என் காதல் கண்மணி 3 58

இப்ப எதுக்கு நீ அவனுக்கு சப்போர்ட் பண்ற.

இப்பவும் நீ லூசு மாதிரி பேசுற.அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா. . . . . . . . . . . . . .
என்ன நடந்துச்சுன்னு சொன்னா உனக்கு புரியவா போகுது விடு.ஆரம்பத்துல எனக்கும் கோவமாத்தான் இருந்துச்சு.அவன் லவ் பண்ணறேன்னு சொன்னப்ப எல்லாம் பிரியவைதான் லவ் பண்ணிட்டு இருக்கான்னு நானும் அவளும் நினைச்சோம்.அப்பகூட அவன்மேல எனக்கு கோவம் இல்ல.உன்ன லவ் பண்ணறேன்னு சொன்னப்ப தான் எனக்கு பயங்கர கோவம் வந்துச்சு.அவன்கூட பேசாம கூட இருந்தேன்.ஆனா இப்ப உன்ன ரொம்ப லவ் பண்ரான்னு எனக்கு தோணுது.அவன்மேல் எனக்கு எந்த கோவமும் இல்லை.நீ புரிஞ்சிக்கோ அக்கா.

நான் யாரையும் புரிஞ்சிக்க வேண்டாம் சக்தி.நீ சொல்ற மாதிரி அவன் நல்லவனாவே இருக்கட்டும்.ஆனால் ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம.அவ வேண்டாம்னு சொல்லியும் அவ கழுத்துல தாலி கட்டினவன என்ன செய்ய சொல்ற.

இந்த நேரடி கேள்வியில் சற்று நிலை தடுமாறித்தான் போனாள் சக்தி.ஆனால் அவளுடைய கோவத்திற்கு காரணம் வெளிப்பட்டு விட்டது.

அது மட்டும் தான் அவன் செஞ்ச பெரிய தப்பு.அதுக்கு பதில் அவனுக்கு தான் தெரியும்.அவனுக்கு மட்டும் தான் தெரியும்.அதுக்கு நீ அவன்கிட்ட மனசு விட்டு பேசினாத்தான் பதில் கிடைக்கும்.இல்லனா இந்த விஷயத்தை நான் அம்மாகிட்ட சொல்றத தவிர எனக்கு வேறு வழி தெரியல.

ஹேய் லூசு மாதிரி பண்ணாத.அம்மாக்கும்,வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது.நீ யாருகிட்டயும் இதை பத்தி சொல்லாத.எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்.

நல்ல யோசி.நீ இங்க இருந்து போறதுக்குள்ள ஒரு நல்ல பதிலா சொல்லு.இல்ல அம்மாகிட்டதான் சொல்லுவேன்

சரி.நீ இப்ப கிளம்பு.எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு.நான் கொஞ்சம் தூங்கணும்.

சரி அக்கா.நீ ரெஸ்ட் எடு அப்புறமா பேசலாம்.

ஹே ஹே ஒரு நிமிஷம் ரொம்ப பெரிய மனுஷி ஆகிட்ட போல.எனக்கே அட்வைஸ்லாம் பண்ற சக்தி.

ஹலோ அப்படிலாம் ஒன்னும் இல்ல.என் அத்தானுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப்.அவ்ளோதான்

அப்ப நீ அக்காவுக்காக பேசல.

அப்படில இல்ல.ரெண்டு பேருக்காகவும் தான்.தூங்குக்கா.அப்பறம் பேசலாம்.என்று ராஜியின் நெற்றியில் முத்தமிட்டு சென்றாள் சக்தி.

சக்தி சென்றவுடன் ராஜிக்கு திரும்ப திரும்ப அந்த வார்த்தை ஓளித்தது.அத்தானுக்காக அத்தானுக்காக.

பெட்டில் படுத்த ராஜிக்கு சிந்தனை மொத்தமும் கார்த்திக் பற்றியே இருந்தது.

இன்னைக்கு சக்தி பேசினதை வச்சி பார்க்கும் போது எல்லா விஷயமும் அவளுக்கு தெரிஞ்சிருக்கு.கார்த்திக் தான் எல்லாத்தையும் அவகிட்ட சொல்லி என் மனச மாத்த ட்ரை பன்றானோ என்று தப்பு கணக்கு போட்டாள்.

பொதுவாக ஒரு மனுஷனுக்கு ரெண்டு மனசு இருக்கும்.ஒன்னு எப்போதும் நல்லதையே யோசிக்கிற,பாஸிட்டிவா பேசுற மனசு.அது எப்போதும் இதயத்துக்கு பக்கத்துல இடது பக்கம் இருக்கும்.

