அவர்கள் இருவரும் நடிப்பது தெரியாமல் அக்காவும்.அத்தானும் ரொம்ப சந்தோசமாக இருப்பதை கண்டு சந்தோஷப்பட்டாள் ஷக்தி.ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு ஷக்தி கிலம்பிவிட அவர்கள் இருவரும் காரில் வீட்டிற்கு புறப்பட்டனர்.
காரில் போகும்போது தேங்ஸ் கார்த்திக்.எனக்கு கூட தோணல.நீ பண்ணிருக்க என்றாள் ராஜி.அவன் எதுக்கு என்பது போல ராஜியை பார்க்க எல்லாத்துக்கும்.சக்திக்கு ரிங் வாங்கி கொடுத்ததுக்கு.அப்பறம் அவளுக்கு சந்தேகம் வராத மாதிரி நடிச்சதுக்கும் என்றாள் ராஜி.
அதை கேட்டு சிரித்த கார்த்திக் சாரி என்றான்.அதற்கு ஏன் என்று ராஜி கேட்க இல்ல உன் பெர்மிஷன் இல்லாம உன் கைய புடிச்சி வளையல் போட்டு விட்டதுக்கு.உனக்கு வேற ஆசிட் பட்ட மாதிரி இருந்துருக்கும்.அதனால தான் சாரி சொன்னேன்.அப்புறம் நான் யாரையும் இம்ப்ரெஸ் பண்றதுக்காக இதை பண்ணல.அவளை நிஜமாவே என் தங்கச்சியாத்தான் நினைக்குறேன்னு சொன்னான் கார்த்திக்.
சுருக்கென வந்த அவனது வார்த்தையை கேட்ட ராஜி ஒருநிமிடம் அதிர்ந்து போனாள்.நாம் அன்று அவனிடம் பேசிய வார்த்தைகள் அவனை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறது என்பதை அப்போது தான் உணர்ந்தாள்.
வீட்டிற்கு செல்லும் வரை அவர்கள் இருவரும் அதோட பேசிகொள்ளவில்லை.பின்பு வீட்டிற்கு சென்ற பின் சாந்தாவிடம் நகைகளை காட்டி விட்டு ரூமிற்கு சென்று ட்ரெஸ் மாற்ற செல்லும் போது கண்ணாடி முன்பு ஒரு பார்ஸல் இருந்தது.அதை எடுத்து பார்த்த போது பார்ஸலின் மேல் சாரி.இட்ஸ் பார் யுவர் ஆஸம் குக்கிங்.என்று எழுதி இருந்தது.
அதை பார்த்துவிட்டு கார்த்திக்கை தேட அவன் பால்கணியில் நின்று கொண்டிருந்தான்.ஏற்கனவே கோவத்தில் இருந்த ராஜி அதை தூக்கி பெட்டில் வீசினாள்.
அவனிடம் பேசாமல் ரூம் கதவை சாத்திவிட்டு ட்ரெஸ் மாற்றிக்கொண்டால்.அவள் சென்றபின் தான் வாங்கி வைத்திருந்த பென்டென் செயின் கீழே கிடப்பதை பார்த்த கார்த்திக் அதை எடுத்து மீண்டும் கண்ணாடி முன்பு வைத்துவிட்டான்.அவர்கள் இருவருக்கும் இடையே அமைதியாக ஒரு பணிப்போர் ஆரம்பம் ஆனது.
இப்படியாக ஒருவாரம் சென்றிருக்க சாந்தாவும்.அவளது கணவனும் 20 நாட்களுக்கு காசி வரை சென்று வர முடிவெடுத்திருந்தனர்.கார்திக்த்தான் ட்ராவல்ஸ் மூலம் ஏற்பாடு செய்திருந்தான்.அன்று அவனுடைய அப்பாவும்,அம்மாவும் காலை கிளம்ப கார்த்திக்கும் ராஜியும் அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
அவர்கள் சென்ற பின் ராஜிக்கு பெரும் சோகமாக இருந்தது.கார்த்திக்கோட மூன்று வாரம் தனியாக இருக்கணும்.என்ன சண்டை வருமோ,பிரச்சனை வருமோனு நினைத்துக்கொண்டாள்.சரி எப்படியும் வாரத்தில் இரண்டு நாட்கள் தான் வீட்டில் இருப்பான்.மற்ற நாட்களில் இரவு மட்டும் தான்.சமாளித்து கொள்ளலாம் என்று சமாதானம் அடைந்தாள்.
