அப்படியே அந்த பாடல் தந்த சுகத்திலையே தூங்கியும் போனான்.
வீட்டில் நன்றாகிய தூங்கிய ராஜி தங்கை வந்து எழுப்பிய போது தான் எழுந்தாள்.இரவு முழுவதும் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசிவிட்டு சாப்பிட செல்லும்போது தான் கார்த்திக் சாப்பிட்டாணா இல்லையா என்று குழம்பினாள்.
உடனே சாப்பிட்டுவிட்டு மகேஷின் அம்மாவிற்கு போன் செய்து தான் அம்மா வீட்டிற்கு வந்ததையும் இன்னும் சில நாட்களுக்கு கார்த்திக்குக்கும் சேர்த்து சாப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டாள்.
இதை பார்த்து கொண்டிருந்த சக்திக்கு அக்காவின் இந்த மாற்றம் சிறிது சந்தோசத்தை கொடுத்தது.
என்ன அக்கா.வர வர பாசம் ரொம்ப பொங்குது.போகுற போக்க பார்த்தால் இன்னும் 10 மாசத்துல என்ன சித்தி ஆகிடுவ போல.
அவள் கூறிய வார்த்தையின் அர்த்தம் புரிய சில நேரம் ஆனதும் யேய் உன்ன என்று அடிக்க கை ஒங்க சக்தி வயிறை பிடித்துக்கொண்டு சிரித்து கொண்டிருந்தாள்.
பின் சிறிது நேரம் கழித்து சக்தி தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு தூங்க சென்றாள்.அம்மாவும் மகளும் இருந்து டிவி பார்த்து கொண்டிருக்க தாய் தன் மகளிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.
உன்னை கேக்காம கார்த்திக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைச்சதுல என்மேல வருத்தம் ஒன்னும் இல்லையேமா.நீங்க ரெண்டு பேரும் சந்தோசமாகதான இருக்கீங்க.
தாயின் இந்த வார்த்தை வயிற்றில் புளியை கரைக்க ஒருவேளை சக்தி அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லிட்டாலோ என்று எண்ணிக்கொண்டு சரி எதுவா இருந்தாலும் நாமளா வார்த்தையை விட்டுட கூடாது என்று முடிந்த வரை முகத்தை இயல்பாக்கி கொண்டு
அப்படிலாம் ஒன்னும் இல்லம்மா.கார்த்தி என்ன நல்ல பார்த்துகிடுரான்மா.நாங்க நல்லாத்தான் இருக்கோம்.
இல்லடி.உங்க அத்தையும் மாமாவும் நீங்க சின்னஞ்சிறுசுக சந்தோசமா இருப்பிங்கனு தான் அவுங்க கோவில் குளம்னு போயிருக்காங்க.நீங்க என்னடான்னு இப்படி இருக்கீங்கலே அதான் கேட்டேன்.
அப்பாடா அம்மாக்கு எந்த விஷயமும் தெரியாது என்று அம்மாவின் பேச்சில் இருந்து புரிந்துகொண்ட ராஜி வராத வெட்கத்தை வரவழைத்துக்கொண்டு அதெல்லாம் நைட் சந்தோசமாதான்ம இருக்கோம்.
மகளின் முகத்தை பார்த்து சந்தோஷமான தாய் சரிம்மா ரொம்ப நேரமா டிவி பார்க்காம சீக்கிரம் படுத்து தூங்குமா.
அப்பறம் உனக்கு கல்யாணம் முடிஞ்சிட்டு.இனிமேல் கார்த்தியை நீங்க.போங்கன்னு மரியாதையா பேசு.இல்லனா பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க.
ம்ம்ம்ம் சரிம்மா.நீண்டதாக ஒரு பெரு மூச்சை விட்ட ராஜி இங்கு ரொம்ப நாள் இருந்தோம்னா கண்டிப்பாஎ அம்மா கண்டுபிடிச்சிடுவாங்க.அதனாலஸ் சீக்கிரமா இங்க இருந்து கிளம்பிடனும் என்று நினைத்து கொண்டாள்.
இப்படியாக சில நாட்கள் செல்ல ராஜி பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.இடையில டைம் கிடைக்கும் போதெல்லாம்ர்
இப்படியாக சில நாட்கள் செல்ல ராஜி பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.இடையில டைம் கிடைக்கும் போதெல்லாம்ர்
ராஜிக்கும்ஸ்
சக்திக்கும் போன் செய்து பேசிக்கொண்டான்.
கார்த்திக்கிற்கு ராஜி இல்லாத குறையை டைரியின் மூலம் தீர்த்து கொண்டான்.
அன்று ராஜி தனது ஸ்கூல் பிரென்ட் கஸ்தூரியை பார்க்க செல்வதாக சொன்னாள்.ராஜி வந்திருப்பதை அறிந்த கஸ்தூரி அவளை தனது வீட்டிற்கு அழைத்திருந்தாள்.சரி போயிட்டு வாம்மா என்று அம்மா சொல்ல இருவரும் கஸ்தூரியின் ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றார்கள்.
அங்கு சென்ற உடன் இருவரும் தங்களது பள்ளி காலத்து கதைகளை பேசிவிட்டு இருவரின் குடும்பவ விஷயங்களில் வந்து முடிந்தது.
ராஜி தனது கதையை சொல்லி அவளிடம் அழ கஸ்தூரிக்குத்தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ராஜியும் ரமேஷும் லவ் பண்ணும்போது கூட இருந்தவள் ஆச்சே.ஆனால் கார்த்திக் பற்றியும் அவளுக்கு நன்றாக தெரியும்.ஒருமுறை அவனுடன் போனில் பேசியிருக்கிறாள்.
ராஜியை சமாதான படுத்திய கஸ்தூரி அழாத ராஜிம்மா.ப்ளீஸ்.எல்லாம் நல்லதுக்குதான்.கார்த்திக்கை பார்த்தால் நல்லவராதான் தெரியுது.நீ கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணு.அவர்கிட்ட கொஞ்சம் மனசு விட்டு நீ பேசினா எல்லாம் சரி ஆகிடும்.சரியா என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டு டீ போட சென்றாள்.
பின் இருவரும் கஸ்தூரியின் குழந்தையிடம் கொஞ்சிவிட்டு ராஜி தனது வீட்டிற்கு வந்தாள்.ஏனோ இப்போது ராஜியின் மனம் தெளிவான நீரோடை போல இருந்தது.
முதல் வேலையாக சக்தியிடம் சென்று நான் கார்த்திக்கை பத்தி புரிஞ்சிக்கிட்டேன்.கண்டிப்பா நான் கார்த்திக் கிட்ட பேசி சமாதானம் ஆகிடுவேன்.நான் வர சண்டே ஊருக்கு போகலாம்னு இருக்கேன்.
அய்யா அக்கா ரொம்ப சந்தோஷம் அக்கா.என்று அவளைஅவளை கட்டிப்பிடித்தாள் சக்தி.
ஏய் விடுடி.கூச்சமா இருக்கு
ஆமா.சன் டே போய் புருஷன கட்டிப்பிடிப்பாங்க நாங்க கட்டிபிடிச்சா கூச்சமா இருக்குமாம்.
வர வர உனக்கு வாய் ரொம்ப நீழுதிடி.உனக்கு இருக்கு ஒருநாள்.