அதை பார்த்த ராஜி குறும்பாக சிரித்துக்கொண்டு அவனை நோக்கி ம்ம்க்கும் என்று இருமினாள்.அதை கேட்ட கார்த்திக் அவளை பார்க்க நேத்து ஓவர் குடியோ.செம ஹாங்கோவேர் போல.மெதுவா மெதுவா குடின்னு சொன்னாள் ராஜி.
சிறிதுநேரம் கழித்து பீரா,ஹாட்டான்னு கேட்டாள் ராஜி.இந்த முறை அவனுக்கு புரை ஏறிவிட்டது.அவன் இருமிக்கொண்டிருக்க அவன் தலையில் தட்டிவிட்டாள் ராஜி.அவன் முழுவதுமாக குடித்து முடித்த பின்.ஒரு நிமிஷம்.நீ குடி இல்ல.குடிக்காம போ.எனக்கு அதை பற்றி கவலை இல்ல.ஆனால் குடிச்சிட்டு இந்த ரூமுக்குள்ள வரக்கூடாது.அப்படியே தூங்கணும்னா ரூமை விட்டு வெளியில் படுத்துக்கோ.புரியுதான்னு சொன்னாள் ராஜி.
அவன் பதில் பேசாமல் இவளிடம் தப்பித்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே வெளியேறினான்.பின் அவன் அம்மாவிடம் வந்து அம்மா இன்னைக்கு சிக்கென் வாங்கிட்டு வரவா.ரொம்ப நாள் ஆச்சு சாப்பிட்டுன்னு சொன்னான் கார்த்திக். நல்
நானே சொல்லணும்னு நினைச்சேன்.நீயே சொல்லிட்ட.வீட்டுக்கு வந்த பொண்ணும் ஒரே காய்கறியாதான் சாப்பிடுது அதனால வாங்கிட்டு வாப்பான்னு சொன்னால் சாந்தா.
பின் சிக்கென் வாங்க அவன் கடைக்கு சென்றான்.அத்தையிடம் சென்ற ராஜி அத்தை எனக்கு நான் வெஜ்லாம் செய்ய தெரியாது அத்தைன்னு சொன்னாள்.பரவல்லம்மா.நான் சொல்லி தரேன் நீ கூட இருந்து கத்துக்கோனு சொன்னாள் சாந்தா.
அன்று ராஜியின் கைமணத்தில் சாப்பாடு நன்றாக வந்திருக்க ஒருபிடி பிடித்தான் கார்த்திக்.அம்மாவிடம் சென்று ம்மா சாப்பாடு சூப்பர்.செஞ்ச கைக்கு மோதிரம் போடணும்னு சொன்னான் கார்த்திக்.அப்படினா உன் பொண்டாட்டிக்கு போடு.அவதான் இன்னைக்கு என்கிட்ட கேட்டு செஞ்சான்னு சொன்னாள் சாந்தா.
அவன் ராஜியை பார்க்க அவள் சாந்தாவை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்.அப்போதுதான் அவன் ஒன்றை கவனித்தான்.அவளுக்கு கல்யாணத்தன்று அவள் அம்மாவிடம் சீதனம் ஒன்றும் வேண்டாம் என்றும் நகை போடவேண்டாம் என்றும் சொல்லி இருந்தான்.அவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் என் பொண்டாட்டிக்கு நான் வாங்கிப்போட்டு அழகு பார்ப்பேன்.நான் சம்பாதிச்ச காசுல அவளுக்கு நகை வாங்கித்தரணும்னு ஆசைப்படறேன் அதனால வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்திருந்தான் கார்த்திக்.
அதற்கு பின் அதை மறந்திருந்த கார்த்திக்க்கு இப்போது தான் சொன்னது நியாபகம் வந்தது.சரிம்மா அவளும் நகை இல்லாம தான் இருக்கா.அதனால நாளைக்கு எல்லோரும் நகை கடைக்கு போறோம்.அவளுக்கு என்ன பிடிச்சிருக்கோ வாங்கிக்க சொல்லுங்கன்னு சொன்னான் கார்த்திக்.