இன்னொன்னு இதயத்துக்கு எதிர் பக்கத்துல நுரையீரல் பக்கத்துல இருக்கும்.இதயத்தை விட்டு தள்ளி இருக்குறதால என்னவோ அது எப்போதும் தப்பாவே நினைக்கும்,நெகடிவ்ஆன விஷயங்களையே சொல்லும்.

ஆனா நம்ம புத்தி அந்த நெகட்டிவ்ஆன மனசையே நம்பும்.அது சொல்ற படி தான் நடக்கும்.ஏன்னா அது சொல்றது ரொம்ப ஈஸியா இருக்கும்.சுலபமாவும் இருக்கும்.

வலது பக்கம் இருக்க மனசு சொல்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.ஆனால் அது கண்டிப்பா நல்லதுல போய்த்தான் முடியும்.

உதாரணத்துக்கு நீங்க ட்ரிங்க்ஸ் பண்றிங்கன்னு வைங்க.அது ரொம்ப ஹெல்த்தை பாதிக்கும்னு நமக்கு தெரியும்.உங்க நல்ல மனசு வேண்டாம்.இனி குடிக்க கூடாது.இதை குடிக்கிறதுக்கு பதிலா இந்த காசை வேற எதுக்காவதுஸ் செலவழிக்கலாம்னு சொல்லும்.

ஆனா அந்த கெட்ட மனசு அதுக்கான அல்டெர்னட்டா யோசிக்கும்.இந்த ஒரு தடவை மட்டும்,இந்த வருஷத்தோட நிறுத்திக்கலாம்.இப்படியான சாதகமான பதிலை சொல்லும்.

ராஜியும் இப்படிதான் இரு மனதிடமும் போராடி கொண்டிருந்தாள்.இறுதியில் இது கார்த்திக்கின் வேலை தான் என்று உறுதியாக நம்பினாள்.

அன்று நல்லவநாட்டும் பேசிட்டு இன்னைக்கு என் தங்கச்சியவே தூது அனுப்பிரியா.உன்னை கடைசி வரைக்கும் நான் நம்ப மாட்டேன் என்று மனதிடம் சொன்னாள்.

இதற்கு ஒரேஒரேய வழி இப்போதைக்கு இதை சமாளிக்க கார்த்திக்கை புரிஞ்சிக்கிட்டதாகவும் இனிமேல் ரெண்டு பேருக்கு நடுவுல எந்த பிரச்சனையும் வராதுன்னும் சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்.மீதியை அங்கு சென்று பார்த்துக்கலாம் என்று முடிவெடுத்தாள்.

ஆனால் இதை உடனே சொன்னால் அவளுக்கு சந்தேகம் வரும்.அதனால ரெண்டு நாள் ஆறப்போட்டு அவளிடம் இதை சொல்லலாம்.அதுவரைக்கும் அவளாக கேட்கும் வரை இதை பற்றி அவளிடம் பேசக்கூடாது என்று எண்ணிகொண்டே தூங்கியும் போனாள்.

இங்கு ராஜியின் நினைவுகளில் தூங்கி போன கார்த்திக் முழிப்பு வந்து எழுந்த போது இரவாகி போனது.மீண்டும் ராஜியின் நினைவுகள் வந்து பாடாய்படுத்த நீண்ட நாட்களுக்கு பின் டைரி எழுத வேண்டும் போல் தோன்றியது.

உடனே மறைத்து வைத்திருந்த டைரியை எடுத்து தனது காதலை டைரியில் செதுக்க தொடங்கினான்.

எழுதி முடித்த பின் பசி வயிற்றை கிள்ள சாப்பிடலாம் என்று தம்பிக்கு போன் செய்து சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிட்டான்.

மகேஷ்ஸ் சென்ற உடன் மீண்டும் தனிமை வாட்ட செல்லில் ஹெட் போனை கனெக்ட் செய்து ஹலோ எப்.ம் ஐ டியூன் செய்தான்.

டைரி ப்ரோக்ராம் அப்போது தான் ஆரம்பித்திருந்தது.ஆர்ஜே மணிகண்டனின் மயக்கும் குரலும் அதில் அவர் சொல்லும் முகம் தெரியா மனிதரின் கடிதமும் மனதை இலகுவாக்க ஒரு இளையராஜா பாடல் வந்தது.

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ..
அன்பே என் அன்பே..
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே…
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே….