கல்யாண மண்டபத்தில் இருக்கும் அனைவரும் சந்தோசமாக இருந்தார்கள்.அனைவரின் முகத்திலும் கல்யாணத்திற்கான மகிழ்ச்சி காணபட்டது.
ஆனால் ராஜியின் முகத்தில் மட்டும் ஏனோ வெறுப்பு,கவலை,துக்கம்,சோகம்.அவளை கண்ட அவளது அம்மா லட்ச்மிக்கு பொண்ணு ஏதோ நம்மள விட்டு பிரிய போறோம்னு கவலையா இருக்காணு நினைசுகிட்டாங்க.
மணமகன் கார்த்திக்கோ தான் சிறுவயதில் இருந்து காதலித்த.தனக்கு கிடைக்க மாட்டாள் என்று நினைத்த பெண் இன்று மனைவியாய் வர போகிறாள் என்று சந்தொசபட்டலும் ராஜியின் சோகத்திற்கு காரணம் அவனும் ராஜியும் அறிந்ததவர்கலாய்.
அய்யர் மந்திரம் சொல்லி கெட்டிமேளம் முழங்க ராஜியின் கழுத்தில் தாலி கட்டி அவளை தனதக்கினான்.அந்த மணித்துளியில் ராஜியின் மனதில் இனிமேல் என்னுடன் வாழ போகும் ஒவ்வொரு நொடியும் உன்னை காயபடுத்துவேன் என்று நினைத்து கொண்டால்.பின்பு கார்த்திக்கின் தங்கை லீலா மைனிக்கு தாலி முடிச்சு போட அனைவர் முகத்திலும் கல்யாணம் முடிந்த சந்தோசம்.பின்பு பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.
கார்த்திகோட குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம்.அவனோட அப்பா கூட பிறந்தவங்க 4 தங்கை.2 தம்பி.முதல் தங்கைக்கு மூன்று பெண்கள்.ரெண்டாவது தங்கைக்கு மூன்று பெண்கள்.நான்காவது தங்கைக்கு மூன்று பசங்க.நாலாவது தங்கைக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.
ரெண்டாவது தங்கையின் ரெண்டாவது பெண் தான் ராஜி @ ராஜ லக்ஷ்மி.கார்த்திக்கிற்கும் அவளுக்கும் மூன்று வருட வித்யாசம்.சிறு வயதில் இருந்தே கார்த்திக் அப்பா அம்மா கூட இருந்து வளந்தத விட பாட்டி.தாத்தா.அத்தை.சித்தப்பா கூட இருந்து வளந்தது தான் அதிகம்.அதனால கார்த்திக்கிற்கு எப்போதும் அப்பா அம்மாவை விட அத்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்.ஆனால் முதல் அத்தையை அவனுக்கு பிடிக்காது.அதனால் அவர்கள் குடும்பத்துடன் அதிகமாக பேச மாட்டன்.மற்ற மூவரும் கார்த்திக்கை தனது மூத்த பிள்ளை போல பார்க்க தொடங்கினர்
லக்ஷ்மியின் மூத்த மகள் பிரியா.கார்த்திகை விட ஒறு வயது மூத்தவள்.இருவரும் நல்ல நண்பர்கள்.மூன்றமவள் சக்தி.இவளை சீண்டி சண்டை போடுவது கார்த்திக்கிற்கு அலாதி ப்ரியம்.
பின்பு திருமண சடங்குகள் இனிதே நிறைவேற கார்த்திக்கின் அறையில் சாந்தி மூஹூர்ததிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.கார்த்திக் அறையில் காத்திருக்க ராஜி கதவை திறந்து அறையினுள் நுழைந்தால்.கார்த்திக் ஒன்றும் பேசாமல் சோபாவில் அமைதியாக இருக்க மெத்தையில் அவள் அமர்ந்தால்.சிறிது நேர மௌனத்திற்கு பிறகு கார்த்திக் ஏதோ சொல்ல எத்தனிக்க ராஜியின் கண்களில் இருந்து நீர் கசிவதை உணர்ந்தான்.
அவளுடைய மொத்த கோவமும் அழுகையாக மாற கோவத்தில் மாலை அலங்காரத்தை பிய்த்து எறிந்தால்.அவளுடைய செய்கையை பார்த்த கார்த்திக் அவனாகவே ஆரம்பித்தான்.
எனக்கு நல்லா தெரியும் உனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பம் இல்லன்னு.நா உனக்கு பண்ணின துரோகத்துக்கு என்மேல எவ்ளோ வெறுப்பு இருக்குனும் எனக்கு தெரியும்.உனக்கு தாலி கட்டின அடுத்த நொடியே என்ன சந்தோசமா இருக்க விட கூடாதுன்னு நீ மனசுல நினைச்சுருப்ப.உலகத்துக்கு வேணும்னா நாம புருஷன் பொண்டாட்டி.இந்த நாலு சுவத்துக்குள நீ யாரோ.நான் யாரோ.என் நிழல் கூட உன்மேல படாது.என்ன நீ எவ்ளோ torture பண்ணனும்னு நினைக்றியோ பண்ணிக்கோ.அப்ப ஏன் இந்த கல்யாணம்னு நினைக்கிறியா.நீ எனக்கு கிடைக்கவே மாட்டேனு நினைச்சேன்.பட் உன்கூட சந்தோசமா இருக்காட்டாலும் உன்கூட இருந்தா போதும்.