சரிப்பா.கேட்டுக்கிட்டியம்மா.போகணுமாம் என்று கிண்டல் செய்தாள் சாந்தா.மறுநாள் கார்த்திக்கும் ராஜியும் நகை வாங்க காரில் சென்றனர்.போகும் வழியில் ராஜியின் தங்கை சக்தியையும் கூட்டி சென்றனர்.நகை கடைக்கு சென்ற பின் நகைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு நகைகளையும் ராஜிக்கு கழுத்தில் வைத்து பார்க்க எல்லாமே அவளுக்கு அழகாக இருந்தது.பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப நகைகளை எடுத்து வைக்க சொல்லிவிட்டு கார்த்திக் மோதிரம் பார்க்க சென்றான்.அப்போது ஒரு செக்ஷனில் பென்டென் ஒரு செயினுடன் இருந்தது.அதை பார்த்த கார்த்திக் சேல்ஸ்மேனிடம் சென்று அதை வாங்கி பார்த்தான்.பிளாட்டினத்தால் மயில் இறகு போன்று அழகாக டிசைன் செய்யபட்டு தங்கசெயினில் மாட்டப்பட்டு இருந்தது.அதை பார்த்ததும் அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது.
அதை ராஜி அணிந்திருப்பது போல கற்பனை செய்து பார்த்தான்.லூஸ் ஹேர் விட்டு பச்சை கலர் சேலை கட்டி அந்த பென்டென் அணிந்து நெற்றியில் சிறிய போட்டு ஒன்று வைத்து,அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் ராஜி.திடீரென கார்த்திக்.கார்த்திக் என்று அவனை பின்னால் இருந்து கூப்பிட நினைவுக்கு வந்தான் கார்த்திக்.ஹாம் சொல்லு சொல்லு என்று அவன் தினற நாங்க ரெண்டு டிசைன் பாத்திருக்கோம்நீ வந்து எது நல்லா இருக்குன்னு சொல்லுன்னு சொன்னால் ராஜி.
ரெண்டுமே பில் போட சொல்லுங்க.நான் இப்ப வந்துடுறேன்னு சொன்னான் கார்த்திக்.அவர்கள் போன பின் மறைத்து வந்திருந்த பெண்டெனை கொண்டு சென்று பில் போட்டு வாங்கினான் கார்த்திக்.
பின் ராஜிக்கு இரண்டு செட் வளையல்,சக்திக்கு மோதிரம் ஒன்று பார்த்து அதையும் பில் போட்டு வாங்கினான்.அதை அவர்களுக்கு தெரியாமல் காரில் கொண்டு வைத்தான்.பின் அவர்கள் செலெக்ட் செய்த நெக்லஸையும் வாங்கிக்கொண்டு செல்ல மதியம் ஆகி இருந்தது.
ரெஸ்டாரண்டிற்கு சென்று சாப்பிட சென்றனர்.அப்போது என்ன அத்தான்.பொண்டாட்டிக்கு நகை எல்லாம் போட்டு அழகு பாக்குறீங்க.பாத்து ரொம்ப நகை போட்டு கழுத்து சுளுக்கிக்க போகுது என்று சொன்னால் சக்தி.ஹேய் என்ன எம்புருஷண கிண்டல் பண்றியா.எம்புருஷன் எனக்கு வாங்கித்தராறு.உனக்கு என்னடி.வாலுன்னு சொன்னால் ராஜி.
இங்க பாருடா புருஷன சொன்னா பொண்டாட்டிக்கு கோவம் வரத.இப்படி தெரிஞ்சுருந்தா நானே உன்னை கல்யாணம் பண்ணிருப்பேன் அத்தான்.இட்ஸ் டூ லேட்.எப்படியோ நல
இங்க பாருடா புருஷன சொன்னா பொண்டாட்டிக்கு கோவம் வரத.இப்படி தெரிஞ்சுருந்தா நானே உன்னை கல்யாணம் பண்ணிருப்பேன் அத்தான்.இட்ஸ் டூ லேட்.எப்படியோ நல்லா இருங்க என்று சொன்னால் சக்தி.இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்ல.இப்பவும் உன்னை கல்யாணம் பண்ணிக்க ரெடி தான்.உங்க அக்காவுக்கு ஓகேவான்னு கேளு என்றான் கார்த்திக்.
