என் காதல் கண்மணி 3 58

10 நிமிடத்தில் அவன் வந்துவிட அவனை உட்கார சொன்னான்.

உட்கார்ந்த மகேஷ் அண்ணா எதாவது பிரச்சனையா.வீட்ல கண்ணாடி உடைஞ்சிருக்கு,உன் கையில வேற காயமா இருக்கு,அண்ணி வேற ட்ரெஸ்க்கூட மாத்தாம டைனிங் டேபிள்ள உக்கார்ந்துருக்காங்க.என்ன ஆச்சு.

டேய் ஒரு மண்ணும் ஆகலை.ஒரு சின்ன சண்டை அவ்ளோதான்.பெரிய இவரு மாதிரி கேள்வி கேக்காம மட்டமான சரக்கா ஒரு புல் வாங்கிட்டுவா.

அண்ணா.நீதான் விட்டுட்டியே.இப்ப போய்.

டேய் மூடிட்டு போய் வாங்கிட்டு வா.தேவை இல்லாம எனக்கு அட்வைஸ் பண்ணாத.போ.

சரிண்ணே என்று மகேஷ் சென்றுவிட்டான்.மஹேஷிற்கு தெரியும் கார்த்திக்கை பற்றி.அவன் சில நேரங்களில் டென்ஷனாக இருக்கும் நேரங்களில் பயங்கர கோவமாக பேசுவான் ஆனால் அந்த கோவம் மறைந்த அடுத்த சில இவனா அப்படி கோவப்பட்டான் என்று யோசிக்கும் அளவுக்கு ஜாலியாக மாறிவிடுவான்.

அவனை பொறுத்தவரையில் கார்த்திக் ஒரு புரியாத புதிர்.அவன் என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று மகேஷ் நம்புவான்.அதனாலயே கார்த்திக் மேல் பாசம் உண்டு.

வீட்டில் ராஜி கார்த்திக் சென்ற உடன் டைனிங் டேபிளில் இருந்து அழ ஆரம்பித்தாள்.அவன் கொடுத்த முத்தம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம் ஆனால் தான் கூறிய வார்த்தைகள் எவ்வளவு கேவலமானது என்று அவளுக்கு தோன்றியது.எனக்கே அதை தாங்க முடியலையே அவணுக்கு எப்படி இருந்திருக்கும்.

முதன் முதலாக கார்த்திக் மேல் அவளுக்கு பரிவு வந்தது.நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஏதோ கோவத்தில் சொன்னது கார்த்திக்.என்ன மன்னிச்சுடு என்று அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது.மனசு இலகுவாகும் வரை அழுதாள்.

இரண்டு கட்டிங் உள்ளே சென்றவுடன் போதை அப்போது ஏற தொடங்க அடுத்த கட்டிங்கை எடுத்து குடித்தான்.

எதிரே இருந்த மஹேஷிற்கு கார்த்திக்கை எப்படி வீட்டிற்கு கொண்டு போய் சேர்ப்பது என்ற கவலையாக இருந்தது. இப்போது கார்த்திக் பேச தொடங்கினான்.சாரிடா மகேஷ்.ஏதோ கோவம்.அதான் உன்னை அப்படி திட்டிட்டேன்.நீ எதுவும் மனசுல வச்சிக்காதடா தம்பி.

இல்லனா அப்படிலா ஒன்னும் இல்லனா.வீட்டுக்கு போகலாம்ன்னு.டைம் ஆகிடுச்சு.மைனி வேற தனியா இருக்கும்.

டேய் இருடா.அவள்ளா அழகா இருபபாடா.அப்ப எனக்கு கம்பெனி கொடுக்க மாட்டியா.என்று போதையில் குளறலாக கூறினான்.

ம்ம்ம்ம் இருக்கேன்.இருக்கேண்ணே.

ம்ம்ம்ம்.அப்ப ஊத்து.

அண்ணா போதும்ன்னா.

டேய் நீதானா எனக்கு கம்பெனி கொடுக்குறேன்னு சொன்ன.இப்ப மாத்தி பேசுறியா.குடிச்சிருக்கியா குடிச்சிருக்கியாடா.

இல்லனா.இல்லனா.இந்தா ஊத்துறேன்.ஊத்துறேன்.

ம்ம்ம் அது.இன்னொரு க்ளாஸ்ல ஊத்து.

ஐயோ வேண்டாம்ன்னு எனக்கு பழக்கம் இல்லை.வேணாம்.

டாய் என்ன அண்ணன் முன்னாடியே குடிக்க ஆசைப்படுறியா.பிச்சிபுடுவேன் ராஸ்கல்.இது எனக்கு நீ கம்பெனி கொடுக்கிறியா.கம்பெனி கொடுக்குறதுன்னா நீயும் அடிக்கணும்.ஆனால் நீதான் குடிக்கமாட்டியே.அதனால உன் க்ளாஸ்ல இருக்குறதும் எனக்குத்தான்.ஊத்து.