இந்த ஒருவாரத்தில் அவள் அந்த செயினை தொடவே இல்லை.அது கண்ணாடி முன்பு கார்த்திக் வைத்திருந்ததை போலவே இருந்தது.தினமும் கார்த்திக் தலை சீவும் போதெல்லாம் அதை பார்ப்பான்.அவனும் அதை தொடமாட்டான்.
இப்படியாக இரண்டு நாட்கள் சென்றிருக்க அன்று காலைர் கார்த்திக் எழுந்திருக்கும் போது ராஜி இன்னும் தூங்கி கொண்டிருந்தாள்.அதை பார்த்த கார்த்திக் இவள் ஏன் இன்னும் எந்திருக்கவில்லைன்னு யோசித்தான்.சரி அப்பா,அம்மா வேற ஊர்ல இல்லை.அவுங்க இருந்தா ஏதாவது தப்பா நினைப்பாங்கன்னு சீக்கிரம் எந்திச்சிருப்பா.இப்ப அவுங்க இல்லாததனால தூங்கிட்டு இருக்கா.
திமிறுல உன்னை அடிச்சிக்க எவளாலும் முடியாதுடி குண்டாத்தி.தூங்குறத பாரு.குழந்தை தூங்குறமாதிரியே விரலை மடக்கி வச்சிருக்கா.சரி நம்ம அவளை சைட் அடிக்கிறத பாத்து அதுக்கு வேற ஏழரைய கூட்டினாலும் கூட்டிடுவா.எந்திருச்சு போடா கார்த்திக் என்று அவன் உள்மனம் சொல்ல வழக்கம் போல அவன்அவ பிரெஷ் ஆகிவிட்டு பேப்பர் படிக்க சென்றான்.
பால் பாக்கெட் எடுத்து காபி கலந்து அவனுக்கு ஒரு கப்பும்,ராஜிக்கு ஒரு கப்பும் எடுத்துக்கொண்டு ரூமிற்கு சென்றான்.ரூமில் ராஜி இன்னும் தூங்கி கொண்டிருக்க காபியை மூடி டேபிள் மீது வைத்துவிட்டு அவன் காபியை உறிஞ்ச தொடங்கினான்.
ஆஃபீஸிற்கு வேறு போக வேண்டி இருந்ததால் சாப்பிட ஏதாவது டிபன் செய்ய அவளை எழுப்பலாமா என்று யோசித்தான் கார்த்திக்.சிறிது நேர யோசனைக்கு பிறகு தூங்குகிறவளை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று எண்ணி அவனே களத்தில் இறங்கினான்.
அவன் வெளி இடங்களில் வேலை பார்த்த காலத்தில் சமையல் செய்து பழகியதால் நன்றாக சமைக்கவும் செய்வான்.கிட்சன் சென்று பிரிட்ஜில் மாவு எடுத்து இட்லி குக்கரில் இட்லி ஊற்றி அடுப்பில் வைத்தான்.பின் தக்காளி,வெங்காயம் நறுக்கி வைத்து விட்டு அதை மிக்ஸியில் அரைத்து சட்னி தயார் செய்தான்.
பின் தேங்காய் எடுத்து நறுக்கி,வேர்க்கடலை சேர்த்து அரைத்து தேங்காய் சட்னி தயார் செய்தான்.அதற்குள் இட்லி ரெடி ஆகி இருக்க அதை எடுத்து ஹாட்பாக்ஸில் வைத்து விட்டு குளிக்க சென்றான்.குளித்துவிட்டு வந்து சாப்பிட்டு ஆபிஸிற்கு கிளம்பினான்.
அப்போது ஒரு பேப்பரில் குட் மார்னிங்.பக்கத்துல கப்ல காபி இருக்கு.குடிச்சுக்கோ.அப்புறம் சாப்பாடு செய்ய வேண்டாம்.நான் சாப்பிட்டேன்.ஹாட் பாக்ஸில் உனக்கு எடுத்து வச்சிருக்கேன்.மறந்துடாம சாப்பிடு.என்மேல உள்ள கோவத்தை சாப்பாடு மேல காட்டாத.பாய் என்று எழுதி கண்ணாடி முன் வைத்து விட்டு கிளம்பி சென்றான்.
