என் காதல் கண்மணி 3 58

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு பிரெண்ட்ஸை பார்க்க சென்றான் கார்த்திக்.அப்படியாவது மனதுக்கு கொஞ்சம் மாற்றமாக இருக்கும் என்று.ஆனால் அங்கும் அவன் மனம் ராஜியையே சுற்றி வந்தது.

இதற்கு ஒரே வழி சரக்குதான் என்று முடிவெடுத்து கடைக்கு சென்று பீர் வாங்கிக்கொண்டான்.

பின் வீட்டிற்கு சென்று ஓபன் செய்து வாயில் வைக்கும் முன் ஆரம்பிச்சிட்டியா.ஒருநாள் வீட்டில் இல்லனா குடிக்க ஆரம்பிச்சிடுவியா.குடிகாராகுடிகாரா என்று ராஜி சொன்னாள்.

டேபிளுக்கு அருகில் கைகளை கட்டிக்கொண்டு கோவமாக அவனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தால் ராஜி.

இல்லை இல்லை.உன்னை விட்டுட்டு வந்ததுல இருந்து உன் நியாபகமாவே இருக்குது.எங்க பாத்தாலும் நீதான் தெரியுற.அதான் லைட்டா பீர் சாப்பிடலாம்னு.நீ வந்துட்டல்ல இப்பவே கீழ ஊத்திடுறேன்.

எனக்காக ஒன்னும் ஊத்த வேணாம்.குடிக்கணும்னா குடிச்சு தொலை.

இப்ப பாரு ஒன் sec.வேகமாக சென்று அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கை கழுவிக்கொண்டு எல்லாத்தையும் தூக்கி எரிஞ்சிட்டேன் போதுமா.ஹாப்பியா.என்று சொல்லிக்கொண்டே வர அங்கு யாரும் இல்லை.

அஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்று தலையை பிடித்துக்கொண்டு சோபாபில் விழுந்தான் கார்த்திக்.

ராஜி அழுது முடிக்கும் வரை அவள் தலையை கோதி விட்டு அவளை சமாதானம் செய்தாள் ஷக்தி.

பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு தலையை நிமிர்த்திய ராஜியை பார்த்து அக்கா என்னக்கா ஆச்சு.ஏன் இப்படி அழகுற.

எனக்கு வாழவே பிடிக்கலடி.

அக்கா என்னக்கா சொல்ற.கார்த்திக் உன்ன சந்தோசமா தான வச்சிருக்கான்.

எனக்கு அவன்கூட இருக்கவே பிடிக்கல.ஏன் அவனையே பிடிக்கல

அக்கா என்ன சொல்ற நீ.

ஆமாம்.அவனை நான் எப்போதுமே ஹாஸ்பேன்டா நினைச்சு பாத்ததே இல்லடி.அவன்கூட இருக்கும் போதெல்லாம் அவன் எனக்கு செஞ்ச துரோகம் தான் நியாபகத்துக்கு வருது.

அக்கா என்ன சொல்ற.அவன் உனக்கு துரோகம் செஞ்சானா.

நான் ரமேஷை லவ் பண்ணும்போது எங்க ரெண்டு பேரையும் பிரிச்சது அவன்தான்.அக்கா கிட்ட எங்க ரெண்டு பேரையும் போட்டு கொடுத்தான்.அப்புறம் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு நான் அவன்கிட்ட சொல்லி அவன்கிட்ட கேட்டேன்.

அந்த நேரம் உனக்கு விருப்பம் இல்லனா இந்த கல்யாணம் நடக்காது.இதை நிறுத்த வேண்டியது என் பொறுப்புன்னு சொன்னான்.ஆனால் அப்பவும் என்ன நம்ப வச்சி ஏமாத்திட்டான்

நீ கல்யாணம் பிடிக்கலைன்னா அம்மாகிட்ட சொல்லிருக்கலாமே.அத விட்டுட்டு ஏன் கார்த்திக் கிட்ட சொன்ன

எப்படிடி சொல்ல முடியும்.நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நா இன்னும் ரமேஷதான் மனசுல நினைச்சுட்டு இருக்கேன்னு அம்மா என்ன நினைக்க மாட்டாங்க.அதான் கார்த்திக் கிட்ட கேட்டேன்.

எல்லாம் இருக்கட்டும் இதெல்லாம் கார்த்திக் தான் பண்ணினானு நீ எதவச்சி சொல்ற.

அவன்தானே நான் ரமேஷ லவ் பன்றேன்னு தெரிஞ்சும் என்ன லவ் பண்ணான்.நான் அவனுக்கு கிடைக்கணும்.அவன் ஆசை பட்டது நடக்கணும்.அதுக்கு தான இதெல்லாம் செஞ்சான்.

அப்படி நீ நினைச்சா அது உன்னோட முட்டாள்தனம்.அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியாம நீயா ஒன்ன கற்பனை பண்ணிக்கிட்டு அதுதான் நிஜம்னும் நினைச்சுட்டு இப்ப உன் வாழ்க்கையே நாசமாகிட்டு இருக்க.

என்னடி சொல்ற.

ஆமா.என்னைக்காவது நீ அவனை புரிஞ்சிக்கிடனும்.அவனை பத்தி தெரிஞ்சுக்கிடணும்னு ட்ரை பண்ணிருக்கியா.