போதும்ன்னா.வான்னா.போகலாம்.பயமா இருக்குன்னா.

டேய் அண்ணன் இருக்கேன்டாஇருக்கேண்டய.பயப்படாத.இதோ லாஸ்ட் ரவுண்டு.முடிஞ்சுது என்று கடைசி கிளாசை வாயில் கவுத்திவிட்டு போலாமா என்று குளறலாக சொல்லிவிட்டு எழுந்த கார்த்திக்குக்கு முற்றிலும் சுய நினைவு இல்லை.கால்கள் இரண்டும் தடுமாற எழுந்தவனை மகேஷ் தோளில் கைபோட்டு சாய்த்துக்கொண்டு கதவை லாக் செய்து கொண்டான்.

ஒருவழியாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டு வீட்டு காலிங் பெல்லை அடிக்க போக டேய் அதெல்லாம் வேணாம்.ஐ ம் ஸ்டேடி.நான் போய்க்கிடுறேன்.நீ போ
இல்லன்னா வீட்டுல மைனி கிட்ட சொல்லிட்டு போய்டுறேன்னா.

ப்ச்.அதெல்லாம் நான் சொல்லிக்கிடுறேன்.நீ போய் சாப்பிட்டு தூங்குதூங்குற.போ.

இப்போதைக்கு வீட்ல விட்டாச்சு.வீட்டுக்கு போய் மைனிக்கு போன் போட்டு சொல்லிக்கலாம் என்ற முடிவுடன் சாரின்னா.நா போறேன்.பாத்து போன்னே.சொல்லிவிட்டு கிளம்பினான் மகேஷ்.

வீட்டிற்குள் சென்ற கார்த்திக் தள்ளாடியபடி சென்று டைனிங் டேபிளை அடைந்தான்.

அங்கு கைகளை மடக்கிவைத்து அதன் மேல் முகத்தை வைத்து தலை கவிழ்ந்திருந்தாள் ராஜி.

இவன் தள்ளிடியபடி டேபிளில் இடித்துக்கொண்டதில் எழுந்த ராஜிக்கு அவன் குடித்திருக்கிறான் என்று அவன் முகமும்,சரக்கு வாடையும் சொன்னது.

அவன் குடித்ததற்கான காரணம் அவளுக்கு தெரிந்திருந்தாலும் எதுவும் பேசாமல் சாப்பாடை எடுத்து வைத்தாள்.

அப்போது கார்த்திக் கை கழுவ பேசின் அருகே செல்ல அப்போது கார்த்திக்கின் போன் ஒலித்தது.

போதையில் இருந்த கார்த்திக் பேசினில் இருந்த சோப்பை எடுத்து காதில் வைத்து கொண்டு ஹலோ நீங்கள் பேச நினைக்கும் சப்ஸ்கிறைபர் கை கழுவிக்கொண்டிருக்கிறார்.சிறிது நேரத்திற்கு பிறகு தொடர்பு கொள்ளவும்னு சொல்லிட்டு சோப்பில் டச் செய்து பேசினில் வைத்துவிட்டான்.

இதை பார்த்த ராஜிக்கு சிரிப்பாக வந்தது.எருமை சோப்புக்கும்,போனுக்கும் வித்யாசம் தெரியாத அளவுக்கு குடிச்சிட்டு வந்துருக்கு பாரு என்று டேபிளில் இருந்த போனை எடுத்தாள்.

மகேஷ் கால் செய்திருக்க அட்டென்ட் செய்து சொல்லு மகேஷ் என்றாள்.

அண்ணி உங்க நம்பர் என்ன ஆச்சு.கால் பண்ணேன்.ரீச் ஆகவே இல்ல.

ஒன்னும் இல்லை.ஊருக்கு போயிருக்கும்போது கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு.

அதான் அண்ணன் நம்பருக்கு கால் பண்ணேன்.அண்ணி அண்ணன் ரொம்ப குடிச்சிட்டான்.என்ன பிரச்சனைன்னு தெரியல ரொம்ப கோவமா இருந்தான்.இப்போ குடிச்சிட்டு ரொம்ப போதைஎ ஆகிட்டான்.என்ன நடக்குதுன்னு தெரியாத அளவுக்கு குடிச்சிருக்கான்.கொஞ்சம் பாத்துக்கோங்க அண்ணி.வச்சிடுறேன்.

ம்ம்ம் சரிடா.நான் பாத்துக்கிடுறேன்.என்று சொல்லிவிட்டு போனை டிவி அருகில் வைத்துவிட்டு கிட்சேன் சென்றால் ராஜி.

அங்கு கார்த்திக் தண்ணீரை குடித்து கொண்டிருந்தான்.