அவன் சென்ற 15 நிமிடம் கழித்து எழுந்த ராஜிக்கு கண் எல்லாம் ஒரே எரிச்சலாக இருந்தது.உடம்பு அனலாக கொதித்தது.எழுந்தவள் மணியை பார்க்க 9.15 ஆகி இருந்தது.ச்ச கார்த்திக்கு சாப்பாடு வேற செஞ்சு கொடுக்களையே என்று சொல்லிக்கொண்டு எழுந்தவள் அப்படியே தலையை பிடித்து கொண்டு உக்கார்ந்து கொண்டாள்.தலைவலி வேறு பயங்கரமாக இருந்தது.
சரி ஒரு காபி போட்டு குடிப்போம் என்று நினைத்துக்கொண்டு பிரெஷ் ஆகிவிட்டு கண்ணாடி பார்த்து முடியை கொண்டை போட்டாள் ராஜி.அப்போது அவன் கொடுத்த செயின் அப்படியே இருந்தது.அருகில் இருந்த பேப்பரை எடுத்து படித்து பார்த்தாள்.
5கிம் கூட சென்றிருக்காத கார்த்திக் மனம் முழுவதும் ராஜியையே நினைத்து கொண்டிருந்தது.இன்று ஏன் அவள் எழுந்திருக்கவில்லை.அவள் முகத்தை பார்த்தபோது சோர்வாக இருந்தது.ஒரு வேலை உடம்பு சரி இல்லாம இருக்குமோ.அம்மா வேற ஊர்ல இல்ல.கண்டிப்பா அப்படி இருந்தா நம்மகிட்ட சொல்லமாட்டா.என்ன பண்ணலாம் என்று யோசித்தான்.இன்னைக்கு ஆபிஸ் லீவ் போட வேண்டியது தான்.இல்லன்னா அவளை பற்றிஅ நினைத்துக்கொண்டு வேலை செய்ய முடியாது என்று முடிவெடுத்து ஆபிஸிற்கு போன் செய்து இன்பார்ம் செய்தான்.
அவன் எழுதியதை பார்த்தவள் இவன் எப்படி சாப்பாடு செய்தான் என்று நினைத்துக்கொண்டு காபியை எடுத்து குடித்தாள்.காபி வழக்கம் போல இல்லாமல் கார்த்திக் கலந்தது சற்று வித்யாசமாக இருந்தது அவளுக்கு.அதன் சுவை அவளுக்கு பிடித்திருந்தது.
கீழே சென்று சாப்பாடை பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.இட்லி சுட்டு ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்திருந்தான்.ரெண்டு வகை சட்னி செய்து வைத்திருந்தான்.இவனுக்கு எப்படி இந்த வேலை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்.காபி குடிச்சா கப்பை கூட எடுத்து தரமாட்டான்.இவ்ளோ பொறுமையா செஞ்சிருக்கான் என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு திடீரென வயிற்றை குமட்டிக்கொண்டு வாமிட் வந்தது.
கைகளால் வாயை பொத்திக்கொண்டு வாஷ் பேசின் சென்று வாமிட் எடுத்தாள் ராஜி.சிறிது நேரத்தில் களைப்படைந்த ராஜிக்கு டாக்டரிடம் சென்றால் நல்லா இருக்கும் என்று இருந்தது.
வரும் வழியில் பாமிலி டாக்டரை பார்த்து அவரை அழைத்து வந்தான் கார்த்திக்.
யாரை துணைக்கு கூப்பிட என்று யோசித்து கொண்டிருந்தாள்.எக்காரணத்தை கொண்டும் கார்த்திக்கிடம் உதவி கேட்க கூடாது என்று உறுதியாக இருந்தாள் ராஜி.உடல் சோர்வடையும் போது நமது மனமும் சோர்வடையும்.அந்த நேரம் உடல் சொல்வதை மனம் கேட்கும்.பேசாமல் கார்த்திகை கூப்பிட முடிவெடுத்தால்.அதற்கு முன் மகேஷிற்கு கால் செய்து கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்ல சொல்லிவிடலாம்.நாம் பேச வேண்டாம் என்று நினைத்தாள்.
