்டையும் தோண்டி எடுத்துடுவேன்.இவரு பெரிய ராஜா ராணி சந்தானம்.குடிச்சிட்டு வந்து பிளாஷ்பாக் சொல்லறாரு.மூடிட்டு போய் தூங்கு.

உஸுஷுஷ்.ஓகே ஓகே.டோன்ட் டச்.தொட கூடாது.தொட கூடாது.நான் முதல் முதல்ல…

ஒய்.

ஓஹ் சாரி.என்று வாயை பொத்திவிட்டு முதல் முதல்ல நீ ரமேஷ லவ் பன்றேன்னு சொன்னப்ப டெய்லி நைட் தூக்கம் இல்லாம எவ்ளோ நாள் அழுத்திருக்கேன் தெரியுமா.அதுவும் இல்லாம நாம மெஸேஜ் பண்ணிக்கும் போதெல்லாம் நீ கேவலமா இதோ இப்ப வச்சிருக்கியே இதே மாதிரிதான் வச்சிட்டு என் லவர் மெசேஜ் பன்றான்.நா அப்புறமா பேசுறேன்னு சொல்லுவ பாத்தியா அப்ப அழுதேன்.ம்ம்ம் என்று நெற்றியில் தன் புருவத்தில் கார்த்திக் கை வைத்து காட்ட

என்ன என்பதுபோல தன் நெற்றியை தடவ அங்கு அவள் வைத்திருந்த நெற்றி பொட்டு விலகி இருந்தது.அதை எடுத்து கரெக்டாக வைத்தாள் ராஜி.