பாத்தியாக்கா.உன் புருஷன் என்ன சைட் அடிக்கிறத.பட் நான் அப்படிலாம் பண்ண மாட்டேன்க்கா.போ அத்தான் எங்க அக்காவுக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன் என்று சொன்னால் சக்தி.
அடி பாவி இப்படி பல்டி அடிச்சிட்டியேடி.ஹேய் நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்மா.இவ நம்ம ரெண்டு பெருக்கும் சண்டை இழுத்து விடுறா ராஜிnன்னு சொன்னான் கார்த்திக்.அவனை முறைத்து கொண்டிருந்த ராஜி ஹேய் வாலு நல்லா கோத்துவிடுரடி.ஆனால் என்புருஷண பத்தி எனக்கு நல்லா தெரியும்.பேசாம சாப்பிடுன்னு சொன்னால் ராஜி.
அய்யோன் என்ன அக்கா நீ.கோவத்துல அத்தானை திட்டுவேன்னு பார்த்த இப்படி புஸ்ஸுன்னு ஆக்கிட்டியே நீ என்றாள் சக்தி.பின் மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.கைகழுவி விட்டு டேபிளில் இருந்த சக்தியை கண்களை மூட சொன்னான் கார்த்திக். என்ன பண்ற கார்த்திக்.ஏன் அவளை என்று ராஜி சொல்லி முடிக்கும் முன் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.பேசாமபேசாம கண்ணை மட்டும் மூடுங்க ரெண்டு பேரும்ன்னு ராஜியிடம் சொன்னான் கார்த்திக்.பி ராஜியின் கைகளை பிடித்து அவளுக்கு வாங்கி வைத்திருந்த வளையல்களை அவளுக்கு மாட்டிவிட்டான்.ராஜி கண்களை திறக்க முயல ஷ்ஷ்ஷ் கண்ணை திறக்க சொன்னான் கார்த்திக்.பின் மோதிரத்தை எடுத்து சக்தி விரலில் மாட்டிவிட்டான்.
பின் இருவரும் கண்களை திறந்து பார்க்க இருவருக்கும் அதை பார்த்து இன்ப அதிர்ச்சியாக இருந்தது.அத்தான் எனக்கு எதுக்கு மோதிரம் எல்லாம்.அக்காக்கு மட்டும் போதாதா.அம்மாக்கு தெரிஞ்சா திட்டும்.அதனால வேண்டாம் அத்தான்ஏ என்றாள் சக்தி.
ஒய் அதெல்லாம் ஒன்னும் சொல்லாது.என் தங்கச்சிக்கு நான் எடுத்து கொடுக்குறேன்ல.அதே மாதிரிதான் இதுவும்.அப்படி இல்லனா உங்க அக்கா எடுத்து கொடுத்ததா சொல்லு ஒன்னும் சொல்லாதுன்னு சொன்னான் கார்த்திக்.இல்ல அத்தான் அது வந்து என்று சக்தி இழுக்க ஹேய் அம்மான் ஒன்னும் சொல்லாது அப்படியே எதுவும் சொன்னாலும் நான் அம்மாகிட்ட பேசிக்கிடுறேன்னு சொன்னால் ராஜி.
எதுக்குங்க இப்ப வளையல் எல்லாம்.காச போட்டு வேஸ்டா செலவு பண்றிங்கன்னு கார்த்திக்கிடம் kடீ
கேட்டாள் ராஜி.ஹேய் என்னப்பா.என் பொண்டாட்டிக்கு நான் செலவு செய்றேன்.இதுல என்ன வேஸ்டா போகுது.நீ பீல் பண்ணிக்காத.சரி ஐஸ்கிரீம் சாப்பிடலாமா.என்று சொல்லி விட்டு பேரர் மூணு ஐஸ் கிரீம் கொடுங்கன்னு ஆர்டர் செய்தான் கார்த்திக்