எனைக்கவது ஒரு நாள் உன் கோவம் குறையும் அன்னைக்கு வரைக்கும் நா வெயிட் பண்றேன்.ப்ளீஸ் அழாம தூங்கு.நா சோபால படுதுகிட்றேன்.குட் நைட்.என்று கூறி முடித்தான்.
இதை கேட்ட ராஜிக்கோ ஆச்சர்யம்.என்ன இது நாம் மனதில் நினைத்ததை நாம் சொல்ல வந்ததை இவன் சொல்லிட்டு போறான் என்று.ஆனால் அவனை வாழ் நாள் முழுவதும் அவனை காயபடுத்த வேண்டும் என நினைத்து கொண்டு கண் மூடி தூங்கி போனால்.
மறுநாள் காலை 7 மணியளவில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க கண் விழித்த ராஜிக்கும் கார்த்திக்கிற்கும் நேற்று தங்களுக்கு முதல் இரவு என்பதை உணர சிறிது நேரம் தேவைபட்டது.
உடனே ராஜி சேலையை கசக்கி விட்டு நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்துவிட்டு தலையில் இருந்த பூவை உதிர்த்து விட்டால்.கதவு அருகே சென்று கதவை திறக்கும் சமயம் தன புடவை முந்தியை சரி செய்வது போல் நடித்தால்.
வெளியே கார்த்திக்கின் அம்மா சாந்தா அவளை பார்த்து சிரித்து கொண்டு சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வாமா.எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருகங்கனு சொல்லிட்டு உன் புருசனையும் வர சொல்லுனு சொல்லிட்டு போனாங்க.
அதற்குள் கார்த்திக் பாத்ரூம் சென்று குளித்து முடித்து வெளியே வந்தான்.உடனே ராஜி ஒரு டவெலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றால்.அங்கு சென்ற உடன் தான் தெரிந்தது.தன்னுடைய ப்ரெஷ்.சோப்பு.ஷாம்பூ எதுவும் இங்க எப்படி இருக்கும்னு.இந்த கோலத்துல அம்மாட்டையும் கேக்க முடியாதுன்னு நினைச்சுட்டு கண்ணாடி முன்னாடி நின்னுட்டு இருக்கும் போது ஷெல்ப்ல புது ப்ரெஷ்.சோப்பு.ஷாம்பூ எல்லாம் இருந்துச்சு.brand கூட எல்லாம் அவ யூஸ் பண்றதா இருந்துச்சு.
இது யாரோட வேலையா இருக்கும்னு குழப்பத்துல குளிச்சிட்டு வெளிய வந்தாள்.அவள் டிரஸ் மாத்தும் வரை கார்த்திக் பக்கத்து ரூமில் இருந்து டிவி பார்த்து கொண்டிருந்தான்.கதவை திறந்து வெளியே வந்த ராஜியை பார்த்த கார்த்திக் ஒரு நிமிடத்தில் உலகையே மறந்தான்.
தனக்கு பிடித்த பச்சை நிறத்தில் அழகான காட்டன் சேலையில் ப்ரீ ஹேர் விட்டுஎ ஏஞ்செல் போல அவனை கடந்து சென்றால்.அங்கு டிவியில் ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவெ உன் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே என பாடல் ஒலித்து கொண்டிருந்தது.
கீழே சென்ற ராஜியை அழைத்த அவளுடைய அம்மா.அக்கா.சித்தி எல்லோரும் அவளை கிண்டல் செய்ய அவளும் ஒருவாறு சமாளித்தாள்.பின்பு கார்த்திக்கிற்கு காபி கொடுக்க சொல்ல அவள் காபி உடன் அவனைகே பார்க்க சென்றால்.அவனிடம் சென்று காபி டம்ளரை டீபாயில் வைக்க அதை எடுத்து கொண்டான்.
“ எதுக்காக இப்படி பண்ற.நேத்து என்ன பேச விடாம எல்லாத்தையும் நீ பேசிட்டா நீ நல்லவன்னு நினைக்காத.என்ன பொறுத்த வரைக்கும் என் வாழ்க்கைய சீரளிச்சவன் நீ.என்ன நம்ப வச்சு ஏமாத்திணவன்.இன்னைக்கு பாத்ரூம்ல திங்க்ஸ் வச்சமாதிரி எனக்கு ஹெல்ப் பண்றேன்ங்கற பேருல என்ன நெருங்க நினைக்காத.அப்புறம் அசிங்கமா ஆகிடும்” .என்று சொல்லி விட்டு கண்களின் ஓரம் துளிர்த்த நீரை துடைத்தாள்.
இதை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த கார்த்திக் சிரித்து கொண்டே எழுந்து கீழ போகலாமா எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்கனு சொல்லிட்டு சென்றான்.
அவன் சென்ற உடன் எல்லாரும் இருக்கும் வரைக்காவது இவனுடன் அன்னியோன்யமாக இருப்பது போல நடிக்க வேண்டும் என நினைத்து கொண்டாள்.
வீட்டில் அனைவரும் கேலியும் சிரிப்புமாக கார்த்திக்கை சீண்ட சமாளித்தான்.பின்பு மதியம் வரை இப்படியே செல்ல மதிய உணவிற்கு பின் கார்த்திக் அவனுடைய அத்தை.அத்தை குழந்தைகள் எல்லாரும் இருந்து பேசி கொண்டிருந்தனர்.