இப்படியாக யோசித்து கொண்டிருந்தவளுக்கு தன்னுடைய இயலாமையை நினைத்து அழுகையாக வந்தது.அந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடிக்க அங்கு டோரை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அங்கு கார்த்திக் டாக்டருடன் நின்று கொண்டிருந்தான்.வீட்டில் சோபாவில் ராஜி இருக்க டாக்டர் அவளை செக் செய்துவிட்டு காய்ச்சல் மட்டும்தான்.பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல.டேப்லெட் சாப்பிட்ட சரி ஆகிடும்.நான் ரெண்டு நாளைக்கு டேப்லெட் தரேன் அதை கொடுங்க.கேக்கலான ஹொஸ்பிடல் கூட்டிட்டு வாங்கன்னு சொன்னார்.
ராஜியை பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக் உடம்பு சரி இல்லாததை கூட என்கிட்ட சொல்ல மாட்டியா.இப்ப உண்ண எப்படி கோத்து விடுறேன் பாருன்னு அவளை பார்த்து தலை aஆட்டிக்கொண்டு டாக்டர் வேணும்னா ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கிடலாமா.எனக்கு என்னமோ பயமா இருக்குன்னு சொன்னான்.
உடனே பதறிய ராஜி அய்யயோ அதெல்லாம் வேண்டாம் டாக்டர்.டேப்லெட் மட்டும் போதும்.ப்ளீஸ்ன்னு சொன்னால் ராஜி.சிறு வயதில் இருந்தே இன்ஜெக்ஷன் என்றால் ராஜிக்கு பயம்.அதனாலே உடம்பு சரி இல்லை என்றால் ஊசி போடாமல் டேப்லெட் மூலமே குணப்படுத்தும் டாக்ட்டரிடம் செல்வாள்.கார்த்திக்கை பார்த்து கோத்து விடுறியா.உன்னை என்ன பன்றேன் பாரு லூசு என்று அவளும் பதிலுக்கு தலை aஆட்டினாள் ராஜி.
என்னமா இதுக்கு போய் பயப்படற.சின்ன குழந்தையாட்டும்.உனக்கு உடம்பு சரி இல்லனா உன் ஹஸ்பேண்ட் வாக்கிங் போய்ட்டு திரும்ப வந்துட்டு இருந்தவனை கூட்டிட்டு வந்துருக்கான்.நீ என்னடான்னா சின்ன ஊசிக்கு போய் பயப்படுற.இப்போ ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கோ.கேக்கலன்னா அப்புறம் பாத்துக்கலாம்.கை காட்டுங்க என்று இன்ஜெக்ஷனை நீட்டினார்.
கை நீட்டி தலையை திருப்பி கொண்ட ராஜின் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.ஊசியை லேசாக வைக்கும் போதே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்றால் ராஜி.என்னமா இன்னும் போடராஜி.என்னமா இன்னும் போடவே இல்லை.அதுக்குள்ள இப்படி கத்துற.என்ன கார்த்திக் வீட்டம்மா பயந்த சுபாவம் போலன்னு கேட்டார் டாக்ட்டர்.
கார்த்திக் சிரித்து கொண்டு ராஜியை பார்க்க குழந்தை போல இருந்தாள்.ஊசிஓ போட்டு முடித்த பின் டாக்ட்டர் சென்று விட உனக்கு என்ன திமிரா.ஊசி எல்லாம் போட்டு விட சொல்ற.உனக்கு ஒரு நாள் இருக்கு பாருன்னு சொன்னாள் ராஜி.
டைனிங் டேபிளில் பிளேட்டில் மூன்று இட்லி வைத்து கொஞ்சம் சட்னி வைத்தான் கார்த்திக்.இவன் சாப்பாடு வைத்தால் சாப்பிட கூடாது.நாமே போட்டு சாப்பிட வேண்டியது தான் என்று ராஜி அதை கண்டுகொள்ளாமல் இருந்தாள்.
ஆனால் அவன் சாப்பாடு வைத்து 5 நிமிடம் ஆகியும் அவன் வராததை கண்டுவ கார்த்திக்கை பார்க்க அவன் சாப்பாடை காலி செய்து கொண்டிருந்தான்.